ஜூன் 24: மலிவு விலை ஜியோ 5ஜி போன் மற்றும் லேப்டாப்? அம்பானியின் பலே திட்டம்.!

|

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான ஏஜிஎம் பொது நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் 44-வது ஆண்டு பொது கூட்டமாகும். குறிப்பாக இந்த ஏஜிஎம் பொது நிகழ்வு ஜூன் 24 ஆம் தேதி 2 மணிக்கு தொடங்கும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏஜிஎம் பொது நிகழ்வில் 5ஜி

குறிப்பாக ஏஜிஎம் பொது நிகழ்வில் 5ஜி சேவையின் வெளியீட்டு தேதி, மலிவு விலை கூகுள்-ஜியோ 5ஜி போன், ஜியோலேப்டாப் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மலிவு விலையில் கூகுள்-ஜியோ போன் வெளிவரும் என்பதால்அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஜியோ-கூகுள் 5ஜி போன்

ஜியோ-கூகுள் 5ஜி போன்

குறிப்பாக ஜியோ-கூகுள் நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்யும் 5ஜி போன் ஆனது ரூ.5000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளது. கண்டிப்பாக 2ஜி பீச்சர் போன் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி போன் மாடலை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அட., இது எல்லாத்துக்கும் தள்ளுபடிங்க- சோனி ஆடியோ சாதனம் வாங்க சரியான நேரம்: உலக இசை தின சலுகை!அட., இது எல்லாத்துக்கும் தள்ளுபடிங்க- சோனி ஆடியோ சாதனம் வாங்க சரியான நேரம்: உலக இசை தின சலுகை!

கூகுள்-ஜியோ நிறுவனங்களின் 5

அதேபோல் கூகுள்-ஜியோ நிறுவனங்களின் 5ஜி போன் தனிப்பயனாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாதனம் குறைந்த ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அடேங்கப்பா., சிரித்தால் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதி: ஊழியர்களை உற்சாகப்படுத்தும் நிறுவனம்.!அடேங்கப்பா., சிரித்தால் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதி: ஊழியர்களை உற்சாகப்படுத்தும் நிறுவனம்.!

றுவனம் குவால்காம்,

கடந்த ஆண்டு ஜியோ நிறுவனம் குவால்காம், இன்டெல், பேஸ்புக் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டது. எனவே குவால்காம் கூட்டாண்மை மூலம் ஜியோ நாட்டில் முக்கியமான 5ஜி டூல்களை உற்பத்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் கூகுள்-ஜியோ 5ஜி போனில் குவால்காம் நிறுவனத்தின் சிப்செட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த கூகுள்-ஜியோ போனுக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி சிப்செட் வழங்படும் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சாம்சங் இப்படி செய்யுமென்று ஆப்பிள் கூட நினைக்கல.. நேக்கா ரூட் போடும் சாம்சங்.. எதற்குத் தெரியுமா?சாம்சங் இப்படி செய்யுமென்று ஆப்பிள் கூட நினைக்கல.. நேக்கா ரூட் போடும் சாம்சங்.. எதற்குத் தெரியுமா?

ஜியோபுக் லேப்டாப்

ஜியோபுக் லேப்டாப்

அண்மையில் ஜியோபுக் லேப்டாப் குறித்த தகவல் ஒரு புகைப்படத்துடன் லீக் ஆனது. மேலும் இந்த ஜியோ லேப்டாப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

சிஇஓ டூ தலைவர்., விண்டோஸ் 10 டூ விண்டோஸ் 11- மைக்ரோசாஃப்ட் சத்யா நாதெள்ளா முன்னேற்றம்!சிஇஓ டூ தலைவர்., விண்டோஸ் 10 டூ விண்டோஸ் 11- மைக்ரோசாஃப்ட் சத்யா நாதெள்ளா முன்னேற்றம்!

லேப்டாப் மாடல் 1,366x768 பிக்சல்கள்

ஜியோ லேப்டாப் மாடல் 1,366x768 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளே வடிமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஜியோ லேப்டாப் மாடல் வெளிவரும். ஜியோபுதிய லேப்டாப் சாதனம் JioOS என அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு அடிப்படையாகக் கொண்ட இயங்குதள கட்டமைப்பைக் கொண்டது என்று கூறப்படுகிறது.
ஜியோபுக் லேப்டாப் சாதனத்தை உருவாக்குவதற்காக ஜியோ நிறுவனம் சீன உற்பத்தியாளர் புளூபேங்க் கம்யூனிகேஷன்
டெக்னாலஜியுடன் ஜியோ கூட்டு சேர்ந்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google Jio 5G Phone Price and Release Date: Full Details.: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X