கூகுள் நிறுவனத்திலும் இப்படியொரு பிரச்சனையா? வலுக்கும் கண்டனம்.!

|

கூகுள் நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இந்நிறுவனம். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் சாதியப்பாகுபாடு இருப்பதாக சமூக செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு வைத்துள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கடந்த

அதாவது தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கடந்த ஏப்ரல் ஏப்ரல் 18-ம் தேதி கூகுள் நிறுவனத்தில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் தலித் உரிமைகள் அமைப்பின் சமத்துவ ஆய்வகத்தின் நிறுவனர் தேன்மொழி சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவதாகஇருந்தது.

ஸ்டைலா., கெத்தா ஒரு ஸ்மார்ட்போன்- அறிமுகமானது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி., 50 எம்பி கேமரா உட்பட நான்கு கேமராக்கள்!ஸ்டைலா., கெத்தா ஒரு ஸ்மார்ட்போன்- அறிமுகமானது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி., 50 எம்பி கேமரா உட்பட நான்கு கேமராக்கள்!

 அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு

ஆனால் இந்த நிகழ்விற்குக் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு தேன்மொழி சௌந்தரராஜன் ஒரு இந்து விரோதி என கூறி நிறுவனத்தின்
தலைமை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் சூட் இவ்வளவு முக்கியமா? புது சூட் தயாரிக்க 2 நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம்..

த்தன்மையை நிலைநாட்

இதனை தொடர்ந்து தான் தேன்மொழி சௌந்தரராஜன் கலந்துகொள்ள இருந்த கருத்தரங்கை கூகுள் நிறுவனம் ரத்து செய்தது. அதன்பின்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கூகுள் மூத்த மேலாளர் தனுஜா குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பின்பு பன்முகத்தன்மையை நிலைநாட்ட முயற்சி செய்க்ககூடதா என்று கூகுள் நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..

இதுகுறித்து கூறிய தேன்மொழி சௌந்தரராஜன் சாதி

மேலும் இதுகுறித்து கூறிய தேன்மொழி சௌந்தரராஜன் சாதி, சமத்துவம் பற்றிய பேச்சுக்கு கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாக
ரத்து செய்துள்ளது. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை எனக்கு மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது. இதை வார்த்தையால்
வெளிப்படுத்த முடியவில்லை என்று தெரிவத்துள்ளார்.

ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!

 இந்த நிகழ்வை ரத்து செய்ய முயன்ற

அதேபோல் இந்த நிகழ்வை ரத்து செய்ய முயன்ற ஊழியர்களின் சாதிவெறியைக் கூகுள் நிறுவனம் ஆதரிப்பதுபோல் நடந்து கொண்டுள்ளது.
இந்தப்போக்கு மிக ஆபத்தானது. அதேசமயம் மனித உரிமைகள் பற்றிய உரையாடல்களைச் சாதிவெறியர்கள் கொஞ்சம் கூட விரும்புவதில்லை.

இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..

 அவருக்குச்

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் வளர்ந்தவர், அவருக்குச் சாதிஅரசியல் பற்றித் தெரியாது என்பது நம்பும் படியாக இல்லை" என தெரிவித்துள்ளார் தேன்மொழி சௌந்ததராஜன்.

அம்மாடியோவ்.! இது அது ல.! வரவிருக்கும் புதிய OnePlus Nord போன் Oppo A57 போனா? குழப்பம் வேண்டாம் இதான் விஷயம்.அம்மாடியோவ்.! இது அது ல.! வரவிருக்கும் புதிய OnePlus Nord போன் Oppo A57 போனா? குழப்பம் வேண்டாம் இதான் விஷயம்.

இந்த நிகழ்வு சர்ச்சையானதை தொடர்ந்து,

மேலும் இந்த நிகழ்வு சர்ச்சையானதை தொடர்ந்து, எங்கள் நிறுவனத்தில் சாதிய பாகுபாடுகளுக்கு இடம் இல்லை என்றும், சாதிய பாகுபாட்டிற்கு எதிராகத் தெளிவான வெளிப்படையான கொள்கையை நாங்கள் வைத்துள்ளோம் என்று கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Google has canceled talks on the caste of Dalit activists due to staff pressure: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X