சரியான நேரத்தில் இந்தியாவுக்கு உதவும் கூகுள்.! ரூ.135 கோடி.! சுந்தர் பிச்சை முக்கிய தகவல்.!

|

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் ஆனது வாய், மூக்கு என சுவாசத்துடன் நேரடித் தொடர்புடைய உறுப்புகள் வழியாக உள்ளே நுழைந்து நுரையீரலை அடையும்போதுதான் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தி உயிரிழக்கும் நிலை வரை சென்றுவிடுகிறது.

கொரோனாவின் முதல் அலை

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

முதல் அலையின்போது

குறிப்பாக இந்த கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள், இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த பிரபலமான நிறுவனம்.! விலை இவ்வளவு தான்.!50-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த பிரபலமான நிறுவனம்.! விலை இவ்வளவு தான்.!

கடந்த ஜனவரி 16-ம் தேதி

கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்க முன்வந்துள்ளன. மேலும் ரிலையன்ஸ் நிறுவனமும் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது மனைவி, குழுந்தைகள், பெற்றோர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும், இதற்கான செலவை நிறுவனமே ஏற்கும் என்று தெரிவித்துள்ளது.

ல், தங்கள் நிறுவன

வரும் மே-1 ம் தேதி முதல், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட அவர்களது குடும்பத்தினருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி திட்டத்திற்கு சுரக்ஷா (R-Surakshaa) என பெயரிட்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

சத்தமில்லாமல் முகேஷ் அம்பானி வாங்கிய ஆடம்பர தங்கும் விடுதி.! என்ன விலை தெரியுமா?சத்தமில்லாமல் முகேஷ் அம்பானி வாங்கிய ஆடம்பர தங்கும் விடுதி.! என்ன விலை தெரியுமா?

தமக்கு அதிர்ச்சியை

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நிலைமை மிகவும் மோசமடைந்து வருவது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுஎன கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார்.

இரண்டு டிஸ்பிளே கொண்ட சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?இரண்டு டிஸ்பிளே கொண்ட சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

மேலும் கூகுள் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் கொரோனா நிதியாக 135 கோடி ரூபாயை இந்தியாவிற்கும், யூனிசெப்புக்கும் வழங்குவதாக சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். அதிலும் தொற்று அபாயம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு குறித்த முக்கிய

அதேபோல் கொரோனா விழிப்புணர்வு குறித்த முக்கிய தகவல்களை பகிரவும் நிதி பயன்படுத்தப்படும் என்று சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார்.

அதேபோல் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கேட்டு மனம் உடைந்து போய் உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள், ஆக்சிஜன் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு மைக்ரேசாப் நிறுவனம் இந்தியாவுக்கு உதவும் எனவும் சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google has announced Rs 135 crore for India to fight Corona: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X