அடிச்சான் பாரு கூகுள்.. Gmail பாஸ்வேர்ட் மறந்தாலும் கவலையில்லை.. Fingerprint வெச்சிக்கலாம்!
ஜிமெயில் (Gmail) பாஸ்வேர்ட்டை எப்படி மனப்பாடம் செய்தாலும், சிலருக்கு மறந்துவிடும். பலமுறை ஃபர்கெட் பாஸ்வேர்டு (Forget Password) கொடுத்து கலைத்தே போயிருப்பார்கள். இப்படிப் பட்டவர்களின் "வயிற்றில் பாலை வார்த்தது" போல கூகுள் நிறுவனம் ஒரு அசத்தலான அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
"நீங்க ஃபிங்கர் பிரிண்ட் வெச்ச மட்டும் போதும்" அப்படினு சொல்லுற மாதிரி இருக்கு அந்த அப்டேட். கூகுள் அக்கவுண்ட்டில் பாஸ்கீஸ் (Passkeys) என்னும் ஆப்சன் மூலம் எப்படி பாஸ்வேர்ட்களுக்கு பதிலாக பிங்கர் பிரிண்ட் (Fingerprint) அல்லது ஃபேசியல் ஸ்கேன் (Facial Scan) ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்துக்கு, உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். இந்த நிறுவனம் வழங்கும் சேவை அனைத்தும் இலவசம் என்பதால், நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சேவைகள் அனைத்துக்கும் ஜிமெயில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை தொடங்கிவிட்டால் போதும், கூகுள் நிறுவனத்தின் யூடியூப் (YouTube), குரோம் (Chrome), பிளே ஸ்டோர் (Play Store), டாக்ஸ் (Docs), சீட்ஸ் (Sheets), மேப்ஸ் (Maps) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்படிப்பட்ட ஜிமெயிலின் பாஸ்வேர்ட்டை மறந்துவிட்டால், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதே சற்று கடினமாகத்தான் இருக்கும்.
சிலருக்கு ஜிமெயில் பாஸ்வேர்ட்டை நினைவில் வைத்துக் கொள்வது கடினமான காரியமாக இருக்கிறது. பலமுறை ஃபர்கெட் பாஸ்வேர்ட் கொடுத்து மாற்றிக் கொள்வார்கள். ஆனால், அதை எழுதி வைத்தால் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், அப்போதைக்கு மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
பின்பு, எப்போதாவது பாஸ்வேர்ட் தேவைப்படும் போது, அது நினைவுக்கு வரவே வராது. இப்படி பலமுறை அவதிப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு பாஸ்கீஸ் (Passkeys) என்னும் ஆப்சன் மிகுந்த உதவியாக இருக்கும். ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும்போது எப்படி ஃபிங்கர் பிரிண்ட் அல்லது ஃபேசியல் ஸ்கேன் செய்வீர்களோ அப்படியே பாஸ்வேர்ட் கொடுத்து ஜிமெயிலை பயன்படுத்த முடியும். இது யூடியூப்புக்கும் பொருந்தும்.
பாஸ்கீஸ் எப்படி பயன்படுத்துவது: இந்த ஆப்சனை பயன்படுத்த முதலில் கூகுள் பாஸ்வேர்ட் தேவைப்படும். ஒருமுறை உங்களது பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி பாஸ்கீஸை எனேபில் (Enable) செய்துவிட்டால், அதன்பின் பாஸ்வேர்ட்டை மறந்தாலும் கவலையில்லை. ஃபிங்கர் பிரிண்ட் அல்லது பேசியல் ஸ்கேன் செய்து உள்ளே சென்றுவிடலாம்.
முதலில் நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை ஒப்பன் செய்து, புரோஃபைல் பிக்சர் ஐகானை (Profile Picture Icon) கிளிக் செய்ய வேண்டும். அதற்கு கீழே மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுண்ட் (Manage Your Google Account ) ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே நுழைந்து செக்யூரிட்டி (Security) ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அப்போது கீழே மூன்றாவது ஆப்சனாக பாஸ்கீஸ் (Passkeys) தோன்றும் அதை கிளிக் செய்ய வேண்டும்.
நினைவுக்காக (Click on your profile photo > Manage your Google account > Security > Passkeys). பாஸ்கீஸை கிளிக் செய்த உடன் உங்களது ஜிமெயில் பாஸ்வேர்ட் கேட்கப்படும். அதைகொடுத்துவிட்டு உள்ளே சென்றால், ஃபிங்கர் பிரிண்ட் அல்லது பேசியல் ஸ்கேன் அல்லது பின் (PIN) நம்பர் கொடுக்கும் ஆப்சன் இருக்கும். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். அதன்பின் நீங்கள் பாஸ்வேர்ட்டை மறந்தாலும், முன்னதாக நீங்கள் தேர்வு செய்த ஏதாவது ஒன்றை கொடுத்து உள்ளே செல்லலாம்.


Click it and Unblock the Notifications








