Home
News

சைலன்ட் ஆக சுந்தர் செய்த சம்பவம்.. இனி Google Search-ல் @ டைப் செஞ்சா போதும்.. ChatGPT கதை க்ளோஸ்!

Google Gemini Shortcut in Chrome Search: ஆமை எப்படி முயலை தோற்கடித்தது என்கிற கதையையும்.. ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ் (Slow and steady wins the race) என்கிற மேற்கோளையும்.. நிச்சயமாக கூகுள் நிறுவனத்துடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியும். ஏஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொடர்பான வளர்ச்சியில், பெரும்பாலான நிறுவனங்கள் புயல் வேகத்தில் செயல்படுகின்றன; ஆனால் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனமானது, ஓரமாக நின்று எல்லோருடைய ஆட்டத்தையும் பொறுமையாக பார்த்துவிட்டு.. பிறகு மொத்த விளையாட்டையும் மாற்றும்படியான வேலைகளை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

இதற்காக, கூகுள் நிறுவனம் முதலில் தனது ஏஐ அசிஸ்டன்ட் ஆன கூகுள் பார்ட்-ன் பெயரை கூகுள் ஜெமினி என்று மாற்றியது. அப்போதிருந்து, ஜெமினி ஏஐ ஆனது அதன் இன்டர்பேஸில் பல வகையான புதிய மாற்றங்களை கண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகமான பிக்சல் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் வழியாகவும் கூட, கூகுள் நிறுவனம் சில புதிய ஏஐ அம்சங்களை அறிமுகப்படுத்தியது.

இனி Google Search-ல் @ டைப் செஞ்சா போதும்.. ChatGPT கதை க்ளோஸ்!

இதற்கிடையில், ஜெமினி ஏஐ சாட் பாட் ஆனது இன்னும் பரவலான முறையில்.. இன்னும் எளிமையான முறையில் அணுகக்கூடியதாக இருக்க உதவும் ஒரு புதிய அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. அது - சாட் வித் ஜெமினி என்கிற ஷார்ட்கட் (Chat with Gemini shortcut) ஆகும். இந்த ஷார்ட்கட்டால் என்ன பயன்? இதை கூகுள் க்ரோம் சேர்ச்சில் பயன்படுத்துவது எப்படி? இதோ விவரங்கள்:

முன்னதாக, நீங்கள் ஜெமினி ஏஐ-ஐ பயன்படுத்த விரும்பினால், ஜெமினி ஏஐ-க்கான பிரத்யேக ஆப் அல்லது இணையதளத்தை அணுக வேண்டி இருக்கும். ஆனால் இனிமேல் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் க்ரோம் சேர்ச் பார் வழியாக ஜெமினி ஏஐ-ஐ நேரடியாக அணுக முடியும். இதற்காக கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி ஏஐ-ஐ க்ரோம் சேர்ச் பார் உடன் ஒருங்கிணைத்துள்ளது.

அதாவது இப்போது ஜெமினி ஏஐ-ஐ அணுக உங்களுக்கு தனி ஆப் அல்லது பிரத்யேக வெப் பேஜ் தேவையில்லை. வெறுமனே கூகுள் க்ரோம் சேர்ச் பாரில் "@" என்று டைப் செய்யவும். உடனே கீழ்தோன்றும் மெனுவிலில்.. முதலாவதாகவே @gemini - Chat with Gemini என்கிற விருப்பம் இடம்பெறும்.

அதை தேர்வு செய்து ஜெமினி ஏஐ-யிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை (அதே சேர்ச் பாரில்) டைப் செய்யவும். அவ்வளவு தான் - உங்கள் கேள்விக்கான பதிலை மிகவும் விரைவான முறையில் கொடுக்கப்படும் மற்றும் இந்த ஷார்ட்கட், ஜெமினி ஏஐ-ஐ ஆப் வழியாக அல்லது பிரத்தேயேக வெப் வழியாக அணுகுவதை விட இது மிகவும் எளிமையாக.. வசதியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கூகுள் ஜெமினி ஏஐ-யின் முக்கிய போட்டியாக பார்க்கப்படும் ஒப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி-க்கும் கூட பிரத்யேக ஆப் மற்றும் வெப்சைட் இருக்கிறது. ஆனால் கூகுள் அதன் ஜெமினி ஏஐ-க்கு கொண்டுவந்துள்ள ஷார்ட்கட், சாட்ஜிபிடி-க்கு இல்லை. நிச்சயமாக.. இந்த ஒரு காரணத்தை வைத்தே எது பெஸ்ட் என்கிற தீர்மானத்திற்கு வந்துவிட முடியாது தான். ஆனால் எது எளிமையாக கிடைக்கிறதோ.. அதுவே பரவலாகவும் என்பது உலக வழக்கம்!

கூகுள் குரோம் உடனான ஜெமினி ஏஐ ஒருங்கிணைப்புடன் சேர்த்து, கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரிஸில் "ஜெமினி லைவ்" (Gemini Live) என்கிற புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் ஜெமினி உடனான ரியல் டைம் இன்டராக்க்ஷன்களை (real-time interactions) பெற முடியும். மேலும், உங்கள் ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டு இருந்தாலும் கூட ஜெமினி லைவ் அம்சத்தை பயன்படுத்தலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Gemini Shortcut Now Available Directly From Chrome Search Bar How to Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X