Galaxy Z Flip7: கேமரா மூலம் விசுவல் அசிஸ்டன்ட்.. ஜெமினி லைவ் போதும்.. ரியல்-டைமில் உரையாடல்!
கேலக்ஸி அன்பேக்டு 2025 (Galaxy Unpacked 2025) நிகழ்வில் வெளியான சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 (Samsung Galaxy Z Flip7) போனின் ஃபிளெக்ஸ்விண்டோவில் (கவர் டிஸ்பிளே) ஜெமினி லைவ் (Gemini Live) ஆனது ஒரு விசுவல் அசிஸ்டன்ட் போல செயல்படுகிறது. டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் ப்ராம்ப்ட்களை கடந்து கேமரா ஒருங்கிணைப்பு மூலமாக ரியல் டைமில் உங்களுடன் உரையாடல் செய்கிறது. இந்த ஜெமினி லைவ் மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 கேமரா ஒருகிணைப்பு குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
* ஃபிளெக்ஸ்விண்டோ (FlexWindow)
* ஜெமினி லைவ் & கேமரா (Gemini Live & Camera)
* ரியல்-டைம் விசுவல் அசிஸ்டன்ஸ் (Real-time Assistance)
* ஜெமினி லைவ் டூ சாம்சங் ஆப்ஸ் (Gemini Live To Samsung Apps)

ஃபிளெக்ஸ்விண்டோ:
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் சீரிஸ் மாடல்களிலேயே பெரிய கவர் டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 கொடுக்கிறது. 4.1 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 2,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் & 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட மெயின் டிஸ்பிளேவில் கிடைக்கும் அவுட்புட் இந்த ஃபிளெக்ஸ்விண்டோவில் (FlexWindow) எதிர்பார்க்க முடிகிறது.
ஆகவே, ஜெமினி லைவ் போன்ற ஒரு மல்டிமாடலை விசுவல் அசிஸ்டன்ட் போல பயன்படுத்த இந்த டிஸ்பிளே வழிவகை செய்துள்ளது. ரியர் கேமராவுடன் ஒருங்கிணைந்து கிடைப்பதால், இதை ஒரு டேபிளில் வைத்துவிட்டு, ஃபிளெக்ஸ் மோட் (Flex Mode) மூலம் ஜெமினி லைவ் மாடலை கேமராவுடன் பயன்படுத்தி கொள்ளலாம். இது உங்களுக்கு ரியல்-டைம் அசிஸ்ட் கொடுக்கிறது.

ஜெமினி லைவ் & கேமரா:
இந்த சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்7 போனை பாதி போல்டு செய்துவிட்டு டேபிள் அல்லது ரியர் கேமரா உங்களை நோக்கி இருப்பதை போல செட் செய்து கொள்ளுங்கள். இப்போது, கூகுள் ஜெமினி லைவ்வை ஓப்பன் செய்தால், அதில் கேமரா ஐகான் தோன்றும், அதுதான் ஃபிளெஸ் மோட் ஆகும். இதை கிளிக் செய்துவிட்டால் போதும், கேமராவுடன் ஜெமினி லைவ் ஒருங்கிணைக்கப்படும்.
இப்போது, அந்த கேமராவில் தெரியும் ஆப்ஜெக்ட்கள் குறித்த கேள்விகள் அல்லது பரிந்துரைகளை நீங்கள் வாய்ஸ் மூலம் கேட்கலாம். அந்த கேமராவில் நீங்கள் தெரியும்படி இருக்கும்பட்சத்தில் உங்களது உடை மற்றும் மற்ற ஆப்ஜெக்ட்களை பற்றியும் கேள்விகள், பரிந்துரைகளை கேட்கலாம். இதற்கான பதில்கள் ரியல்-டைமில் உங்களுக்கு கொடுக்கப்படும்.

ஆகவே, இது விசுவல் அசிஸ்டன்ட் போல ஃபீல் கொடுக்கும். உதாரணத்துக்கு, நீங்கள் வெளியில் செல்ல இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் போட விரும்பும் உடைகள் குறித்து ஜெமினியிடம் பரிந்துரை கேட்கலாம். அதாவது, நீங்கள் ஒரு ஜீன்ஸ் அணிந்துள்ளீர்கள் என்றால், சர்ட் அல்லது டி-சர்ட் போடலாமா என்று கேள்விகளை அதனிடம் கேட்கலாம். அதேபோல கேப் போடலாமா என்றும் கேட்கலாம்.
ரியல்-டைம் விசுவல் அசிஸ்டன்ஸ்:
இதுபோன்ற கேள்விகளுக்கு ஜெமினி லைவ் ஆனது, கேமரா மூலம் உங்களது ஜீன்ஸ் கலருக்கு சூட்டபிளாக இருக்கும் ஆப்ஷன்களை டிடெக்ட் செய்து ரியல் டைமில் பரிந்துரை செய்யும். அதே நேரத்தில் வெதர் ஆப் மூலம் அப்டேட்களை அறிந்து கொண்டு, மழை அல்லது வெயிலுக்கு ஏற்ப அவுட்ஃபிட்களை பரிந்துரை செய்யும். இப்படி சன் கிளாஸ், ஷூ கலர் ஆப்ஷன் போன்ற பலவற்றை கேட்கலாம்.

இது மட்டுமல்லாமல், உங்களிடம் ஏற்கனவே இருக்கும், போட்டோகளிலும் இருக்கும் ஆப்ஜெக்ட்கள் மற்றும் கேமரா மூலம் லைவ்வாக ஷூட் செய்யும் ஆப்ஜெக்ட்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பி ரியல் டைமில் பதில்களை பெற்று கொள்ளலாம். இந்த ஜெமினி லைவ் ஆப் ஆனது, கூகுள் காலெண்டர், மேப்ஸ், கீப், டாஸ்க் போன்ற ஆப்களுடன் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆகவே, நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது, ஒரு இவென்ட் குறித்த விளம்பரத்தை பார்த்தால், அதை கேமராவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஜெமினி லைவ் மூலம் சேவ் (Save) செய்யலாம். அந்த இவெண்ட் தேதி, நேரத்தை காலெண்டரில் சேவ் செய்யலாம். அல்லது ரீமைண்டர் செய்ய கமெண்ட் செய்யலாம். இப்படி கூகுள் ஆப்களுடன் ஜெமினி லைவ் பயன்படுகிறது.

ஜெமினி லைவ் டூ சாம்சங் ஆப்ஸ்:
கூகுள் நிறுவனத்தின் ஆப்கள் மட்டுமல்லாமல், சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் காலெண்டர், ரீமைண்டர், நோட்ஸ் போன்ற ஆப்களுடனும் ஜெமினி லைவ் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது ஒன் யுஐ 8 (One UI 8) மூலம் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, ஃபிளிப் மாடல்களில் ஜெமினி லைவ் வரவேற்கும்படியே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








