இந்தியாவில் வெள்ள அபாயம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் கூகுள் நிறுவனம்!

வெள்ள அபாயம் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிவதால் மக்கள் அதன் பாதிப்புகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடிகிறது.

|

இந்தியாவில் ஏற்படும் வெள்ள அபாயம் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை கூகுள் நிறுவனம் வெளியிடுகிறது. செயற்கை அறிவுத் தொழில் நுட்பம் (AI) மூலமாக, மழையின் அளவு, நீர்த் தேக்கங்களின் வெள்ள இருப்பு ஆகியவற்றை ஆராய்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகிறது. இதன் மூலம் மக்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ள அபாயம்  குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் கூகுள்.!

வெள்ள அபாயம் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடிவதால் மக்கள் அதன் பாதிப்புகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடிகிறது. இதற்காக கூகுள் நிறுவனம் மத்திய நீர் ஆணையத்துடன் (Central Water Commission) இணைந்து செயல்படுகிறது. கடந்த மாதம் பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள அபாயம் குறித்த எச்சரிக்கை அறிவிப்பை முதன் முதலாக வெளியிட்டது.

“கூகுள் பொது எச்சரிக்கை” (Google Public Alert) என்னும் பிரிவின் கீழ் வெளியிடப்படும் இத்தகைய அறிப்பினால் கூகுள் பயனாளர்கள் நெருக்கடியான சூழ்நிலைகளை அறிந்து கொள்ள முடிகிறது. Google Search, Google Maps, Google Now ஆகிய இணையதளச் சேவைகளை ஒருங்கிணைத்து இத்தகைய அறிவிப்புகளை கூகுள் நிறுவனம் வெளியிடுகிறது.

வெள்ள அபாயம்  குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் கூகுள்.!

ஒவ்வொரு வருடமும் 25 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளப் பெருக்கால் பாதிப்படைகின்றனர். இந்தியாவில் 20 சதவிகித உயிரிழப்புகள் மழை மற்றும் பெரும் வெள்ளத்தால் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு ஏற்படும் பெரும் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற கூகுள் நிறுவனம் செயற்கை அறிவுத் தொழில் நுட்பத்தைப் (AI) பயன்படுத்துகிறது. ஆறுகளில் ஓடும் நீரின் அளவு, நிலத்தின் மட்டம், ஆறுகளின் மட்டத்திற்கும் நிலத்தின் மட்டத்திற்கும் உள்ள இடைவெளி ஆகியவை பற்றிய தரவுகளைச் சேகரித்து அதன் வழியாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. சேகரிக்கப்படும் தரவுகளின் வழியாக ஒரு வரைபடம் உருவாக்கப்படுகிறது. அதன் வழியாக மழை மற்றும் வெள்ளம் குறித்த முன்னோக்கு அட்டவணை தயாரிக்கப்படுகிறது. வெள்ள அபாயம் ஏற்படக் கூடிய இடம், நேரம், வெள்ளத்தின் அளவு ஆகியவை குறித்துத் துல்லியமாக முன் கூட்டியே செயற்கை அறிவுத் தொழில் நுட்பத்தின் மூலம் கணிக்க முடிகிறது.

கடந்த வருடம், “எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்” என்னும் SOS (Save our Soul) எச்சரிக்கை வெளியிடும் வசதியை கூகுள் நிறுவனம் தொடங்கியது. Google Search மற்றும் Google Maps ஆகியவற்றின் வழியாக நெருக்கடி நிலைமையைச் சமாளிப்பதற்கு ஏதுவான தொலைபேசி எண்கள், இணைய தளங்கள் குறித்தத் தகவல்கள், தொடர்பு கொள்ள வேண்டிய அமைப்புகள் மற்றும் நபர்கள் குறித்தத் தகவல்களைப் பயனாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

வெள்ள அபாயம்  குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் கூகுள்.!

இயற்கைப் பேரழிவுகளில் இருந்து பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வைப் பெறுவதற்காக முகநூல் நிறுவனம் “Mark as safe” என்னும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவும் பயனாளர்களுக்கு இயற்கைப் பேரிடர் குறித்த விழிப்புணர்வையும் பாதுகாப்பினையும் வழங்குகிறது.

இவை போன்ற நவீன வசதிகள் பொதுமக்களை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாத்து அவர்களின் துயரங்களைக் குறைக்கும் என நம்பிக்கை கொள்வோமாக.

Best Mobiles in India

English summary
Google is using AI to issue flood warnings in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X