Google Maps யூஸ் பண்றீங்களா.. சத்தமின்றி அறிமுகமானது புதிய வசதி.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியை உலக முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த கூகுள் மேப்ஸ் செயலிக்கு போட்டியாக பல ஆப்கள் வந்துவிட்டன. ஆனாலும் பல முக்கியமான அம்சங்கள் இந்த கூகுள் மேப்ஸ் செயலியில் உள்ளதால் தான் இன்னும் அதிக மக்கள் இந்த கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்துகின்றனர்.
கூகுள் மேப்ஸில் ஜெமினி
இந்நிலையில் கூகுள் மேப்ஸில் ஜெமினி (Gemini) அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இனி கூகுள் மேப்ஸ் ஆனது ஜெமினி உடன் இணைந்து வழிகாட்டும். அதுவும் கூகுள் மேப்ஸில் முதல்முறையாக கைகளைக் கையாளாமல், உரையாடல் முறையில் இயங்கும் டிரைவிங் அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறோம் என கூகுள் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

கூகுள் மேப்ஸில் ஜெமினி இணைக்கப்பட்டுள்ளதால், உங்கள் பயணப் பாதையில் உள்ள இடங்களைத் தேடுவது, மின்சார வாகன (EV) சார்ஜர்கள் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது, அல்லது ஆண்ட்ராய்டில் உங்கள் வருகை நேரத்தை (ETA) நண்பர்களுடன் பகிர்வது இன்னும் எளிதாகியுள்ளது. அதாவது இனி எதற்கும் கையால் தேடவேண்டிய அவசியம் இருக்காது, நீங்கள் நேரடியாகக் கேட்டால் போதும், அதுவே அனைத்தையும் தெளிவாக காட்டிவிடும்.
கூகுள் மேப்ஸ் செயலியில் இணைக்கப்பட்டுள்ள ஜெமினியிடம் நீங்கள் பல கேள்விகளை கேட்டு உதவியைப் பெறலாம். உதாரணத்திற்கு,என் பயணப்பாதையில் குறைந்த செலவிலான உணவகம் ஏதாவது இருக்கிறதா? இரண்டு மைல் தூரத்துக்குள் இருக்குமா?அங்கே பார்க்கிங் வசதி இருக்குமா? என்று கேட்கலாம். அதற்குப் பிறகு, சரி அங்கே போகலாம் என்று சொல்லி வழிகாட்டலை தொடங்கலாம். இதோடு மட்டுமல்ல, அப்படியே, நாளை மாலை 5 மணிக்கு நடக்கும் கால்பந்து பயிற்சிக்கான ஒரு காலண்டர் நிகழ்வையும் சேர்க்க முடியுமா? என்றும் கேட்கலாம்.
அதோடு, கூகுள் மேப்ஸில் ஜெமினி போக்குவரத்து தடைகள் பற்றிய தகவல்களை அனைவருக்கும் பகிர்வதையும் மேலும் எளிதாக்குகிறது. அதாவது இந்த இடத்தில் ஒரு விபத்து தெரிகிறது, முன்புறம் வெள்ளம் இருப்பதாகத் தோன்றுகிறது, அல்லது அங்கே போக்குவரத்து மந்தமாக உள்ளது, கவனமாக இருங்கள் என்று போக்குவரத்து தடைகள் பற்றிய தகவல்களை பகிரமுடியும்.
கூகுள் மேப்ஸ் ஜெமினியுடன் இணைந்து போக்குவரத்து விளக்குகள் மற்றும் நிறுத்தச் சின்னங்கள் மட்டுமின்றி, உங்கள் பயணப்பாதையில் எளிதாகக் காணக்கூடிய பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பிரபலமான கட்டிடங்கள் போன்ற முக்கிய அடையாளங்களையும் காட்டும்.

ஆனால் ஜெமினி இணைக்கப்பட்ட கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் அம்சம் தற்போது அறிமுகம் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த அம்சம் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த கிடைக்கும். குறிப்பாக கூகுள் மேப்ஸ் செயலியில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
கூகுள் மேப்ஸ் செயலிக்கு போட்டி
அதேபோல் கூகுள் மேப்ஸ் செயலிக்கு போட்டியாக வந்த Mappls செயலி ஆனது தற்போது இந்தியாவில் அதிக பிரபலமாகி வருகிறது. அதாவது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேப் மை இந்தியா நிறுவனத்தின் மேப்பிள்ஸ் (Mappls) செயலி, கூகுள் மேப்பிற்கு போட்டியாக வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இந்த மேப்பிள்ஸ் செயலியில் 3டி காட்சிகள், ஏஐ அடிப்படையிலான நெரிசல் குறைப்பு வழிகாட்டி, சாலை பாதுகாப்பு எச்சரிக்கைகள், டோல் செலவு கணக்கிடும் வசதி, மேலும் 6 எழுத்துக்கள்/எண்களால் துல்லியமான இருப்பிடத்தை பகிரும் அம்சம் போன்ற சிறப்பு வசதிகள் உள்ளன. இவை பயணத்தை பாதுகாப்பாகவும் சுலபமாகவும் மாற்றுகின்றன.


Click it and Unblock the Notifications








