கூகுள் ஸ்ட்ரீட் வியூ சேவை இந்தியாவில் இன்று முதல்!!
இன்டர்நெட் உலகை ஆளும் ஒரு மிகப்பபெரிய சக்தி கூகுள் எனலாம். கூகுள் நிறுவனம் ஜிமெயில், கூகுள் மேப்ஸ். யூடியுப் என பல சேவைகளை வழங்கி வருகிறது. கூகுளின் சேவைகளில் ஒன்றான கூகுள் ஸ்ட்ரீட் வியூ சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
இந்த சேவை USல் முதலில் தொடங்கபட்டாலும் பின்னர் படிப்படியாக உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஒரு இடத்தின் அல்லது தெருவின் விர்ச்சுவல் படங்களை கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் பார்க்கலாம்.

இன்று முதல் இந்த சேவை இந்தியாவிலும் தொடங்க உள்ளது. 2011லே பெங்களூரில் இந்த சேவை தொடங்கபட இருந்து சில காரணங்களால் இந்த சேவையை அப்பொழுது முழுவதுமாக செயல்படுத்த முடியவில்லை.
இப்பொழுதும் இந்த சேவை அனைத்து நகரங்களின் தெருக்களுக்கும் மற்றும் இடங்களுக்கும் தொடங்கபடவில்லை. முதல் கட்டமாக இந்தியாவில் 100 முக்கியமான நினைவுசின்னங்களின் விர்ச்சுவல் படங்களை இந்தி கூகுள் ஸ்ட்ரீட் வழங்க உள்ளது. நீங்கள் கம்பியூட்டரின் மூலம் இந்த 100 நினைவுசின்னங்களின் படங்களை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications