Home
News

இரவோடு இரவாக.. சுந்தர் செய்த சம்பவம்.. Gmail முதல் Photos வரை.. Google சேவைகளில் பல திடீர் மாற்றங்கள்!

கூகுள் ஐ/ஓ 2024 பற்றியும்.. கூகுள் வொர்க்ஸ்பேஸ் பற்றியும்.. உங்களுக்கு பெரிய அளவிலான விளக்கங்கள் தேவை இல்லை என்றால் நாம் நேரடியாக விஷயத்திற்குள் இறங்கிவிடலாம். ஒருவேளை தெரியதென்றால், முதல் அதைப்பற்றி சுருக்கமாக பேசிவிட்டு.. இரவோடு இரவாக வந்த மாற்றங்கள் பற்றி பார்க்கலாம்!

கூகுள் ஐ/ஓ 2024 (Google I/O 2024) என்பது கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு (annual developer conference) ஆகும். ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்நிகழ்வின் போதுதான் கூகுள் நிறுவனம் வழங்கும் (சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர்) சேவைகள் தொடர்பான புதிய அறிமுகங்கள் மற்றும் மாற்றங்கள் அறிவிகப்படும்.

Gmail முதல் Photos வரை.. Google சேவைகளில் பல திடீர் மாற்றங்கள்!

பொதுவாக இந்நிகழ்வு "சாஃப்ட்வேர்" சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். இருப்பினும் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வில் கூகுள் பிக்சல் போல்ட் (Google Pixel Fold) உட்பட 2 புதிய பிக்சல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டதால்.. தற்போது இது "ஹார்ட்வேர்" சம்பந்தப்பட்ட நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

கூகுள் வொர்க்ஸ்பேஸ் (Google WorkSpace) என்றால், சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கூகுளின் கீழ் கிடைக்கும் சேவைகளின் ஒரு தொகுப்பாகும். கூகுள் வொர்க்ஸ்பேஸ் டூல்களில் - ஜிமெயில் (Gmail), கூகுள் டாக்ஸ் (Google Docs), கூகுள் ஷீட்ஸ் (Google Sheets), கூகுள் போட்டோஸ் (Google Photos), கூகுள் சாட் (Google Chat) போன்ற சேவைகள் அடங்கும்.

இதைப்பற்றி எல்லாம் ஏன் இங்கே பேசிக்கொண்டு இருக்கிறோம் என்றால்.. கூகுள் ஐ/ஓ 2024 நிகழ்வின் முக்கிய உரையின் (Google I/O 2024 Keynote) போது, ​​கூகுள் நிறுவனம் தனது வொர்க்ஸ்பேஸ் சூட்டிற்கான பல ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அப்டேட்களை (AI-powered Updates) அறிவித்துள்ளது. அதாவது ஜிமெயில் தொடங்கி கூகுள் போட்டோஸ் வரையிலாக கூகுளின் பல சேவைகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கூகுள் வொர்க்ஸ்பேஸ்-ல் என்னென்ன புதிய ஏஐ அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது? மொத்த கூகுள் வொர்க்ஸ்பேஸ் சூட்டிலும் ஜெமினி 1.5 ப்ரோ (Gemini 1.5 Pro) அப்டேட் வந்துள்ளது. இந்த அப்டேட்டின் மூலம் ஜிமெயில் பயனர்கள் ஜெமினி ஆதரவுடன் இமெயில் மேனேஜ்மென்டை (Email Management) மேம்படுத்த முடியும்.

மேலும் கூகுள் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் (AI Chatbot) ஆனது சமீபத்திய ஸ்கூல் இமெயில்களை சுருக்கவும் ( summarise recent school emails), அட்டாச்மென்ட்களை அனலைஸ் செய்யவும் (analyse attachments) மற்றும் பயனர்களுக்கு முக்கிய புள்ளிகள் மற்றும் செயல்களை முன்னிலைப்படுத்தவும் முடியும்.

மேலும் கூகுள் மீட் (Google Meet) பயனர்கள் லாங் ரெக்கார்டிங்கள் மற்றும் டிராஃப்ட் ரிப்ளைகளை ( long recordings and draft replies) சம்மரைஸ் செய்யவும் முடியும். மேலும் ஜெமினி 1.5 ப்ரோ ஆனது இப்போது வொர்க்ஸ்பேஸ் லேப்ஸ் (Workspace Labs) பயனர்களுக்கும் கிடைக்கிறது.

கூகுள் போட்டோஸ்-க்கு தான் மிகப்பெரிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறலாம். புதிய ஜெமினி-பவர்டு அம்சத்தின் மூலம், கூகுள் போட்டோஸில் 'ஆஸ்க் போட்டோஸ்' (Ask Photos) என்கிற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூகுள் போட்டோஸில் புகைப்படங்களை தேடுவது மிகவும் எளிதாகிவிடும்.

லைசென்ஸ் பிளேட்டை (License Plate) கண்டறிவது அல்லது தங்கள் குழந்தையின் மைல்ஸ்டோன்களை கண்காணிப்பது போன்ற குறிப்பிட்ட கேள்விகளை கேட்க முடியும். அதன் வழியாக புகைப்படங்களை கண்டறிய முடியும். இதன் மூலம் கூகுள் போட்டோஸில் புகைப்படத்தேடல் அனுபவம் அடுத்தகட்டத்திற்கு மேம்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இந்த ஆஸ்க் போட்டோஸ் அம்சம் இந்த கோடை காலத்தில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் இந்த டூலில் இன்னும் சில கூடுதல் அம்சங்களும் சேர்க்கப்படும். இந்த வொர்க்ஸ்பேஸ் அம்சங்களை தவிர, ஆண்ட்ராய்டு (Android), கூகுள் சேர்ச் (Google Search) மற்றும் நோட்புக்எல்எம் (NotebookLM) போன்ற பிற தயாரிப்புகளிலும் புதிய திறன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google IO 2024 Keynote From Gemini 1 5 Pro For Workspace To Ask Photos All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X