பேஸ்புக் போர்டல் சாதனத்திற்கு போட்டியாக கூகுள் அறிமுகப்படுத்தும் ஹோம் ஹப்.!
தொழில்நுட்ப சந்தையில் கிடைக்கும் 1000-க்கும் அதிகமான பிரபல பிரான்டுகளில் சுமார் 10,000-க்கும் அதிக ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்க முடியும்.
தொடர்ந்து கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் சாதனங்களை அறிமுகம் செய்தது, இந்த சாதனங்களுக்கு போட்டியாக தற்சமயம் கூகுள் நிறுவனம் ஹோம் ஹப் சாதனத்தை மேட் பை கூகுள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த கூகுள் ஹோம் ஹப் சாதனத்தில் கூகுள் அசிஸ்டன்ட் வசதி, யூடியூப், கூகுள் போட்டோஸ், காலென்டர், மேப்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்வா, சாக் மற்றும் சார்கோல் போன்ற நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.

கூகுள் ஹோம் ஹப்:
கூகுள் ஹோம் ஹப் சாதனம் 7-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் போர்டல் சாதனங்களில் கேமரா உள்ளது, ஆனால் இந்த ஹோம் ஹப் சாதனத்தில் கேமரா வழங்கப்படவில்லை. எனவே இதை வீட்டினுல் நீங்கள் விரும்பும் இடத்தில் வைக்கலாம்.

ரொட்டின்ஸ்:
கூகுள் ஹோம் ஹப் சாதனத்தில் ரொட்டின்ஸ் என்ற அம்சம் வழங்கப்பட்டுள்ளது, இதை கூகுள் ஹப் உங்களது அடுத்த நாள் திட்டங்களை வழங்கும். பின்பு இந்த சாதனத்தில் உள்ள வாய்ஸ் மேட்ச் அம்சம் மூலம் வீட்டில் அதிகபட்சம் ஆறு பேருக்கான தனித்துவ திட்டங்களை அறிந்து கொள்ள முடியும்.

போட்டோ ஃபிரேம்
தொழில்நுட்ப சந்தையில் கிடைக்கும் 1000-க்கும் அதிகமான பிரபல பிரான்டுகளில் சுமார் 10,000-க்கும் அதிக ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்க முடியும். குறிப்பாக இந்த ஹோம் சாதனத்தை டிஜிட்டல் போட்டோ ஃபிரேம் போல செட் செய்து கொள்ளலாம். பின்பு ஸ்பாட்டிஃபை,பன்டோரா, ஐஹார்ட் ரேடியோ போன் சில ஆதரவுகள் கொண்டுள்ளது கூகுள் ஹோம் ஹப்.

விலை
குறிப்பாக தொலைகாட்சிகள், மின்விளஙக்குகள், அலாரம் செட் செய்வது மற்றும் முன்பக்க கதவை பூட்டுவது போன்ற அம்சங்களையும் கூகுள் ஹோம் ஹப் சப்போர்ட் செய்கிறது. பின்பு இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.11,035-ஆக
உள்ளது.


Click it and Unblock the Notifications