செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங்கை பயன்படுத்தும் கூகுள்! எதற்காக?

கூகுளின் அதிகாரப்பூர்வ ப்ளாக் பதிவில், பல்வேறு எடுத்துக்காட்டுகளை பயன்படுத்தி பல பேட்டன்களை தேர்ந்தெடுக்க மென்பொருள் அமைப்பை பழக்கியுள்ளதாக கூறியுள்ளது.

|

கூகுளின் ஐ/ஓ 2018 மாநாடு வெகுவிரைவில் துவங்கவுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தனது செயலிகள், சேவைகள் மற்றும் மாற்றி வடிவமைக்கப்பட்ட தளங்களை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி எப்படி மேம்படுத்தப் போகிறது என கூகுள் நிறுவனம் பயனர்கள் அறிந்துகொள்ள ப்ளாக்கில் பதிவிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங்கை பயன்படுத்தும் கூகுள்!


கூகுளின் அதிகாரப்பூர்வ ப்ளாக் பதிவில், பல்வேறு எடுத்துக்காட்டுகளை பயன்படுத்தி பல பேட்டன்களை தேர்ந்தெடுக்க மென்பொருள் அமைப்பை பழக்கியுள்ளதாக கூறியுள்ளது. பேட்டன்களை கற்று, தானாக திருத்தி,அதை ஏற்றுக்கொள்ளும் கூகுளின் திறனே மெசின் லேர்னிங் எனப்படுகிறது.

தற்போது கிடைக்கும் பல்வேறு நிறுவனங்களுடைய வசதிகளின் அடிப்படை அமைப்பாக மெசின் லேர்னிங் உள்ளது. மேலும் பிரபல செயலிகளில் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பல்வேறு பயனர்வழங்கங்களையும் பட்டியலிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங்கை பயன்படுத்தும் கூகுள்!


புகைப்படக் கலையை பற்றி பேசும் போது, பிக்சல்2 எப்படி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சப்ஜெக்டை மட்டும் கண்டறிந்து 'shallow depth of field' எபெக்ட்டை பயன்படுத்தி சிறப்பான புகைபடங்களை எடுக்கிறது என்பதை சில பயனர்கள் அறிந்திருக்கலாம். மேலும் கூகுள் போட்டோஸ்-ல் சேமித்து வைத்துள்ள புகைப்படங்கள் பொருட்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்களின் புகைப்படங்களை வகைப்படுத்தி, செல்லப்பிராணிகள் முதல் சூரியோதயம் வரை புகைப்படங்களை திறமையாக வரிசைப்படுத்தி காட்டுகிறது.

கூகுள் ப்ளே மியூசிக் செயலியில், பயனர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப, மெசின் லேர்னிங் மூலம் யூடியூப் வீடியோக்களை காட்டப்படுகிறது. இது பயனர்களின் விருப்பத்திற்கா ஏற்பவும், கால நேரத்திற்கு ஏற்பவும் செயல்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங்கை பயன்படுத்தும் கூகுள்!


கூகுள் டிரான்ஸ்லேட்டில், பயனர்கள் புகைப்படங்களை ஸ்கேன் செய்தால் ' ஆப்டிக்கல் கேரக்டர் ரெகக்னேசன்' மூலம் அவை எழுத்துக்களாக மாற்றப்பட்டு தரப்படுகின்றன. இதன் மூலம் தெரியாத வார்த்தைகளை எளிதில் அடையாளங்காண பயன்படுகிறது.ஏற்கனவே மாற்றப்பட்ட தொகுப்புகளின் மூலம் கற்று இந்த வசதி செயல்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங்கை பயன்படுத்தும் கூகுள்!


உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஜிமெயில், நீங்கள் பெறும் ஈமெயிலுக்கு ஏற்ப ஸ்மார்ட் ரிப்பை என்ற பெயரில் 3 ரெஸ்பான்ஸை பரிந்துரைக்கிறது. பயனர் அந்த மெயிலை நிராகரிக்க விரும்பினால், கூகுளின் நாட்ஜிங் சிஸ்டம் என்னும் தனி செயற்கை நுண்ணறிவு மூலம் பயனர் பின்னர் பதிலளிக்கும் வகையில் நியாபகப்படுத்தும். கூகுளின் பெரும்பாலான ப்ராடக்டுகளும், மேப்ஸ், டிரிப்ஸ் மற்றும் கூகுள் அஸிஸ்டென்ட் போன்ற சேவைகளும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றன.

Best Mobiles in India

English summary
Google is using AI and Machine learning to make its apps better ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X