கூகுள் இந்தியா இணையதள விற்பனை மேளா, சலுகை விலை பொருட்களை வாங்க முந்துங்கள்

Posted By:

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூகுளின் ஆன்லைன் விற்பனை மேளா இன்று துவங்கியது, இதில் கிட்டத்தட்ட 400க்கும் அதிகமான விற்பனையாளர்கள் எக்கச்சக்கமான சலுகைகளோடு விற்பனைக்கு காத்திருக்கின்றனர். ஆன்லைன் விற்பனை மேளா இன்று துவங்கி வெள்ளி கிழமை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

[மிகவும் உபயோகமான கணினி தொழில்நுட்ப போக்குகள்]

இந்தாண்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 'லான்ச் கார்னர்' பகுதியில் சமீபத்தில் வெளியான பொருட்களை வாங்க முடியும், இதை முன்னிட்டு கூகுளின் நெக்சஸ் 6 இப்பகுதியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மாதம் நெக்சஸ் 6 வெளியானதை தொடர்ந்து இந்தியாவில் விரைவில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 கூகுள் இணையதள விற்பனை மேளா,சலுகை விலை பொருட்களைக்கு முந்துங்கள்

மேலும் 'ப்ரீ பார்டி' என்ற புதிய அம்சமும் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதில் வாடிக்கையாளர்கள் 14 நிமிடங்களுக்கு இலவசமாக பொருட்களை வாங்க முடியும். குறிப்பிட்ட பிரான்டகளின் பொருட்களை மட்டும் நிபந்தனைகளுடன் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[ஐபோன் 6 குறித்து உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்]

முதல் முறை பயனாளிகளுக்காக ரூ.299 கார்னரும் துவக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக சலுகை கொண்ட பொருட்களுக்கு இலவச டெலிவரி மற்றும் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பிலிப்ஸ், யுபர் என முன்னனி நிறுவனங்களின் தாயரிப்புகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Google's much-awaited Great Online Shopping Festival (GOSF) will kicked off today and its featuring more than 400 partners offering deals and discounts.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot