இந்தாண்டு இரண்டு நெக்சஸ் போன் வெளியாகும்

Posted By:

நெக்சஸ் 6 மற்றும் நெக்சஸ் 9 கருவிகளை தொடர்ந்து கூகுள் நிறுவனம் வெளியிட இருக்கும் கருவிகளுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில் இது குறித்த செய்திகள் வெளியாக துவங்கி விட்டது என்று தான் கூற வேண்டும். கூகுள் நிறுவனத்தின் அடுத்த கருவிகள் வழக்கம் போல இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்றே கூறப்படுகின்றது.

ஆப்பிள் உருவான விதம் - புகைப்படங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்நியாக்

கூகுள் நிறுவனம் இரண்டு வித நெக்சஸ் கருவிகளுக்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இவை எல்ஜி மற்றும் ஹூவாய் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான தகவல்களை உண்மையாகும் பட்சத்தில் இந்தாண்டு இரு நெக்சஸ் கருவிகளை எதிர்பார்க்கலாம். இதோடு இந்தாண்டு நெக்சஸ் டேப்ளெட் ஏதும் வெளியாகாது என்றும் கூறப்படுகின்றது.

இந்தாண்டு இரண்டு நெக்சஸ் போன் வெளியாகும்

எல்ஜி நிறுவனம் தயாரிக்கும் நெக்சஸ் கருவி தற்சமயம் ஏங்களர் என்று அழைக்கப்படுகின்றது, இந்த கருவியில் 5.2 இன்ச் டிஸ்ப்ளே, 2700 எம்ஏஎஹ் பேட்டரி மற்றும் ஹெக்ஸாகோர் ஸ்னாப்டிராகன் 808 எஸ்ஓசி இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

வியப்பூட்டும் விசித்திரமான ஸ்மார்ட்போன் அக்சஸரீஸ்

ஹூவாய் தயாரிக்கும் நெக்சஸ் ஸ்மார்ட்போன் புல்ஹெட் என அழைக்கப்படுவதோடு 5.7 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 எஸ்ஓசி மற்றும் 3500 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

English summary
Google is said to be working on two Nexus smartphones, of which the smaller is being manufactured by LG, and the larger by Huawei.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot