இந்தியாவிலேயே முதல் இடம்- ஜெய் பீம் திரைப்படத்திற்கு கூகுள் கொடுத்த மாபெரும் அங்கீகாரம்: அமோக புகழ்!

|

கூகுள் இந்தியா தனது "இயர் இன் சர்ச்" அதாவது ஆண்டு தேடுதல் முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்மூலம் ஜெய் பீரம், ஷெர்ஷா ஆகியவை பட்டியலில் முன்னணியில் இருக்கின்றன. அதேபோல் 2021-ல் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட திரைப்பட பிரபலமாக ஆர்யன் கான் இருக்கிறார். கூகுள் இந்திய தனது "இயர் இன் தேடல்" முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த தேடல் போக்குகளை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நடிகர் சூர்யாவின் "ஜெய் பீம்" படம் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

ஜெய் பீம் திரைப்படம்

ஜெய் பீம் திரைப்படம்

டி.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி மிகவும் பிரபலமடைந்த திரைப்படம் ஜெய் பீம். இந்த திரைப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டெர்டைன்மென்ட் தயாரித்துள்ளது. இதற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், விஜோமோள் ஜோஸ், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. பொய்யான திருட்டு வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்படும் தன் கணவருக்கு நீதி கிடைக்க பெண் நடத்தும் சட்டப்போராட்டமும் இந்த சட்டப்போராட்டத்துக்கு வழக்கறிஞர் சந்துரு (நடிகர் சூர்யா) மேற்கொள்ளும் நடவடிக்கையும் வாதமும் இந்த ஜெய் பீம் திரைப்படம் ஆகும்.

இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த ஜெய் பீம்

இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த ஜெய் பீம்

ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்து வருகிறது. ஞானவேல் இயக்கத்தில் தயாரான இந்த திரைப்படம் ராஜகண்ணு என்பவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு நடத்தும் சட்ட போராட்டத்தை தழுவி காட்சியானது. இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு பெற்றதோடு பொது இடங்களில் திரையிடப்பட்டும் வருகிறது. இந்த திரைப்படத்தில் அக்னி கலசம் உடன் கூடிய காலண்டர் காட்சி ஒன்றின் பின்புறத்தில் காட்டப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த காட்சி அவமதிப்பது போல் இருப்பதாக வன்னியர் சங்கத்தினர் புகார் கொடுத்தனர். இந்த திரைப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஜெய்பீம்

பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஜெய்பீம்

பிளாக்பஸ்டர் திரைப்படமாக ஜெய்பீம் அமைந்தது. இது இந்த ஆண்டின் அதிகம் தேடப்பட்ட திரைப்படமாகும். இதைத் தொடர்ந்து ஷேர்ஷா என்ற பாலிவுட் திரைப்படம் அடுத்த வரிசையில் இருக்கிறது. கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை க்யாரா அத்வானி நடிப்பில் தயாரான திரைப்படம் ஷேர்ஷா ஆகும். இந்த திரைப்படம் அமேசான் பிரைம்-ல் வெளியானது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பிரபல இந்தி படங்கள் ஆன பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ராதே மற்றும் நடிகர் அக்‌ஷய் குமாரின் 'பெல் பாட்டம்' ஆகிய படங்கள் பிரபலமாக உள்ளன. ராதே திரைப்படம் கேங்ஸ்டர் கதையாகும், அதேபோல் பெல் பாட்டம் உளவுத் திரில்லர் கதை அம்சமாகும். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படங்கள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படங்கள்

'Godzilla vs Kong' மற்றும் 'Marvel's Eternals' ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படங்களாகும். இந்த ஆண்டின் சிறந்த ட்ரெண்டிங் படங்கள் பட்டியலில் த்ரிஷ்யம் 2 மற்றும் புஜ் தி ப்ரைட் ஆஃப் தி இந்தியா ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாலிவுட் நடிகர்கள் அஜஸ் தேவ்கன் மற்றும் சஞ்சஸ் தத், நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா மற்றும் நோரா ஃபதேஷி ஆகியோர் புஜ் தி பிரைட் ஆஃப் இந்திய திரைப்பட நாயகர்கள் ஆவார்கள்.

2021-ல் கூகுள் தேடலில் அதிகம் பதிவு செய்த திரைப்படங்கள்

2021-ல் கூகுள் தேடலில் அதிகம் பதிவு செய்த திரைப்படங்கள்

ஜெய் பீம்
ஷெர்ஷா
ராதே
பெல் பாட்டம்
எடர்னல்ஸ்
குரு
சூர்யவன்ஷி
காட்ஜில்லா Vs காங்
த்ரிஷ்யம் 2
புஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா

திரைப்பட பிரமுகர்கள்

திரைப்பட பிரமுகர்கள்

அதேபோல் கூகுள் தேடல் 2021-ல் அதிகம் இடம்பெற்ற திரைப்பட பிரமுகர்கள் குறித்து பார்க்கையில், ஆர்யன் கான் இருக்கிறார். இவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன், போதைப்பொருள் வழக்கில் அக்டோபர் 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டு அக்டோபர் 28 ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google India's Year in Search Results: Jai Bhim Become the Most searched Movies in Google

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X