ஓட்டுனர்களுக்கு கூகுள் கிளாஸ் ஆபத்தானது என்கிறது இந்த ஆய்வு

Written By:

தொழில்நுட்பம் எந்தளவு முன்னேறினாலும் அதில் ஏதாவதொரு பின்னடைவோ அல்லது சர்ச்சைகள் எழுகிறது. இந்த சர்ச்சை கூகுள் கிளாஸ்களை பற்றியது. சமீபத்தில் வெளியான ஆய்வில் கூகுள் கிளாஸ் ஓட்டுனர்களுக்கு ஆபத்தானது என்று கண்டறியப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஓட்டுனர்களுக்கு கூகுள் கிளாஸ் ஆபத்தானதா

சென்ட்ரல் ப்லோரிடா பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தேர்நதெடுக்கப்பட்ட 40 பேர் வாகனங்களை இயக்கினர். இதில் ஒரு பிரிவினர் கூகுள் கிளாஸ் அணிந்து கொண்டும் வேறு சிலர் ஸ்மார்ட் போன் கொண்டும் வாகனங்களை இயக்கினர்.

வாகனங்களை இயக்கியவர்களுக்கு எதிரே வரும் வாகனத்தை இடிக்காமல் ப்ரேக் கொடுக்க வேண்டும், இதில் கூகுள் கிளாஸ் அணிந்தவர்கள் சற்று தடுமாற்றத்துடன் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையிலும் கூகுள் கிளாஸ் அணிந்தவர்களின் செயல்பாடு மோசமாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

குறிப்பாக கூகுள் கிளாஸில் தலை அசைவுகள் மற்றும் வாய்ஸ் காமான்ட் ஆப்ஷன்கள் இருந்தும் கூகுள் கிளாஸ் ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து இடையூறாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more about:
English summary
A Study From Central Florida University Reveals that texting through Google Glasses are unsafe while Driving
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot