Home
News

அவ்ளோதான்.. மாயமாகும் டிரைவ் ஃபைல்ஸ்.. உடனே காப்பி பண்ணிடுங்க.. எச்சரிக்கை கொடுத்த Google!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் கூகுள் டிரைவ் (Google Drive) ஆப்பில் இருந்து யூசர்களின் ஃபைல்கள் காணாமல் போய்கொண்டிருக்கிறது. இந்த காணாமல் போன ஃபைல்களை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், கூகுள் நிறுவனமே களத்தில் இறங்கியிருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்த டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் மற்றும் ஆப்களை தவிர்த்துவிட்டு அன்றாட வாழ்வை கடத்துவது அரிதாகி வருகிறது. ஏனென்றால், ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஆப்கள், இப்போது மக்களின் தனிப்பட்ட டேட்டாக்கள் அடங்கிய களஞ்சியமாக மாறிவிட்டது. அப்படி, கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் தனிப்பட்ட டேட்டாக்களை சேமிக்க கூகுள் டிரைவ் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

மாயமாகும் டிரைவ் ஃபைல்ஸ்.. உடனே காப்பி பண்ணிடுங்க.. Google எச்சரிக்கை!

கூகுள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையில் கோடிக்கணக்கான மக்கள் இந்த ஆப்பை ஸ்மார்ட்போன்களிலும், லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களிலும் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் கல்வி, வேலை சார்ந்த டாக்குமெண்ட்டுகள் முதல் தனிப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் வரையில் சேமிக்கப்பதை அதன் யூசர்கள் வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட கூகுள் டிரைவில் இருந்து ஃபைல்கள் மாயமாகிறது (Google Drive Missing Files) என்றால் எப்படி இருக்கும்? அதுவும் அந்த டேட்டாக்களை திரும்ப பெற முடியாது என்று சொன்னால் யூசர்களுக்கு சற்று பீதி கிளம்பும் அல்லவா? அப்படிப்பட்ட சம்பவம் தான் நடந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவம் இப்போது, கூகுள் நிறுவனத்தின் கவனத்துக்கே சென்றுவிட்டது.

தென் கொரியாவை சேர்ந்த கூகுள் டிரைவ் யூசர் ஒருவரது ஃபைல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகி இருக்கிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த யூசர் தன்னுடைய பழைய ஃபைல்களையும் தேடிப்பார்த்துள்ளார். அப்போது தான், கடந்த மே மாதத்தில் இருந்து சேமிக்கப்பட்ட எந்த ஃபைல்களும் அதில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆகவே, கிட்டத்தட்ட 6 மாதங்கள் சேமிக்கப்பட்ட ஃபைல்கள் மாயமாகி இருக்கின்றன. இதுகுறித்து அந்த யூசர் கூகுள் கஸ்டமர் சப்போர்ட் (Google Customer Support) சென்று புகார் எழுப்பியிருக்கிறார். அதில் "எனது கூகுள் டிரைவ் ஃபைல்கள் திடீரென மாயமாகிவிட்டன. எனது ஆக்டிவிட்டி 2023 மே மாதத்துக்கு சென்றுவிட்டது. அதற்கு பின் நான் சேமித்த ஃபைல்கள் மட்டுமல்லாமல், எனது ஆக்டிவிட்டியும் மாயமாகிவிட்டது.

மாயமாகும் டிரைவ் ஃபைல்ஸ்.. உடனே காப்பி பண்ணிடுங்க.. Google எச்சரிக்கை!

இதுகுறித்து தென் கொரியாவின் கூகுள் அலுவலர்களிடம் முறையிட்டேன். அவர்களும் ரிக்கவரி செய்து முயற்சித்து பார்த்தனர். ஆனால், எனது ஃபைல்கள் திரும்ப கிடைக்கவில்லை. இந்த ஃபைல்கள் எனக்கு மிகவும் முக்கியமாவை. இதை சரி செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று ஒரு சிலருக்கு மட்டுமே நடந்திருக்கும் என்று நினைக்கும் வேளையில், அவரைப்போன்று தென் கொரியாவில் மட்டும் 200க்கும் மேற்பட்ட கூகுள் டிரைவ் யூசர்களுக்கு இதே பிரச்சனை நடந்துள்ளது.

இதையறிந்த கூகுள் நிறுவனம் மற்ற நாடுகளிலும் இதுபோன்ற புகார் எழுவதற்குள் இந்த பிரச்சனையை தடுக்க கூகுள் டிரைவ் டீம்மை முடுக்கிவிட்டுள்ளது. கூகுளின் முதல்கட்ட ஆய்வில் இந்த ஃபைல்கள் மாயமாவது, டெக்ஸ்டாப்பில் பயன்படுத்தப்படுவரும் கூகுள் டிரைவ் ஆப்பில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதுதொடர்பான அப்டேட்டை வழங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்த கூகுள் நிறுவனம் தரப்பில், "கூகுள் டிரைவ் டெஸ்க்டாப் ஆப் யூசர்களுக்கான (v84.0.0.0 - 84.0.4.0) வெர்ஷன்களில் சிங்க் பிரச்சனை (Sync Issue) இருப்பதை கண்டறிந்துள்ளோம். அதை சரி செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வெர்ஷன்களுக்கான அப்டேட்களையும் விரைவாக கொடுக்க இருக்கிறோம்.

இந்த நேரத்தில் உங்களது ஹார்ட் டிரைவில் (Hard Drive) ஸ்பேஸ் இருந்தால், கூகுள் டிரைவில் வைத்திருக்கும் டேட்டாக்களை காப்பி செய்து வைத்து கொள்ளுங்கள்" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மற்ற நாடுகளில் இருக்கும் கூகுள் டிரைவ் யூசர்கள் தங்களது ஃபைல்களை காப்பி செய்து வைக்க தொடங்கி விட்டனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Investigating on Google Drive Missing Files Linked With Desktop App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X