Home
News

Google-ன் 4 முக்கிய அறிவிப்புகள்.. மே 10-க்கு பிறகு எல்லாமே மாறும்.. கூகுளின் தலையெழுத்தும் சேர்த்து!

வருகிற மே 10 ஆம் தேதியன்று கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு (Annual developer conference) நடக்கவுள்ளது. சுருக்கமாக கூகுள் ஐ/ஓ 2023 (Google I/O 2023) என்று அழைக்கப்படும் இந்நிகழ்வின் போது கூகுள் நிறுவனத்தின் "தலையெழுத்தை" மாற்றும் 4 முக்கியமான தயாரிப்புகள் அறிவிக்கப்படவுள்ளது!

அதென்ன தயாரிப்புகள்? அதெப்படி கூகுளின் தலையெழுத்தை மாற்றும்? என்பதை பற்றி பேசும் முன்னர்.. கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வை பார்ப்பது எப்படி? என்பதை பற்றி பார்த்துவிடலாம். இந்நிகழ்வு மே 10 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு, கூகுளின் யூட்யூப் சேனல் (Google YouTube Channel) வழியாக லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

Google-ன் 4 முக்கிய அறிவிப்புகள்.. மே 10-க்கு பிறகு எல்லாமே மாறும்!

கூகுளின் தலையெழுத்தை மாற்றப்போகும் 4 முக்கிய அறிவிப்புகள்: மே 10 ஆம் தேதி அன்று நடக்கப்போகும் முதல் மற்றும் முக்கியமான அறிவிப்பு - பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) தான். இது கூகுள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் (Foldable Smartphone) ஆகும்.

பிக்சல் ஃபோல்ட்டின் அறிமுகமானது - ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் தன்னந்தனியாக ஆட்சி செய்து வரும் - சாம்சங்கிற்கு கடும்போட்டியாக இருக்குமென்பதால், இது கூகுள் ஐ/0 2023 நிகழ்வின் மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இது ரூ.1,48,000 க்கு அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. அதாவது சாம்சங் கேலக்ஸி இஸட் 4 ஃபோல்ட்டை விட (ரூ.1,54,999) மலிவாக இருக்கும்!

அடுத்ததாக கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வின் போது கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் டேப்லட்டையும் (Pixel Tablet) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த டேப்லெட்டின் வன்பொருள் (Hardware) அம்சங்களானது ஆப்பிள் ஐபாட்களை (Apple iPad) விட சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த டேப்லெட்டின் மென்பொருளானது (Software) இதுவரை எந்த ஆண்ட்ராய்டு டேப்லெட்டிலும் இல்லாத அளவிற்கு சிறப்பாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை (அமேசான் ஜப்பான் வலைத்தளம் வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி) இது தோராயமாக ரூ.48,500 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

கூகுள் ஐ/0 2023 நிகழ்வின் மூன்றாவது முக்கிய அறிவிப்பாக பிக்சல் 7ஏ (Pixel 7a) ஸ்மார்ட்போன் இருக்கும். மே 10 இல் நடக்கும் உலகளாவிய அறிமுகத்திற்கு பின்னர், இது மே 11 ஆம் தேதியன்று இந்தியாவிலும் அறிமுகமாகும் என்றும், இது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனை செய்யப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ரூ.46,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இந்த விலை நிர்ணயம் மட்டும் உண்மையாகும் பட்சத்தில், பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் சாம்சங் (Samsung) நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் பல வகையான மிட்-ரேன்ஜ் மற்றும் பிளாக்ஷிப் போன்களை (Mid-range and Flagship Phones) தூக்கி சாப்பிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கடைசியாக, கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வின் போது, சாட்ஜிபிடிக்கு (ChatGPT) கடும் போட்டியளிக்கும் வண்ணம், கூகுளின் சொந்த ஜெனரேட்டிவ் ஏஐ டூலான பார்ட் (Bard) மீது சில முக்கிய மேம்பாடுகள் அறிவிக்கப்படும். ஒட்டுமொத்தமாக வருகிற மே 10 ஆம் தேதிக்கு பின்னர் கூகுள் நிறுவனமானது, பல வகையான பிரிவுகளில் சில நல்ல முன்னேற்றங்களை பெறவுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google IO 2023 Event on May 10 How to Watch Live Stream From India and What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X