பயனர் அக்கவுண்ட்களை பாதுகாக்கும் நோக்கில் புதிய வழிமுறையை கொண்டுவரும் கூகுள்.!

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பயனுள்ள அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி கடந்த மே மாதம் கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டுவர இருப்பதாக
கூறியது.

 2-ஸ்டெப் வெரிபிகேஷன்

அதன்படி இந்த 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை வரும் நவம்பர் 9-ம் தேதி கொண்டுவர உள்ளது. குறிப்பாக இந்த வழிமுறையை செயல்படுத்திய பின்னர் பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ஒடிபி வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும் என்று கூறப்படுகிறது. கண்டிப்பாகஇந்த அம்சம் பயனுள்ள வகையிலும்,பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

அவ்ளோ சந்தோஷம் வேணாம்- பணம் கொடுக்கல மொபைல் லாக்: ஜியோபோன் நெக்ஸ்ட்டில் இருக்கும் டிவைஸ் லாக் அம்சம்!அவ்ளோ சந்தோஷம் வேணாம்- பணம் கொடுக்கல மொபைல் லாக்: ஜியோபோன் நெக்ஸ்ட்டில் இருக்கும் டிவைஸ் லாக் அம்சம்!

 நவம்பர் 9-ம் தேதி

வெளிவந்த தகவலின்படி, வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை ஆனது கூகுள் அக்கவுண்டில் தானாகவே அமல்படுத்தப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. இதை பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குழப்பமும் வேணாம்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம்- புதிய ஐடி விதிகள் இப்படிதான்!ஒரு குழப்பமும் வேணாம்: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம்- புதிய ஐடி விதிகள் இப்படிதான்!

150 மில்லியன் கூகுள் பயனர்களின்

மேலும் கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு இந்த 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த உள்ளதாக கூறியுள்ளது. கண்டிப்பாக இந்த வசதி மிகவும் பாதுகாப்பான வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா?

 பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ

பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ

அதேபோல் கூகுள் நிறுவனம் சமீபத்தில் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த சாதனங்கள் டென்சர் சிப் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நிறுவனம் பிக்சல் 6 தொடரைப் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்க்கவில்லை.

சொத்தை விற்று உலக மக்களின் பசியை தீர்க்க நான் தயார்: இதை செய்ய நீங்கள் தயாரா?- எலான் மஸ்க் அதிரடி கேள்வி!சொத்தை விற்று உலக மக்களின் பசியை தீர்க்க நான் தயார்: இதை செய்ய நீங்கள் தயாரா?- எலான் மஸ்க் அதிரடி கேள்வி!

பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ

பல காரணிகளால் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ இரண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் வெளியீட்டில் கூறினார். "உலகளாவிய தேவை வழங்கல் சிக்கல்கள் உட்பட பல்வேறு காரணிகளால், எங்களது தயாரிப்புகளை அனைத்து சந்தைகளிலும் கிடைக்கச் செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.

நேரம் மிச்சம்- துவைத்து, உலர வைத்துக் கொடுக்குது: ரூ.9,160-க்கு டாப் லோட் வாஷிங் மெஷின்- அமேசான் அதிரடி!நேரம் மிச்சம்- துவைத்து, உலர வைத்துக் கொடுக்குது: ரூ.9,160-க்கு டாப் லோட் வாஷிங் மெஷின்- அமேசான் அதிரடி!

பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ

அதேபோல் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ மாடல்களில் ஸ்கிரீன் மினுமினுப்பு மற்றும் எதிர்பாராத பச்சை நிற விளைவு உள்ளிட்ட சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பயனர்கள் ஆன்லைனில் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் தனித்துவமான அமசங்களுடன் வெளிவந்தது. ஆனாலும் தற்போது இந்த சாதனங்களின் டிஸ்பிளேக்களில் சில பிரச்சனைகள் வருவதாக பயனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பிக்சல் 6 சீரிஸ் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்த ஒரு சில நாட்களில் இந்த சிக்கல்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இந்த சிக்கல் தொடர்பாக ஒருவர் வீடியோவை வெளியிட்டதாக
கூறப்படுகிறது. விரைவில் இந்த சிக்கலை கூகுள் நிறுவனம் சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google is implementing a 2-step verification process from November 9th: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X