போய் வா நண்பா.. Google Assistant- க்கு குட்பை.. இனிமேல் இதுதான்!
கூகுள் நிறுவனம் அதன் வருடாந்திர மேட் பை கூகுள் 2025 நிகழ்வில் (Made By Google 2025 Event), அதன் புதிய ஸ்மார்ட்போன்கள் (பிக்சல் 10 சீரீஸ்), புதிய ஸ்மார்ட் வாட்ச் (பிக்சல் வாட்ச் 4) மற்றும் புதிய இயர்பட்ஸ் (பிக்சல் பட்ஸ் 2ஏ) ஆகிய ஹார்ட்வேர்களை மட்டுமே அறிமுகம் செய்யவில்லை!
வேறு என்ன அறிமுகமானது? உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ஜெமினை ஃபார் ஹோம் (Gemini for Home) என்கிற ஏஐ அசிஸ்டெண்ட்டையும் (AI Assitant) அறிமுகம் செய்துள்ளது. இது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் ஹோம்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஏஐ அசிஸ்டன்ட் ஆகும்!

கூகுளின் மிகவும் மேம்பட்ட ஜெமினை மாடல்களில் கட்டமைக்கப்பட்ட ஏஐ அசிஸ்டண்ட் ஆனது - மீடியா பிளேபேக் மற்றும் ஸ்மார்ட் டிவைஸ் கட்டுப்பாடு தொடங்கி சமையல் மற்றும் சரிசெய்தல் வரை அன்றாட பணிகளில் மிகவும் இயற்கையான, அறிவார்ந்த மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உதவியை வழங்கும் என்று கூகுள் உறுதியளிக்கிறது.
ஸ்மார்ட் வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட தனித்துவமான திறன்களுடன் ஜெமினை ஃபார் ஹோம் ஆனது நம்பகமான, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ அசிஸ்டன்ட்-ஐ வழங்கும் மற்றும் உங்கள் வீட்டு உள்ள அனைத்து ஸ்மார்ட் டிவைஸ்களின் சிக்கலான பணிகளை நிர்வகிக்கும் திறன்களை கொண்டிருக்கும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஜெமினை ஆனது கூகுள் அசிஸ்டண்டை மாற்றுகிறது: நெஸ்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் டிஸ்பிளேக்களில் உள்ள கூகுள் அசிஸ்டண்டை ஜெமினை ஃபார் ஹோம் கொண்டு மாற்ற தயாராக இருப்பதாகவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெமினி ஃபார் ஹோம் ஆனது ஆழமான பகுத்தறிவு, மேம்பட்ட தேடல் திறன்கள் மற்றும் அதிக உரையாடல்களை வழங்கும். இருப்பினும், பயனர்கள் அதை செயல்படுத்த இன்னமும் 'ஹே கூகுள்' என்று தான் சொல்ல வேண்டும்!
இந்த புதிய ஏஐ அசிஸ்டண்ட் உடன் ஜெமினை லைவ்-வும் (Gemini Live) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு உரையாடல் மாடலாகும். இது வேக் வோர்ட்-ஐ மீண்டும் சொல்லாமல் முன்னும் பின்னுமாக உரையாட அனுமதிக்கிறது. உதாரணத்திற்கு "ஹே கூகுள், சாட் செய்யலாம்" என்று ஜெமினை லைவ் உரையாடலை தொடங்கி, அதிலிருந்து, இயல்பான முன்னும் பின்னுமாக விவாதம் செய்யலாம். அதாவது இனி அடிக்கடி "ஹே கூகுள்" சொல்ல தேவையில்லை!
ஜெமினை லைவ் வழியாக புதிய கருத்துக்களை ஆராயுங்கள், ஒரு திறமையை கற்றுக்கொள்ளுங்கள், யோசனைகளை பற்றி இன்னும் ஆழமாக சிந்திக்கவும் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெறவும் என்றும் கூகுள் கூறியுள்ளது. இதன்கீழ் நீங்கள் உங்கள் விவாதத்தை செம்மைப்படுத்தலாம் அல்லது பதில்களில் குறுக்கிடலாம், எனவே நீங்கள் தேடும் குறிப்பிட்ட தகவலை விரைவாக பெறுவீர்கள் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
புதிய கூகுள் பிக்சல் 10 சீரீஸ் விலை விவரங்கள்: கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இதேபோல கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக உள்ள பிக்சல் 10 ப்ரோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ.1,72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பிக்சல் வாட்ச் 4 ஸ்மார்ட்வாட்ச்சின் விலை: கூகுள் பிக்சல் வாட்ச் 4 மாடலின் 41மிமீ (வைஃபை) வேரியண்ட் ஆனது ரூ.39,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்வாட்ச் ஆனது 45மிமீ அளவிலும் கிடைக்கிறது, இதன் விலை ரூ.43,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பிக்சல் பட்ஸ் 2ஏ விலை: இந்தியாவில் கூகுள் பிக்சல் பட்ஸ் 2ஏ மாடல் ஆனது ரூ.12,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து ரூ 22,900 விலையில் கிடைக்கும் பிக்சல் பட்ஸ் ப்ரோ 2 மாடலின் புதிய மூன்ஸ்டோன் கலர் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








