Google சுந்தர் பிச்சைக்கு தங்க மனசு! ஊழியர்கள் அனைவருக்கும் 1000 டாலர்! எதற்கு தெரியுமா?

|

Google நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை தற்பொழுது தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்காக புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார், சுந்தர் பிச்சையின் அறிவிப்புப் படி கூகிள் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் 1000 டாலர் இந்த மாதம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த 1000 டாலர் பணம் எதற்காக அனைவருக்கும் வழங்கப்படுகிறது என்று தெரியுமா? சொல்றோம் வாங்க

இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து ஊழியர்களுக்கும் 1000 டாலர்

இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து ஊழியர்களுக்கும் 1000 டாலர்

கொரோனா ஊரடங்கு காரணத்தினால் கூகிள் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூகிள் நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களுக்கும் 1000 டாலரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்கியுள்ளது. இந்த தொகையைப் பயன்படுத்தி ஒவ்வொரு கூகிள் ஊழியரும் தங்களுக்குத் தேவையான பொருட்கள் எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் என்று அறிவித்துள்ளது.

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கம்

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கம்

குறிப்பாக இந்த 1000 டாலர் தொகை, வீட்டில் இருந்து வேலை பார்க்கும் தனது ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்குப் பனி சம்பந்தமாக, அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் புதிய கணினியோ அல்லது தேவைப்படும் ஹார்ட்வேர் சாதனங்களோ வாங்கிக்கொள்ளலாம் என்று கூகிள் தெரிவித்துள்ளது.

4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!

புதிய கணினி கூட வாங்கிக்கொள்ளலாம்

புதிய கணினி கூட வாங்கிக்கொள்ளலாம்

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்களின் சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்றார் போல் மிகவும் வசதியாக மாற்றிக்கொள்ளவும், இந்த நேரத்தில் கைகளில் மிகச் சிறந்த கணினி சாதனம் இல்லாதவர்களுக்கு புதிய கணினிகள் மற்றும் லேப்டாப்கள், கணினி ஸ்டாண்ட்கள்,பீன் பேக்கள் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யும் போது உதவும் உபகரணங்கள் எதுவேண்டுமானாலும் இந்த 1000 டாலரில் அவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.

ஆண்டின் இறுதி வரை வீட்டிலிருந்து வேலையா?

ஆண்டின் இறுதி வரை வீட்டிலிருந்து வேலையா?

மிஞ்சி உள்ள இந்த ஆண்டின் இறுதி வரை, கூகிள் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்று கூகிள் மற்றும் ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். இதனால், ஒவ்வொரு கூக்லருக்கும் தேவையான உபகரணங்கள் மற்றும் அலுவலக பர்னிச்சர் சாமான்கள் வாங்கிக்கொள்ள நிறுவனம் சார்பில் 1,000 அமெரிக்க டாலர் வழக்கப்பட்டுள்ளது.

சோனி சோனிதான்: 4கே HDR டிவி இந்தியாவில் அறிமுகம்., விலை தெரியுமா?சோனி சோனிதான்: 4கே HDR டிவி இந்தியாவில் அறிமுகம்., விலை தெரியுமா?

பிற நாட்டின் பண மதிப்பிற்கு ஏற்றார் போல தொகை

பிற நாட்டின் பண மதிப்பிற்கு ஏற்றார் போல தொகை

அதேபோல், அமெரிக்கா அல்லாத பிற நாடுகளில் 1000 டாலருக்கு நிகரான அந்த நாட்டின் பண மதிப்பின்படி சமமான மதிப்பு தொகை வழங்கப்படும் என்றும் சுந்தர் பிச்சை தனது அனைத்து கூகிள் ஊழியர்களுக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்திருக்கிறார். இந்த தொகை ஊழியர்களின் சுமையை எளிதாக்கும் மற்றும் நிறுவனம் அவர்களுக்காக எப்பொழுதும் உறுதுணையாக உள்ளது என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்க நிறுவனம் உதவி

ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்க நிறுவனம் உதவி

இந்த கடினமான காலங்களில் ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்கவும், ஊக்கப்படுத்தவும் இந்த தொகை உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல், உங்களுக்குத் தேவையானதைப் பொறுத்து, இது எல்லாவற்றையும் உள்ளடக்காது, ஆனாலும் கூட 1000 டாலர் என்பது இந்த நேரத்தில் நிச்சயம் ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ISRO ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நிலவு மண்ணிற்கு காப்புரிமை! பலே தமிழா!ISRO ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நிலவு மண்ணிற்கு காப்புரிமை! பலே தமிழா!

மீண்டும் அலுவலகங்களை திறக்க முடிவு

மீண்டும் அலுவலகங்களை திறக்க முடிவு

உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்து ஜூலை 6 ஆம் தேதிக்குள் மீண்டும் நிறுவனங்கள் திறக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகமான நகரங்களில் அதிக அலுவலகங்களை மீண்டும் திறக்க கூகிள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம்

சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம்

பாதுகாப்பான பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் சுமார் 10% ஊழியர்களைத் திரும்பி வரக் கூகிள் அனுமதிக்கும் என்றும், விருப்பம் உள்ள வரையறுக்கப்பட்ட ஊழியர்கள், ஷிபிட் அடிப்படையில் அலுவலகம் வந்து பணியாற்றப் பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படும் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார். சமூக இடைவெளி, கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூகிள் கவனம் செலுத்தி வருகிறது.

Best Mobiles in India

English summary
Google Is Giving 1000 Dollar Allowance To All Of It's Work From Home Employees : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X