Apple நிறுவனத்திற்குப் போட்டியாக Google தயார் செய்த கூகிள் கார்டு! என்ன செய்யும் இந்த கார்டு?

|

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆச்சரியமான "தொழில்நுட்ப" தயாரிப்பு என்றால் நிச்சயம் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் கார்டை கூறலாம், ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த நிதி முடிவுகளை எடுக்க உதவும் வழியாக நிறுவனம் ஆப்பிள் கார்டை அறிமுகம் செய்தது. தற்பொழுது ஆப்பிளிற்குப் போட்டியாகக் கூகிள் நிறுவனம் "கூகிள் கார்டு" என்று அழைக்கப்படும் ஸ்மார்ட் கார்டை உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூகிள் நிறுவனம் தயார் செய்யும் கூகுள் கார்டு

கூகிள் நிறுவனம் தயார் செய்யும் கூகுள் கார்டு

இந்த தகவல் TechCrunch மூலம் வெளியாகியுள்ளது, அதில் கூகிளின் இந்த கூகிள் கார்டை "ஸ்மார்ட் டெபிட் கார்டு" என்று குறிப்பிடபட்டுளள்து. ஆப்பிள் கார்டை போலவே கூகிள் கார்டின் பல அம்சங்கள் ஒத்தனவையாக இருக்கிறது. கூகிள் கார்டு உண்மையில் ஒரு பிஸிக்கல் கார்டாகும், நீங்கள் பயன்படுத்தும் டெபிட் கார்டு அட்டைகளை போலவே இதையும் நீங்கள் பயன்படுத்தலாம். இதில் இன்னும் பல கூடுதல் அம்சங்களும் உள்ளது.

Google Pay பயன்பாட்டில் மெய்நிகர் அட்டை

Google Pay பயன்பாட்டில் மெய்நிகர் அட்டை

இந்த கூகிள் கார்டு அட்டைகள் பிஸிக்கல் அட்டையாக மட்டுமில்லாமல், Google Pay பயன்பாட்டில் இதற்கான மெய்நிகர் அட்டையையும் கூகிள் நிறுவனம் வழங்கியுள்ளது. கூகிள் கார்டுக்கும் வேறுபட்ட கிரெடிட் கார்டிற்கும் உள்ள பெரிய வேறுபாடு ஒருங்கிணைக்கப்பட்டு விரிவான நிதி கண்காணிப்பு தான். கூகிள் உருவாக்கியுள்ள பிரத்தியேக கூகிள் கார்டு பயன்பாட்டின் உதவியுடன் அனைத்து நிதி விபரங்களைக் கண்காணித்துக்கொள்ளலாம்.

அமைதியா இருந்தது இதுக்கு தானா: ஒரே திட்டம் அட்டகாச சலுகைகள்- இதுதான் Airtel!அமைதியா இருந்தது இதுக்கு தானா: ஒரே திட்டம் அட்டகாச சலுகைகள்- இதுதான் Airtel!

வங்கி கிரெடிட் கார்டையும் போலவே இருக்கும் கூகிள் கார்டு

வங்கி கிரெடிட் கார்டையும் போலவே இருக்கும் கூகிள் கார்டு

வங்கி கிரெடிட் கார்டையும் போலவே, கூகிள் கார்டும் சரிபார்க்கும் கணக்குடன் வரும். புதிய Google பயன்பாட்டில் பயனர்கள் தங்களின் இருப்பு, கொள்முதல், கார்டு லாக் மற்றும் பிற அம்சங்களை அறியக் கூகிள் கார்டு கணக்கை அணுக வேண்டும். இந்த அட்டை சிஐடிஐ மற்றும் ஸ்டான்போர்ட் ஃபெடரல் கிரெடிட் யூனியன் போன்ற வங்கி கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படும். வலைத்தளத்தில் வெளியான படங்கள் வைத்து வேறு சில விவரங்களைப் பார்ப்போம்.

வெள்ளை நிறத்தில் சிப் கார்டு

வெள்ளை நிறத்தில் சிப் கார்டு

கூகிள் கார்டு வெள்ளை நிறத்தில் விசா நெட்வொர்க் கார்டு போன்று இதுவும் ஒரு சிப் கொண்ட பிளாஸ்டிக் கார்டு என்பதை நாம் படத்தில் காணலாம், கூகிள் அட்டையின் இந்த வடிவமைப்பு இறுதியாக இருக்காது. அதேபோல், அட்டையில் விசித்திரமான நீலம் மற்றும் பச்சை புள்ளி வடிவத்தையும் கொண்டுள்ளது.

பூமியின் வரலாற்றில் ஏற்படாத மிகப்பெரிய மாற்றம் 2020.! விஞ்ஞானிகள் சொன்ன உண்மை!பூமியின் வரலாற்றில் ஏற்படாத மிகப்பெரிய மாற்றம் 2020.! விஞ்ஞானிகள் சொன்ன உண்மை!

தனிப்பட்ட பாதுகாப்பான பயனர் பயன்பாட்டு செயலி

தனிப்பட்ட பாதுகாப்பான பயனர் பயன்பாட்டு செயலி

இந்த கார்டின் பயன்பாடு வணிகர் மற்றும் தேதி விவரங்களுடன் சமீபத்திய பரிவர்த்தனைகளைக் காண்பிக்கும். தயாரிப்பு நிறுவனம் கூகிள் என்பதால், ஏராளமான தகவல்களும் கிடைக்கும்.உங்கள் கூகிள் கார்டு தொலைந்துவிட்டால் உடனே அதைப் பயனர் பயன்பாட்டிலிருந்து உடனடியாக கார்டை லாக் செய்துகொள்ளலாம்.

பிஸிக்கல் மற்றும் மெய்நிகர் அட்டை கிடைக்கும்

பிஸிக்கல் மற்றும் மெய்நிகர் அட்டை கிடைக்கும்

மெய்நிகர் அட்டை இயற்பியல் அட்டையை விட வேறு எண்ணைக் கொண்டிருப்பதால் செயலியின் மூலம் உங்கள் பரிவர்த்தனை சேவைகளைச் செய்யலாம். பயன்பாட்டு அமைப்புகளில், அறிவிப்பு விருப்பங்கள் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகளைக் காண கூகிள் அனுமதிக்கிறது.

WHATSAPP இல் அடுத்து களமிறங்க தயாராகும் 2 சக்திவாய்ந்த அம்சங்கள் இவைதான்!WHATSAPP இல் அடுத்து களமிறங்க தயாராகும் 2 சக்திவாய்ந்த அம்சங்கள் இவைதான்!

அதிகாரப்பூர்வ தகவல் எப்பொழுது வெளிவரும்

அதிகாரப்பூர்வ தகவல் எப்பொழுது வெளிவரும்

ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாகக் கூகிள் நிறுவனம் தயார் செய்து வரும் கூகிள் கார்டு எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் இன்னும் வழியாகவில்லை. கூகிள் செய்து வரும் சோதனைகளை வைத்துப் பார்க்கையில் நிச்சயம் இந்த கூகிள் கார்டு மற்றும் அதற்கான பயன்பாட்டை வெகு விரைவில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கும் வரை காத்திருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Google Is Developing A Similar Product Like Apple Card : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X