வாடிக்கையாளர்களுக்கு ஜிமெயில் வழங்கியுள்ள ஆச்சரியமான புதிய வசதி.!

தற்போது அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதியான அண்டூ செண்ட் இமெயில் என்ற ஆப்சனை ஜிமெயிலின் மொபைல் வெர்ஷனுக்கு மட்டும் வழங்கியுள்ளது.

|

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையில் தற்போது ஒரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் டெக்னாலஜியின் ராஜா என்று அழைக்கப்படும் கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் சேவையில் ஒரு ரகசிய மோட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரகசிய மோட் மூலம் ஜிமெயில் பயனாளிகள் மிக முக்கியமான, ரகசியமான மற்றும் உணர்ச்சிபூர்வமான செய்திகளை பாதுகாப்புடன் அனுப்பலாம். இதற்காக ஜிமெயில் பயனாளிகள் எக்ஸ்பைரஷன் தேதி மற்றும் 2எப்.ஏ பாஸ்வேர்டு ஆகியவற்றை தனியாக செட் செய்ய வேண்டும். இந்த நிலையில் இந்த ஜிமெயில் நிறுவனம் தற்போது மிகவும் ஆச்சரியம் தரத்தக்க புதிய வசதி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வசதி தற்போது ஆண்ட்ராய்டில் உள்ள ஜிமெயில் செயலியில் இயங்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஜிமெயில் வழங்கியுள்ள ஆச்சரியமான புதிய வசதி.!

ஆண்ட்ராய்டு ஆராய்ச்சியாளர்களின் கருத்தின்படி ஜிமெயில் தற்போது அனுப்பிய மெயிலை திரும்ப பெறும் வசதியான அண்டூ செண்ட் இமெயில் என்ற ஆப்சனை ஜிமெயிலின் மொபைல் வெர்ஷனுக்கு மட்டும் வழங்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த புதிய அண்டு செண்ட் இமெயில் என்பது விரைவில் வெப் வெர்ஷனுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் வெர்ஷனில் கிடைத்திருக்கும் இந்த புதிய வசதியால் ஜிமெயில் பயனாளிகள் மிகுந்த பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த வசதியை ஜிமெயில் பயனாளிகள் பயன்படுத்த ஒருசில நொடிகள் மட்டுமே கால அளவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செயலியில் உள்ள ஜிமெயிலில் அண்டூ என்ற திரும்ப பெறும் வசதி ஒருசில வினாடிகள் மட்டுமே இமெயிலின் கீழே தோன்றும். இதற்கு முன்னர் ஒரு இமெயில் அனுப்பியவுடன் ஒரு கருப்பு நிற பாரில் இமெயில் அனுப்பப்பட்டுவிட்டதாக வரும் நோட்டிபிகேஷன் இனி வராது. அதற்கு பதிலாக வலது புறத்தில் இந்த அண்டூ வசதி தோன்றும்


வெப் வெர்ஷனில் உள்ளாது போலவே இந்த அண்டூ செண்ட் இமெயில் வசதி தற்போது வழங்கபப்ட்டுள்ளது. அனுப்பிய இமெயிலை திரும்ப பெறவோ, அல்லது அனுப்பிய மெயிலில் திருத்தம் செய்யவோ, வேறு ஏதேனும் மாற்றம் செய்யவோ இந்த வசதியை பயனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜிமெயில் பயனாளிகள் இந்த அண்டூ செண்ட் மெயில் ஆப்சனை கிளிக் செய்துவிட்டால், அந்த மெயில் திரும்ப பெற்று கொண்டிருக்கும் நோட்டிபிகேஷன் திரையில் தோன்றும். அதன் பின்னர் மீண்டும் கம்போஸ் மெயில் சென்று உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து அதன்பின்னர் எல்லாம் சரியாக இருக்கின்றதா? என்பதை சரிபார்த்த பின்னர் மீண்டும் அதே இமெயிலை அனுப்பி கொள்ளலாம்

வாடிக்கையாளர்களுக்கு ஜிமெயில் வழங்கியுள்ள ஆச்சரியமான புதிய வசதி.!

மேலும் இந்த புதிய அண்டூ செண்ட் இமெயில் வசதியான ஆண்ட்ராய்டு ஜிமெயில் செயலியில் 8.7 வெர்ஷன் மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்களில் மட்டுமே செயல்படும். எனவே அதற்கு குறைவான வெர்ஷனில் உள்ளவர்கள் இந்த வசதியை பெற அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம். மேலும் அனைத்து வெர்ஷன்களுக்கும் இந்த வசதி செயல்படும் வகையில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Best Mobiles in India

English summary
Google introduces Undo sent email feature for Gmail on Android: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X