கூகுள் டிவி பயனர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. சொன்னால் போதும்.. அதுவே கொடுக்கும்.. இதோ முழு விவரம்..
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. மேலும் கூகுள் தற்போது கூகுள் டிவியில் ஜெமினி ஏஐ பயன்படுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது லாஸ்வேகாசில் நடந்த சிஇஎஸ்2026 நிகழ்வில் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம். ஆனால் இந்த வசதி முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட TCL ஸ்மார்ட் டிவிக்கு கிடைக்கும் என்றும், அதன்பின்னர் எதிர்வரும் மாதங்களில் மற்ற கூகுள் டிவிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கூகுள் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதியை பயன்படுத்தி கூகுள் டிவி பயனர்கள் தங்களது குரல் மூலம் வாய்ஸ் கமாண்ட் முறையில் டிவியை கட்டுப்படுத்த முடியும். அதாவது அலெக்சாவை பயன்படுத்தி நாம் எவ்வாறு டிவியை கட்டுப்படுத்துவோமோ அதேபோன்று கூகுள் பயனர்களும் இனி ஜெமனி ஏஐ பயன்படுத்தி தங்களது ஸ்மார்ட் டிவியை எளிமையாக கட்டுப்படுத்த முடியும்.
அதேபோல் நீங்கள் டிவி பார்க்கும்போது உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை ரீகேப் செய்யவோ அல்லது விருப்பமான நிகழ்ச்சிகளின் பெயரை கூறினாலே அல்லது உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சி ஜார்னரை கூறி அதற்கேற்றபடி உங்களுக்கு ஏற்ற சீரிஸ்களை பரிந்துரை செய்யும்படியும் இதை கேட்கலாம். பின்பு உங்களுக்குப் பிடித்த நடிகர்களின் பெயர் போன்றவற்றைக் கூறியும் நிகழ்ச்சிகளை ப்ளே செய்ய சொல்லலாம்.
ஒரு உதாரணத்திற்கு தற்போது அனைவரும் விரும்பி பார்க்கும் ஏலியன்கள் அடிப்படையாக கொண்ட சீரிஸ் என்ன என்று நீங்கள் ஜெமினியிடம் கேட்டால் அதுவே பல மொழிகளில் நீங்கள் கேட்ட படங்கள் அல்லது அதே வகையிலான பல நிகழ்ச்சிகளை உங்களுக்குப் பரிந்துரை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜெமினி ஏஐ வசதியில் இருக்கும் யூசர் இன்டர்ஃபேஸ் நவீனமாகவும் அதேசமயம் மிகவும் எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிளென்டட் டெக்ஸ்ட், லைவ் ஸ்போர்ட்ஸ் ஸ்கோர் ஆகியவையும் இதில் அடங்கும். பொழுதுபோக்கைத் தாண்டி இந்த ஜெமினியை கல்வி விஷயத்திற்கும் பயன்படுத்த முடியும் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை அதனிடம் கேட்டு விடைகளைப் பெற முடியும். குறிப்பாக கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளையும் பரிந்துரைக்கச் சொல்ல முடியும் என்பதைக் கவனத்தில் கொள்க.
ஜிமெயில் சேவையில் புது வசதி
கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஜிமெயில் சேவையில் புது வசதி கொண்டுவர உள்ளதாக தகவல் தெரிவித்தது. அதன்படி கூகுள் நிறுவனம் பயனர்களுக்குப் பழைய ஜிமெயில் யூசர்நேமை மாற்றிக் கொள்ளும் வசதியைச் சோதனை அடிப்படையில் உருவாக்கி வருகிறது. குறிப்பாக இதன் மூலம் புதிய கூகுள் கணக்கு உருவாக்காமல் அதே கணக்கில் புதிய ஜிமெயில் முகவரியைத் தேர்வு செய்ய முடியும். குறிப்பாக சிறிய வயதில் உருவாக்கிய மெயில் ஐடியை இப்போது மாற்ற நினைக்கும் பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
இந்த புதிய அப்டேட் ஆனது @gmail.com என முடிவடையும் மெயில் முகவரிகளுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கூகுள் கணக்கில் பழைய ஜிமெயில் ஐடியை மாற்றி புதிய ஜிமெயில் யூசர்நேமை தேர்வு செய்யலாம், ஆனால் இந்த மாற்றத்தினால் Google Drive, Photos, YouTube, Play Store போன்ற போன்ற சேவைகளில் உள்ள டேட்டா, வாங்கிய சப்ஸ்கிரிப்ஷன்கள் அல்லது கணக்கு வரலாற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

பழைய மெயில் ஐடி, ரிகவரி மெயிலாக சேமிக்கப்படும் என்பதால், பாதுகாப்பு அம்சமும் இருக்கும். அதேசமயம் இந்த புதிய வசதி அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காது. கூகுள் நிறுவனம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதியை வெளியிடும் என்று தெரிவித்துள்ளது. நீங்கள் ஒருமுறை யூசர்நேம் மாற்றம் செய்த பிறகு, பழைய ஜிமெயில் ஐடி மற்றும் புதிய ஜிமெயில் ஐடிக்கும் வரும் மெயில்கள் ஒரே இன்பாக்ஸிலேயே கிடைக்கும். மேலும், லாகின் செய்யும்போது இரு மெயில் முகவரிகளையும் பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








