Home
News

அடேய் ஆப்பிள் ஓரம்போ.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு புதிய அம்சத்தைக் கொண்டுவந்த Google.. உற்சாகத்தில் பயனர்கள்..

ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு தனித்துவமான பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்துவந்தது. ஆனால் தற்போது கூகுள் நிறுவனமும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு சிறந்த பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக கூகுள் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் கூகுள் (Google) நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பைண்ட் மை டிவைஸ் (FIND MY DEVICE) என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் சிறப்பு என்னென்ன என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு போன்களுக்கு புதிய அம்சத்தைக் கொண்டுவந்த Google..

கூகுள் அறிமுகம் செய்த பைண்ட் மை டிவைஸ் அம்சம் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும். அதாவது காணாமல் போகும் போன்கள், ஹெட்போன்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்க இந்த அம்சம் பயன்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த பைண்ட் மை டிவைஸ் அம்சம் முதல் கட்டமாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு உள்ள பயனர்கள் தற்போது இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும். இந்தியாவில் இந்த அம்சம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் இந்த பைண்ட் மை டிவைஸ் அம்சம் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு போன்களுக்கு புதிய அம்சத்தைக் கொண்டுவந்த Google..

அதேபோல் இந்த புதிய அம்சம் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிமையாகக் கண்டறிய முடியும். குறிப்பாக ஆண்ட்ராய்டு சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் கூட இந்த அம்சம் சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களைக் கண்டறியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும் கூட கண்டறிய முடியும்.

தற்போது கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் அம்சம் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்குப் பின் வெளியான வெர்ஷன்களில் வழங்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பான முறையில் இந்த ஃபைண்ட் மை டிவைஸ் அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்களை வேறு யாராலும் அணுக முடியாது என்றும் கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது உங்களது லொகேஷன் தொடர்பான தரவுகள் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் முறையில் சேமிக்கப்படும் என்பதால் உங்களது தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு போன்களுக்கு புதிய அம்சத்தைக் கொண்டுவந்த Google..

கூகுளின் பைண்ட் மை டிவைஸ் அம்சம் பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ என தேர்வுசெய்யப்பட்ட போன்களில் உள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சம் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் கூகுள் நிறுவனம் இதேபோன்று பல்வேறு புதிய அம்சங்களை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கூகுள் நிறுவனம் தனது I/O 2024 நிகழ்வை வரும் மே 14-ம் தேதி நடத்துகிறது. இந்த நிகழ்வில் கூகுள் நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் முக்கியமான தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google introduced the Find My device network for Android users: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X