இந்தியாவின் மோசமான மொழி எது? மன்னிப்பு கேட்டது கூகுள் நிறுவனம்.!
அண்மையில் வெளிவந்த தகவலின்படி, இந்தியாவின் மோசமான மொழி என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால் கன்னட மொழி காட்டப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது கூகுள் தேடுதல் தளத்தில் What is the ugliest language in India (இந்தியாவின் மோசமான மொழி எது)என தேடினால் கன்னட மொழியை கூகுள் காட்டியிருந்தது. எனவே கர்நாடக மாநிலத்தில் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்கள்கொதிப்பு அடைந்தனர்.

மேலும் இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும். குறிப்பாக கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதேபோல் கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பின்பு கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பின்பு இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும்
எனவும் அவர் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சமூகவலைத்தளங்களில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக கன்னட மக்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மோசமான மொழி கன்னடம் என்று காட்டப்பட்டதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும் கூகுள் நிறுவனம் இது தொடர்பாக விளக்கமளிக்கையில், கன்னட மொழி மோசமான மொழி என்பது கூகுளின் கருத்து இல்லை. இது போன்று கூகுள் தேடுதல் தளத்தில் எதிர்பாராத விதமாக நடந்து விடுகிறது. இந்த சம்பவத்திற்காக கூகுள் கன்னட மொழியைதாய்மொழியாக கொண்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளது.

அதன்பின்பு கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடு தளத்தில் வெளியான தவறான பதிவுகளையும் அந்நிறுவனம் நீக்கியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications