Home
News

அப்படி போடு.. சத்தமின்றி Messages செயலியில் புதிய அம்சங்களை கொண்டுவரும் கூகுள்.. இதோ முழு விவரம்..

கூகுள் (Google) நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் அவ்வப்போது புதிய தொழில்நுட்பகளையும் கொண்டுவருகிறது இந்நிறுவனம். இந்நிலையில் கூகுள் மெசேஜிங் செயலியில் புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

கூகுள் மெசேஜ் புதிய அம்சங்கள்

அதாவது indiatvnews வெளியிட்ட தகவலின்படி, கூகுள் நிறுவனம் தனது கூகுள் மெசேஜ் செயலியில் (Google Messages) நோட்டிபிகேஷன்களை ஸ்னூஸ் (snooze) செய்வது மற்றும் வாட்ஸ்அப் செயலியில் இருப்பது போல "அனைவருக்கும் நீக்கு" (Delete for Everyone) போன்ற அம்சங்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சங்கள் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்பட்டு வருகின்றன.

சத்தமின்றி Messages செயலியில் புதிய அம்சங்களை கொண்டுவரும் கூகுள்..

எனவே இதனால் மெசேஜிங் செயலியிலேயே சமூக ஊடகங்களைப் போன்ற செயல்பாடுகளை அனுபவிக்க முடியும். குறிப்பாக இந்த ஸ்னூஸ் அம்சம், மெசேஜ் பிரிவில் வரும் எந்த அறிவிப்புகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உங்களை அனுமதிக்கும். மேலும் "அனைவருக்கும் நீக்கு" (Delete for Everyone) அம்சம் ஆனது நீங்கள் முன்பு அனுப்பிய ஒரு மெசேஜை முழுமையாக நீக்க உதவும்.

கூகுள் நிறுவனம் கொண்டுவந்த புதிய அப்டேட் பல கோடி பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். குறிப்பாக நீங்கள் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பினால் அல்லது அதில் தவறு இருப்பதை கண்டறிந்தால் அனைவருக்கும் டெலிட் ஃபார் எவ்ரி ஓன் ( (Delete for Everyone) மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இது வாட்ஸ்அப் செயலியில் இருப்பதைப் போலவே பெறுநரின் பார்வையில் இருந்து அந்த மெசேஜ் நீக்கப்படுவதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் இந்த புதிய அம்சங்கள் முதன்முதலில் கடந்த பிப்ரவரி மாதம் பீட்டா பயனர்களுக்கு கண்டறியப்பட்டது. தற்போது இந்த அம்சங்கள் அனைவருக்கும் கிடைக்கத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிட் ஃபார் எவ்ரி ஓன் (Delete for Everyone) அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?
டெலிட் எவ்ரி ஓன் அம்சத்தை பயன்படுத்த நீங்கள் அனுப்பிய மெசேஜை நீண்ட நேரம் அழுத்த வேண்டும் (long press). உடனே டெலிட் எவ்ரி ஓன் (Delete for Everyone) மற்றும் டெலிட் ஃபார் மீ (Delete for Me) என இரண்டு விருப்பங்கள் தோன்றும். இதில் மெசேஜ் இரு முனைகளிலும் நீக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் டெலிட் ஃபார் எவ்ரி ஓன் (Delete for Everyone) தேர்வு செய்ய வேண்டும்.

சத்தமின்றி Messages செயலியில் புதிய அம்சங்களை கொண்டுவரும் கூகுள்..

மேலும் வாட்ஸ்அப் செயலியில் ஒரு புதிய அம்சம் வெளியாக உள்ளது. அதாவது வாட்ஸ்அப் குழு அழைப்புகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த புதிய அம்சம் "கை உயர்த்து" (Raise Hand)என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் குழு வீடியோ அழைப்புகளில் பங்கேற்பாளர்கள் பேச விரும்பும் போது மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த உதவும்.

குறிப்பாக வாட்ஸ்அப்-இன் இந்த புதிய அம்சம் மூலம் அழைப்புகளின் போது ஏற்படும் குறுக்கீடுகளைக் குறைத்து, குழு உரையாடல்களை மேலும் ஓழுங்கமைக்கப்ப்ட்டதாகவும், சீராகவும் மாற்ற முடியும். WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய அம்சம் சமீபத்தில் WhatsApp Android 2.25.19.7 பீட்டா அப்டேட்டில் கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google has released new updates to its Messages app: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X