Home
News

இனி Google பிளே ஸ்டோரில் அரசு செயலிகளை டவுன்லோடு செய்யும் போது மறக்காம இத செக் பண்ணுங்க.. ஏன்?

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு வசதிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிளே ஸ்டோரில் ஒரு புதிய அம்சத்தை கொண்டுவந்துள்ளது கூகுள் நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது போலி செயலிகளை மொபைலில் இன்ஸ்டால் செய்தால், அவை உளவுபார்ப்பது முதல் தனிப்பட்ட தரவுகளைக் களவாடுவது வரை விபரீதங்களுக்கு வழி வகுக்கும். ஆனாலும் கூகுள் பிளே ஸ்டோரில் (GOOGLE PLAY STORE) இதுபோன்ற போலி செயலிகளைக் கட்டுப்படுத்த பலவகையிலும் கூகுள் நிறுவனம் முயன்று வருகிறது.

பிளே ஸ்டோரில் ஆப் டவுன்லோடு செய்யும் போது மறக்காம இத செக் பண்ணுங்க

இந்நிலையில் அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் செயலிகள் மத்தியில் ஊடுருவலைத் தவிர்க்க புதிய ஏற்பாட்டினை செய்துள்ளது கூகுள் நிறுவனம். அதாவது அரசு நிறுவனங்களின் செயலிகளுக்கு கீழே கவர்ன்மெண்ட் (Government) என்ற அடையாளத்தை தற்போது கண்டுகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இனி அரசு சார்ந்த mAadhaar, Digi Locker மற்றும் mParivahan போன்ற முக்கியமான செயலிகளை தேடும்போது, அதன் Government என்ற ஐகானைக் உறுதி செய்துகொள்வது நல்லது. அதுவும் ஐகானை கிளிக் செய்யும் போது வரும் பாப்-அப் இந்த செயலி அரசு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது சரிபார்க்கப்பட்டுள்ளது என்ற தகவலைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளே ஸ்டோரில் ஆப் டவுன்லோடு செய்யும் போது மறக்காம இத செக் பண்ணுங்க

அதாவது எப்போதுமே கூகுளின் பிளே ஸ்டோரில் செயலிகளை டவுன்லோடு செய்யும் முன்பு அதன் பாதுகாப்பு குறித்த சான்றையும் சரிபார்ப்பது நல்லது. குறிப்பாக இதன் மூலம் பாதுகாப்பற்ற மற்றும் போலிகளை பயனர்களைத் தவிர்த்து விடலாம். இப்போது கூடுதல் அம்சமாக அரசின் செயலிகளைத் தனி பேட்ஜ் அடையாளம் மூலம் எளிதில் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாக அரசு வழங்கும் செயலி என்றதும் சாமானியர்கள் மத்தியில் அதன் மீதான நம்பகத்தன்மை சற்று அதிகமாக இருக்கும். போலி ஆப் என்று தெரியாது. அது கோரும் தகவல்களை அளிக்கவும், இணைப்புகளை கிளிக் செய்யவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பிளே ஸ்டோரில் செயலிகளில் அரசின் செயலிகளைத் தனித்து அடையாளம் காட்டுவது கூடுதல் அவசியமாகிறது.

இந்த நிலையில் தான் இந்தியாவில் உள்ள கூகுள் பயனர்களுக்கு பிளே ஸ்டோரின் புதிய அப்டேட்டாக இந்த பேட்ஜ் சரிபார்ப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி 14 நாடுகளை சேர்ந்த சுமார் 2000 செயலிகள் இவ்வாறு பேட்ஜ் அனுகூலத்துடன் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் ஏமாற்றுப் பேர்வழிகளின் வலையில் சாமானியர்கள் சிக்காதிருக்கவும் இந்த ஏற்பாடு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீபத்தில் கூகுள் (Google) நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பைண்ட் மை டிவைஸ் (FIND MY DEVICE) என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. கூகுள் அறிமுகம் செய்த பைண்ட் மை டிவைஸ் அம்சம் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும்.

பிளே ஸ்டோரில் ஆப் டவுன்லோடு செய்யும் போது மறக்காம இத செக் பண்ணுங்க

காணாமல் போகும் போன்கள், ஹெட்போன்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்க இந்த அம்சம் பயன்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பைண்ட் மை டிவைஸ் அம்சம் முதல் கட்டமாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் கூட இந்த அம்சம் சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களைக் கண்டறியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும் கூட கண்டறிய முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google introduced new feature to find official government apps in the Play Store: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X