சீனாவைச் சேர்ந்த 2500 யூடியூப் சேனல்களை நீக்கிய கூகுள்?

|

இந்தியாவில் மீண்டும் 47 சீன செயலிகளுக்கு அன்மையில் மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக தடை செய்யப்பட்ட செயலிகளின் க்ளோன்களாக பயன்படுத்தப்பட்டு வந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ன ராணுவும் தீடீரென

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது.இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வந்தது.

 இந்திய அரசு வெளியிட்ட செய்தி

இதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இனி சாம்சங் நேரம்: கேலக்ஸி வாட்ச் 3 அறிமுகம்., விலை என்ன தெரியுமா?இனி சாம்சங் நேரம்: கேலக்ஸி வாட்ச் 3 அறிமுகம்., விலை என்ன தெரியுமா?

குறித்த எங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக, யூடியூ

இந்நிலையில் அமெரிக்காவை தலைமையிமாக கொண்ட கூகுள் நிறுவனத்தின் வீடியோ பகிர்வு தளமான யூடியூப்-ல் சீனாவுடன் தொடர்புடைய தவறான தகவல்கள் வெளியாவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தொடர்ந்து அவற்றைக் களையெடுக்கும் நடவடிக்கையை கூகுள் தொடங்கியுள்ளது.இதுகுறித்த காலாண்டு அறிக்கையில், 'கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடையில் சீனாவுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்த எங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக, யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டன என

தகவல் வெளியாகியுள்ளது..

 சேனல்களில்,

நீக்கப்பட்ட பெரும்பாலான சேனல்களில், தேவையற்ற அல்லது அரசியல் சாராத உள்ளடக்கம் இருந்துள்ளன. ஆனால் சில எண்ணிக்கையிலான சேனல்களின், அரசியல் தொடர்புகள் உள்ளடங்கள் இருந்த என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும்

மேலும் நீக்கப்பட்ட 2500சேனல்கள் குறித்த அடையாளத்தை கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை, இருந்தபோதிலும் சமூக ஊடக பகுப்பாய்வு நிறுவனமான கிராபிகாவால் கடந்த ஏப்ரல் மாதம் அடையாளம் காணப்பட்ட, தவறான பிரசாரத்துடன் தொடர்புடைய சேனல்கள்தான் தான் கூகுள் நிறுவனம் நீக்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பின்பு இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் எவ்வித கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை, ஆனால் தவறான தகவல்களை பரப்புவதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீனா ஏற்கனவே மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை!மிரட்டலான கேமிங் Asus ROG Phone 3 சலுகையுடன் இன்று விற்பனை!

ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது,

அதாவது கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ரஷ்யாவுடன் தொடர்பில் இருந்த நடிகர்கள்,

அமெரிக்க அரசியலில் குழுப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் மக்கள் மனதை மாற்றும் தன்மையிலும் நூற்றுக்கணக்கான தகவல்களை சமூக ஊடகங்களிலல் பதிவிட்டதாக புகார் கூறப்பட்டது. அதேபோன்று மீண்டு நடைபெறாமல் இருக்க, கடந்த 4ஆண்டுகளாக கூகுள் பேஸ்புக், போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் பிரச்சாரத்தை எதிர்கொள்வது தொடர்பாக தொடர்சியாக பல்வேறு அப்டேட்களை அளித்து வருகின்றன என வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News Source: theguardian.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google deletes 2,500 China-linked YouTube channels over disinformation: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X