கூகுள் அறிவித்த தரமான புதிய சேவைகள்: மொழி தெரியாத மக்களுக்கு இனி கவலை இல்லை.!

கூகுள் தேடல்களில் 3டி பொருள்கள் காண்பிக்க முடியும், இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்கள் 3டி பொருட்கள் மற்றும் ஏ.ஆர் அனுபவத்தை நேரடியாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

|

கூகுள் நிறுவனம் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து பல புதிய சேவைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி கூகுள் நிறுவனத்தின் IO2019 டெவலப்பர் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கியது, இதில் கூகுள் நிறுவன சேவைகளான கூகுள் சர்ச், லென்ஸ் உள்பட விரைவில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் எதிர்கால திட்டங்கள் சார்ந்த முக்கிய தகவல்களும் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் அறிவித்த தரமான புதிய சேவைகள் என்னென்ன? வாங்க பார்ப்போம்.!

கூகுள் சர்ச் செய்யும் போது கேமரா வழியே ஏ.ஆர் சார்ந்த பதில்கள், கூகுள் நியூஸ் சேவையில் பாட்காஸ்ட் அறிவிப்புகள் உள்ளிட்டவை புதிதாக சேர்க்கப்படுகின்றன. மேலும் கூகுள் லென்ஸ் சேவையில் கட்டணம் செலுத்தும் வசதி, கூகுள் மென்பொருள் தானாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளட்டவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பாட்கேஸ்ட்கள்

பாட்கேஸ்ட்கள்

இனிமேல் பாட்கேஸ்ட்கள் நேரடியாக கூகுள் தேடல்களில் ஒன்றிணைக்கப்படுகிறது, பின்பு இந்த வசதி மூலம் பயனர் விரும்பும் பாட்கேஸ்ட்களை மிக எளிமையாக கண்டறிய முடியும். பின்பு பாட்கேஸ்ட்களை பின்னர் கேட்க சேமித்து
வைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள்

கூகுள்

மேலும் கூகுள் சர்ச் செய்யும் போது ஏ.ஆர் சார்ந்த தகவல்களை பதில்களாக பட்டியிடப்படுகின்றன, இவை இந்த மாதம் இறுதியில் வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கென கூகுள், நாசா, நியூ பேலண்ஸ், சாம்சங், டார்கெட், விசிபிள் பாடி, வால்வோ மற்றும் வேஃபேர், போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 3டி

3டி

இதன் மூலம் கூகுள் தேடல்களில் 3டி பொருள்கள் காண்பிக்க முடியும், இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்கள் 3டி பொருட்கள் மற்றும் ஏ.ஆர் அனுபவத்தை நேரடியாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பயனர்கள்
தேடும் விவரங்களை மிக எளிமையாக புரிந்துகொள்ள முடியும்.

 உணவு

உணவு

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் லென்ஸ் சேவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களை கொண்டு பயனர்கள்
உணவகங்களில் கிடைக்கும் பிரபல உணவு வகைகளை பற்றி எளிமையாக அறிந்து கொள்ள முடியும். பின்பு அந்த உணவு எவ்வாறு காட்சியளிக்கும் என்பதையும் பார்த்து தெரிந்து கொண்டு அவற்றுக்கு மற்றவர்கள் வழங்கியிருக்கும் விமர்சனங்களை படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா

கேமரா

ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களுக்கு கூகுள் கோ எனும் சர்ச் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதில் கேமரா வசதிகள் வழங்கப்பட்டுள்ளன, இதை பயன்படுத்தி பயனர்கள் மிக எளிமையாக மொழி மாற்றம் செய்ய முடியும்.

மொழி பெயர்ப்பு

மொழி தெரியாத அல்லது படிக்கத் தெரியாதவர்கள் எழுத்துக்களின் மேல் கூகுள் கேமராவை காண்பிக்க வேண்டும். இனி கூகுள் உங்களுக்கு திரையில் மொழி பெயர்ப்பு, வாசித்தல் போன்ற ஆப்ஷன்களை பட்டியலிடும். அவற்றை தேர்வு செய்தால் உடனடி மொழிமாற்றம் பெறுவதோடு, எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை கூகுள் கேமரா வாசித்துக் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google is adding augmented reality to search: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X