கூகுளின் சுடுகாடு!!!

|

கூகுள் நிறுவனம் தொழில்நுட்ப உலகில் முக்கிய பங்கு வகிக்கிறது. இணையதளங்களில் கூகுளின் சேவைகள் பல உண்டு.

கூகுள் செர்ச் இன்ஜின், கூகுளின் சேவைகளில் மிக முக்கியமானது. இது போன்ற பல சேவைகள் கூகுளால் உருவாக்கப்பட்டுள்ளன.

பல சேவைகளை உருவாக்கியது போலவே கூகுள் நிறுவனம் பல சேவைகளை நிறுத்தியுள்ளது. அண்மையில் கூட ஜூலை 1 அன்று கூகுளின் சேவையான கூகுள் ரீடர் நிறுத்தப்பட்டது.

கூகுளின் நிறுத்தப்பட்ட சேவைகளை வர்ணனையாளர்கள் "கூகுளின் சுடுகாடு" என்று வர்ணிக்கின்றனர். இந்த சுடுகாட்டில் புதிதாக புதைக்கப்பட்டிருப்பது கூகுள் ரீடர்.

கூகுள் நிறுவனம் இதுவரை ஆரம்பித்து நிறுத்திய சேவைகளை கணக்கிட்டால் அதன் எண்ணிக்கை 20 ஆக உயர்கிறது.

இன்டர்நெட் உலகை ஆளும் கூகுளால் ஆரம்பிக்கபட்டு நிறுத்தப்பட்ட சேவைகளை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

கூகுளால் நிறுத்தப்பட்ட சேவைகளை பற்றி தெரிந்துகொள்ள கிழே உள்ள சிலைட்சோவை பார்க்கலாம் வாங்க.

Click Here For New Google Gadgets Gallery

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் ஆன்சர்ஸ்(Google Answers)

கூகுள் ஆன்சர்ஸ் யாஹூ ஆன்சர்ஸ் போன்றதே. ஆனால், இதில் பயனீட்டாளர்கள் தங்கள் கேள்விகளுக்கு விடை வேண்டும் என்றால் அதற்க்கு பணம் செலுத்த வேண்டும்.

பயனீட்டாளர்கள் இலவச சேவையையே விரும்பினர் அதனால் டிசம்பர் 2006ல் இந்த
சேவை நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் செய்ட்ஜெய்ஸ்ட்(Google Zeitgeist)

கூகுள் செய்ட்ஜெய்ஸ்ட் என்பது பிரபலமாக தேடப்படும் கேள்விகளின் தொகுப்பாகும். இதில் கேள்விகளின் தொகுப்பு வாரம், மாதம், ஆண்டு வாரியாக இருக்கும்.

இந்த சேவை மே 2007ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் பேஜ்கிரியேட்டர்(Google PageCreator)

கூகுள் பேஜ்கிரியேட்டரில் ஒரு வெப்சைட்டை உருவாக்கலாம்.

இந்த சேவை 2008ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் லைவ்லி(Google Lively)

கூகுள் லைவ்லி 3D அனிமேஷனில் சாட் செய்யும் சேவையாகும். இந்த சேவை 6 மாதம் மட்டுமே இருந்தது.

இந்த சேவை டிசம்பர் 2008ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

ஜைக்கூ(jaiku)

ஜைக்கூ டிவிட்டரை போன்ற மைக்கிரோ பிளாக்கிங் சேவை.

ஜைக்கூ 2009ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

டாட்ஜ்பால்(dodgeball)

கூகுள் நிறுவனம் டாட்ஜ்பால் எனும் மொபைல் நெட்வொர்க்கிங் சேவையை 2005ல் வாங்கியது. பின்பு 2009ல் இதை நிறுத்திவிட்டு கூகுள் லேட்டிடுயுட் என மாற்று சேவையை ஆரம்பித்தது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் சேர்ச்விக்கி(Google searchwiki)

இதில் லாக் இன் செய்து பயனீட்டாளர்கள் சேர்ச் ரிசல்ட் வரிசையை மாற்றிக்கொள்ளலாம்.

கூகுள் சேர்ச்விக்கி மார்ச் 2010ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் வேவ்(Google wave)

இ மெயில், சமூக வலைத்தளம் போன்றவற்றை எடிட் செய்ய உதவும் பிரேம் ஒர்க் போன்றதே கூகுள் வேவ்.

கூகுள் வேவ் ஆகஸ்ட் 2010ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் லேப்ஸ்(Google labs)

இதில் உள்ள பிராஜெக்ட்களை பயனீட்டாளர்கள் டெஸ்ட் செய்து தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

கூகுள் லேப்ஸ் ஜூலை 2011ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் டிக்ஸ்னரி(Google Dictionary)

கூகுள் டிக்ஸ்னரி ஒரு ஆன்லைன் டிக்ஸ்னரி சேவையாகும்.

கூகுள் டிக்ஸ்னரி ஆகஸ்ட் 2011ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் நோட்புக்(Google Notebook)

கூகுள் நோட்புக் ஆன்லைனில் தகவல்களை சேமித்து வைக்க உதவும் ஒரு சேவை.

இந்த சேவை மார்ச் 2011ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் சைடு விக்கி(Google sidewiki)

இது பயனீட்டாளர்கள் வலைதளங்களில் தகவல்களை பகிர்ந்துகொள்ள உதவும் ஒரு கருவி.

கூகுள் சைடு விக்கி செப்டெம்பர் 2011ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

ஆர்டுவார்க்(aardvark)

ஆர்டுவார்க் சமூக தேடுதல் சேவை. இதில் லாவ் சாட் செய்யலாம்.

ஆர்டுவார்க் செப்டெம்பர் 2011ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் பஸ்(Google buzz)

இது ஜி மெயிலில் இணைக்கப்பட்ட மைக்கிரோ பிளாக்கிங் சேவை.

கூகுள் பஸ் டிசம்பர்15 2011ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

பிக்னிக்(picnik)

இது ஒரு ஆன்லைன் போட்டோ எடிட்டர்.

பிக்னிக் ஏப்ரல்19 2012ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

நால்(knol)

விக்கிபீடியாவுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட நால் அக்டோபர்1 2012ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் ஹெல்த்(google health)

உடல் ஆரோக்கியத்தை பற்றி பகிர்ந்துகொள்ள உதவும் ஒரு சேவை.

இது ஜனவரி1 2013ல் நிறுத்தப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் டாக்(google talk)

கூகுள் டாக் வாய்ஸ் மற்றும் மெசெஜ் கம்யுனிகேசன் சேவை.

இது மே15 2013ல் நிறுத்தப்பட்டு கூகுள் ஹேங்அவுட் என மாற்றப்பட்டது.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

ஐ கூகுள்(igoogle)

ஐ கூகுள் நவம்பர் 2013ல் நிறுத்தப்படும்.

கூகுளின் சுடுகாடு!!!

கூகுளின் சுடுகாடு!!!

கூகுள் ரீடர்(google reader)

கடைசியாக ஜூலை 1 அன்று கூகுளின் சேவையான கூகுள் ரீடர் புதைக்கப்பட்டது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X