Home
News

1008 பஞ்சாயத்துக்கு மத்தியில் Google-ன் சூப்பர் அறிவிப்பு.. 1 இல்ல, 2 இல்ல.. மொத்தம் 5 குட் நியூஸ்!

சாட்ஜிபிடி (ChatGPT) என்கிற ஏஐ சாட்பாட்-ஐ வைத்து கொண்டு மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் கொடுக்கும் 1008 மண்டை குடைச்சல்களுக்கு மத்தியில், கூகுள் (Google) நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை (Sundar Pichai) ஒரு சூப்பரான தகவலை ட்வீட்டர் வழியாக பகிந்து உள்ளார்.

சுந்தர் பிச்சை, இந்த 2023 ஆம் ஆண்டுக்கான கூகுள் ஐ/ஓ நிகழ்வு (Google I/O 2023 Event) எப்போது நடக்கும் என்கிற தேதியை வெளிப்படுத்தியுள்ளார். கூகுளின் இந்த வருடாந்திர டெவலப்பர் மாநாடானது (Annual Developer Conference) வருகிற மே 10-இல் நடக்கவுள்ளது. மேலும் இந்நிகழ்வில் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 ஸ்பெஷலான அறிவிப்புகள் நடக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1008 பஞ்சாயத்துக்கு மத்தியில் Google-ன் சூப்பர் அறிவிப்பு!

Google I/O 2023-இல் அப்படி என்ன ஸ்பெஷல்?

கூகுள் ஐ/0 2023 நிகழ்வின் முதல் மற்றும் முக்கிய சிறப்பம்சமாக அடுத்த தலைமுறை ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு 14 (Android 14) ஓஎஸ் இருக்கும். இந்த புதிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆனது ப்ரைவஸி மற்றும் செக்யூரிட்டி (Privacy and Security) அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளது மற்றும் அக்செஸ்ஸிபிலிட்டி மெனுவில் (Accessibility Menu) சில சுவாரசியமான மாற்றங்களையும் கொண்டுவரவுள்ளது.

அதே நாளில் கூகுளின் மலிவு விலை போனும் அறிமுகமாகும்!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் சேர்த்து, அதே நாளில் கூகுளின் மலிவு விலை ஸ்மார்ட்போன் ஒன்றும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அது கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7A) மாடலாகும். இது டென்சர் ஜி2 ப்ராசஸர் (Tensor G2 Processor), ஹை-ரெசல்யூஷன் கேமரா மற்றும் பல முக்கிய அம்சங்களை பேக் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 7ஏ அம்சங்கள்:

கூகுள் பிக்சல் 7ஏ, முன்னதாக அறிமுகமான பிக்சல் 6ஏ (Pixel 6A) மாடலின் மேம்படுத்தப்பட்ட "வாரிசாக" இருக்கும் என்றும், அதே சமயம் கூகுள் பிக்சல் 7 (Pixel 7) ஸ்மார்ட்போனை போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற விவரங்கள் வருகிற மே 10 ஆம் தேதியன்று அறிவிக்கப்படலாம்.

கூகுள் பிக்சல் 7ஏ விலை:

நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனது ரூ.43,999 க்கு அறிமுகமானது. பிக்சல் 7ஏ-வும் கூட இதே போன்ற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அதுமட்டுமின்றி பிக்சல் 6ஏ அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களிலேயே அதன் விலை மீது தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. இதே உத்தி பிக்சல் 7ஏ மீதும் பயன்படுத்தப்படலாம்.

கூகுள் பிக்சல் டேப்லெட், பிக்சல் 8 சீரீஸ், பிக்சல் ஃபோல்ட் போனும் கூட அறிவிக்கப்படலாம்!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனுடன் சேர்த்து மே 10 ஆம் தேதியன்று கூகுள் பிக்சல் டேப்லெட்டும் (Google Pixel Tablet) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூகுள் பிக்சல் 8 சீரிஸ் (Google Pixel 8 Series) ஸ்மார்ட்போன்கள் மற்றும் கூகுளின் முதல் ஃபோல்டபிள் போனான (Foldable Phone) பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) ஸ்மார்ட்போனும் கூட டீஸ் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google IO 2023 Event Date Revealed By Sundar Pichai Android 14 and Pixel 6A Could Be The Highlight
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X