பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட 20 மில்லியன் கொசுக்களை வெளியிடும் கூகுள், ஏன்.?

Written By:

உண்மையிலேயே இது மிகவும் ஒரு சிறப்பான தொடக்கமாகும். கூகுள் நிறுவனத்தின் லைஃப் சைன்ஸ் ஆனது, கலிபோர்னியாவிலுள்ள ஃப்ரெஸ்நோவில் சுமார் 20 மில்லியன் ஆய்வகத்தில் உருவாக்கம் பெற்ற மற்றும பாக்டீரியா-பாதிக்கப்பட்ட கொசுக்களை விடுவிக்கும் திட்டமொன்றை கொண்டுள்ளது.

ஸீக்கா கிருமியை சுமக்கும் கொசுக்கள் பரவலாக உள்ளது. அந்த தவிர்க்க முடியாத கொசுவை சந்திக்கும் பயம் அனைவருக்குள்ளும் இருக்கிறது. ப்ராஜெக்ட் டிபக் என்று என்றழைக்கப்படும் இந்த திட்டம் மூலம் கொசுக்கள் மூலம் பரவும் தொற்றுநோய்களைத் தடுக்கவும் மற்றும் சாத்தியமான ஸீக்கா கிருமியை சுமக்கும் கொசுக்களை அழிக்கவும் உதவுமென்று நம்பப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அழிவுகரமான விளைவுகள்

அழிவுகரமான விளைவுகள்

இதுபோன்று கொசுக்களுடன் மோதுவதால் இதுவரை ஏற்படாத அளவிலான அழிவுகரமான விளைவுகள் உண்டாகுமா.? என்று கேட்டால் அதற்கு பதில் - இல்லை. இந்த குறிப்பிட்ட கொசு இனங்கள் 2013-ஆம் ஆண்டில் நுழைந்தன. ஆக, இவைகளை அகற்றுவதற்கான திட்டம் தான் என்ன.?

உற்பத்தி செய்ய இயலாத நிலை ஏற்படும்

உற்பத்தி செய்ய இயலாத நிலை ஏற்படும்

ஆய்வகத்தில் உருவாக்கம் பெற்ற ஆன் கொசுக்கள் வால்பச்சியா பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன, இது மனிதர்களுக்கு தீங்கற்றதாக உள்ளது, ஆனால் அவைகள் உடலுறவு கொண்டு அதன் மூலம் பெண் கொசுக்கள் பாதிப்புக்குள்ளாகி விட்டால், அவைகளால் முட்டைகளை உற்பத்தி செய்ய இயலாத நிலை ஏற்படும். அதன் மூலம் மெல்ல மெல்ல அழிவு ஆரம்பமாகும்.

அச்சம் கொள்ள தேவையில்லை

அச்சம் கொள்ள தேவையில்லை

இதில் சிறப்பான விடயம் என்னவென்றால், ஆய்வக ஆண் கொசுக்கள் கடிக்காது. எனவே ப்ரெஸ்னோ குடியிருப்பாளர்கள் இந்த பாக்டீரியா பரவிய கொசுக்களை நினைத்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளன.

ஸீக்கா, டெங்கு மற்றும் சிக்கன்குன்யா

ஸீக்கா, டெங்கு மற்றும் சிக்கன்குன்யா

இந்த ப்ராஜெக்ட் டீபக் மூலம் ஸீக்கா, டெங்கு மற்றும் சிக்கன்குன்யா ஆகியவற்றை பரப்புவதற்கு காரணமாக திகழும் இனங்களான - ஏடிஸ் ஏகிப்டி கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் ம்என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மொத்தம் எவ்வளவு செலவானது

மொத்தம் எவ்வளவு செலவானது

இதுபோன்ற திட்டம் ஒன்றிற்கு மொத்தம் எவ்வளவு செலவானது என்ற விவரங்கள் சார்ந்த எந்த வார்த்தையும் இல்லை. ஆனால் கொசுக்களை வெளியிடுகின்ற குழுவில் உள்ள ஒரு பொறியியலாளர் ஆன லினஸ் அப்ஸன், அடுத்ததாக இதேபோன்ற திட்டமொன்றை ஆஸ்திரேலியாவில் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

300 ஏக்கர் பரப்பளவில்

300 ஏக்கர் பரப்பளவில்

"இது பல்வேறு சூழல்களில் வேலை செய்யக் கூடியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," எனவும் அவர் பத்திரிகைக்குத் தெரிவித்தார். இந்த பாக்டீரியா நோயால் பாதிக்கப்பட்ட ஆய்வக கொசுக்களை அமெரிக்காவின் ஃப்ரெஸ்னோ பகுதியின் 300 ஏக்கர் பரப்பளவில் - 20 வார காலப்பகுதிக்குள் - வாரம் ஒரு மில்லியன் கொசுக்கள் என மொத்தம் 20 மில்லியன் ஆய்வக கொசுக்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Google is releasing 20 million mosquitoes out to the open. Here's why. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot