ரூ.3000க்கு வெளியாகும் ஆண்ட்ராய்டு ஒன் கருவிகள்

Written By:

ஞாபகம் இருக்கா ஆண்ட்ராய்டு ஒன் போன்களை, என பலரும் கேட்கும் நிலையில் இருக்கும் கூகுள் கருவிகளின் நிலைமையை முற்றிலுமாக மாற்றும் முயற்சியில் கூகுள் ஈடுப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தெற்கு ஆசியா மற்றும் இந்திய தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்திருக்கிறார்.

'டாட்டா டேட்டா' - கேம்ஸ்..!

இதன் ஒரு பகுதியாக ஆண்ட்ராய்டு ஒன் கருவிகளின் விலையை ரூ.3000க்குள் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கருவிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி செய்யப்படுவதோடு இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க கருவிகளை ரூ.2000 முதல் ரூ.3000க்கு விற்பனை செய்யவது நல்ல முயற்சியாக இருக்கும் என்றும் ராஜன் குறிப்பிட்டிருந்தார்.

 ரூ.3000க்கு வெளியாகும் ஆண்ட்ராய்டு ஒன் கருவிகள்

கவுன்டர்பாயின்ட் ஆய்வுகளின் படி இத்திட்டத்தின் முதல் கட்டமாக 7,00,000 ஆண்ட்ராய்டு ஒன் கருவிகள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களில் கூகுளின் தூய ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படும். இதே தரம் கொண்ட இயங்குதளமே கூகுள் நெக்சஸ் கருவிகளிலும் வழங்கப்படுகின்றது.

போனிற்கு ஆப்பு வைக்கும் ஆப்ஸ்..!!

ஆண்ட்ராய்டு ஒன் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படும் பேண்ட்வித் பிரச்சனைக்காக அந்நிறுவனம் ஆஃப்லைன் மேப்ஸ், யூட்யூப் ஆஃப்லைன் போன்ற சேவைகளை அறிமுகம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more about:
English summary
Google is fixing Android One by launching Rs. 3,000 smartphones
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்