Gmail சேவைக்கு எந்த சிக்கலும் இல்லை.. ஜிமெயில் தளத்தின் பேஸிக் எச்டிஎம்எல் வெர்ஷனுக்கு தான் டாட்டா!
இது எல்லாமே பேடிஎம் சேவைகள் மீதான திடீர் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து தான் தொடங்கின. பேடிஎம் நிறுவனத்தின் கதவுகளை ஆர்பிஐ "இழுத்து மூடிய" பின்னர் கூகுள் பே-வின் ஆதிக்கத்தை அடக்க இந்திய அரசு சில புதிய விதிமுறைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில் கூகுள் (Google) நிறுவனத்தின் இன்னொரு பிரபலமான சேவையான ஜிமெயில் (Gmail) வருகிற ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் வேலை செய்யாது என்கிற தகவல் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தகவலில் பாதி உண்மை இருக்கிறது என்பதால் இது பலரையும் கவலைக்குள்ளும் ஆழ்த்தியுள்ளது.

எக்ஸ் தளத்தில் வெளியான சில தகவல்கள், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் சேவையை முடித்துக்கட்டும் (Google to kill Gmail in August) என்று தெரிவித்தன. ஆனால் இதுகுறித்த விளக்கத்தில், ஜிமெயில் சேவை எப்போதுமே இங்கே இருக்கும் (Gmail is here to stay) என்று கூறி ஜிமெயில் சேவை நிறுத்தம் தொடர்பான வதந்திகளுக்கு கூகுள் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த "ஜிமெயில் புரளிக்கு" காரணம் ஜெமினி தான்! கூகுளின் ஜெனரேட்டிவ் ஏஐ டூல் ஆன ஜெமினி, வெள்ளையர்களின் படங்களை உருவாக்க மறுத்ததன் விளைவாக, கூகுளின் ஜெமினி ஏஐ ஆனது "இனவெறி" கொண்டது என்கிற குடற்சாட்டிற்கு ஆளானது. ஜெமினியின் சார்பாக கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்தே, ஜிமெயில் சேவை நிறுத்தம் தொடர்பான வதந்திகள் ஆன்லைனில் பரவத் தொடங்கின. பின்னரே கூகுள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஜிமெயிலின் ஒரு அம்சம் உண்மையாகவே நிறுத்தப்பட்டுள்ளது. அது ஜிமெயில் மின்னஞ்சல் தளத்தின் பேஸிக் எச்டிஎம்எல் வெர்ஷன் (Basic HTML version) ஆகும். இது இரவோடு இரவாக செயல்படுத்தப்பட்ட ஒரு முடிவல்ல, இது குறித்து கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரிலேயே அறிவிக்கப்பட்டு இருந்தது; தற்போது அது நீக்கவும் பட்டுள்ளது.
ஜிமெயிலுக்கான எச்டிஎம்எல் வியூ ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கிடப்பில் போடப்பட்டது. ஜனவரி 2024 க்கு பிறகு, ஜிமெயிலை அணுகுவதற்கான டீஃ பால்ட் மோட் (Default mode) அந்த எச்டிஎம்எல் வியூவில் இருந்து ஸ்டாண்டர்ட் வியூ-விற்கு (HTML view to Standard view) மாறும் என்று கூகுளின் ஆதரவு பக்கம் கடந்த 2023 செப்டம்பரிலேயே உறுதிப்படுத்திவிட்டது.

நினைவூட்டும் வண்ணம் எச்டிஎம்எல் வியூ வழியாக மின்னஞ்சல்களை முடிந்தவரை எளிமையான முறையில் சரிபார்க்க முடியும். மேலும் பயனர்கள் மோசமான நெட்வொர்க் கிடைக்காத பகுதிகளில் (Low network areas) இருக்கும் போதும், நிலையான ஸ்டாண்டர்ட் வியூ-வை லோட் செய்ய முடியாத போதும் (Loading issues in standard view) எச்டிஎம்எல் வியூவானது மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.
பேடிஎம் நிறுவனத்திற்கு எதிரான இந்த ஆர்பிஐ-யின் திடீர் நடவடிக்கைகளானது இந்திய யுபிஐ கட்டண சந்தையில் கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (Phone Pe) ஆப்களின் ஆதிக்கம் அதிகமாகும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. நினைவூட்டும் வண்னம், இவ்விரு நிறுவனங்களும் யுபிஐ கட்டண சந்தை பங்கில் சுமார் 80 சதவீதத்தை தன்வசம் கொண்டுள்ளன.
எனவே தான் இவ்விரு நிறுவனங்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, இந்திய அரசாங்கமானது கூகுள் பே மற்றும் போன்பேவிற்கு "எதிரான" சில புதிய உத்திகளை பரிசீலித்து வருகிறது. இதனொரு பகுதியாக யூபிஐ கட்டண சேவைகளில் 30% கேப்பிங் முறை (30% Capping System) செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இமெயில் மற்றும் யுபிஐ சேவைகள் குறித்த பஞ்சாயத்துகள் ஒருபக்கம் இருக்க, போன்பே நிறுவனமானது கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள உள்நாட்டு ஆப் ஸ்டோர் (Homegrown app store) ஆன இன்டஸ் ஆப் ஸ்டோரை (Indus app store) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications