Home
News

ஷேர்சாட் செயலிக்கு வந்த அதிர்ஷ்டம்: 300 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்.!

சமூக வலைதள செயலியான ஷேர்சாட் செயலியை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சீன செயலிகளான டிக்டாக், ஹலோ போன்ற செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. அதன்பின்பு இந்தியாவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்த ஷேர்சாட் செயலியை பயன்படுத்த துவங்கினர்.

 மேலும் தற்போது ஷேர்சாட்

மேலும் தற்போது ஷேர்சாட் நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஆனாலும் கூட ஷேர்சாட் செயலிக்கு போட்டியாக பல செயலிகள் இந்தியாவில் உள்ளன.பின்பு ஷேர்சாட் நிறுவனம் இப்போது நல்ல லாபத்தை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஷேர்சாட் செயலியில்

குறிப்பாக இந்த ஷேர்சாட் செயலியில் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 180 மில்லியனுக்கு அதிகமானோர் உள்ளதாகவும், செயலியின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 300 மில்லியனை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.

 கூகுள் நிறுவனம் ஷேர்சாட்

இந்நிலையில் கூகுள் நிறுவனம் ஷேர்சாட் நிறுவனத்தில் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்யபோவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின்வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஷேர்சாட் நிறுவனத்தில் முதலீடு செய்ய பல

குறிப்பாக ஷேர்சாட் நிறுவனத்தில் முதலீடு செய்ய பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில், கூகுள் நிறுவனம் முதலீடு செய்வது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிந்தி, கன்னடா, தெலுங்கு,மொழிகளில்

தமிழ், ஹிந்தி, கன்னடா, தெலுங்கு,மொழிகளில் பயனர்கள் பதிவு செய்யும் செய்திகளை ஷேர்சாட் செயலியில் பரப்பி வருவதால், பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் மொழி மாற்றம் செய்ய

அதேபோல் சமீபத்தில் மொழி மாற்றம் செய்ய அதிகம் பயன்படும் கூகுள் டிரான்ஸ்லேட்டரில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 24 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

எனப்படும் மொழிமாற்ற சேவையை

டிரான்ஸ்லேட் எனப்படும் மொழிமாற்ற சேவையை அளித்து வருகிறது கூகுள் நிறுவனம். இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக இதில் தமிழ், ஹிந்தி,ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், பெங்காலி, கன்னடம் போன்ற பல மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது பயனர்கள் தங்களுக்கு தேவையான மொழிகளில்
கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் அதில் குறிப்பிட்டுள்ள மொழிகளுள் மொழி மாற்றம் செய்து அறிந்துகொள்ளலாம்.

இந்நிலையில் 24 புதிய மொழிகளை சமீபத்தில்

இந்நிலையில் 24 புதிய மொழிகளை சமீபத்தில் கூகுள் டிரான்ஸ்லேட்டரில் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை. மேலும்இந்த 24 மொழிகளில் போஜ்புரி, பம்பரா, டோக்ரி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 8 இந்திய மொழிகளும் அடங்கும். குறிப்பாக இந்த புதிய அறிமுகத்தின் மூலம் கூகுள் டிரான்ஸ்லேட்டில் உலகம் முழுவதும் உள்ள 133 மொழிகளும், 19 இந்திய மொழிகளும் இடம் பெற்றுள்ளன. அதேபோல் இந்த சேவைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இதனால்
30 கோடி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Google invests 300 million in ShareChat: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X