'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 'சுந்தர்பிச்சை' நியமனம்!

|

கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் சுந்தர்பிச்சை ஒரு தமிழர் என்பது உலகறிந்த ஒன்று. அவர் கூகுள் நிறுவனத்தின் மூலம் பயனர்களுக்கு சிறந்த பயன்பாட்டை வழங்குவதற்கும், பல்வேறு புதுமைகளை புகுத்துவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.

உலகளவில் முன்னணி

உலகளவில் முன்னணி

அதேபோல், அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. அதுமட்டுமின்றி தொழில்நுட்பம், தொலைபேசி, மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கூகுள் புரிந்து வருகிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பை காண்பிக்கும் சுந்தர் பிச்சை

ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பை காண்பிக்கும் சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். அவர்தன் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பை காட்டி வருகிறார். அதேபோல் தனது ஊழியர்களுக்கு அவ்வப்போது ஊக்கமளிக்கும் வகையிலான பேச்சு, சுதந்திரம் உள்ளிட்டவையும் வழங்கி கூகுளில் புதுமையை புகுத்தி வருகிறார்.

ஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்!ஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்!

ஆல்பபெட் நிறுவனத்திற்கு நியமனம்

ஆல்பபெட் நிறுவனத்திற்கு நியமனம்

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களாகிய லாரி பேஜி மற்றும் செர்ஜி பிரைன் ஆகிய இருவரும் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்புடன் கூகுளின் தாய் நிறுவனம் மற்றும் துணை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

தலைமை நிர்வாகியாக கூடுதல் பொறுப்பு

தலைமை நிர்வாகியாக கூடுதல் பொறுப்பு

சுந்தர் பிச்சை, கூகுளின் சிஇஓ-வாக பணியாற்றுவதோடு, ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பதவியையும் கூடுதலாக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்நீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்

லாரி பேஜ் புகழாரம்

லாரி பேஜ் புகழாரம்

இதுகுறித்து லாரி பேஜ் கூறுகையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை சிறப்பாக செயல்படுகிறார். சுந்தர் பிச்சையுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆல்பபெட் குழுவில் அவர் இணைவது எனக்கு உற்சாகமளிக்கிறது என லாரி பேஜ் புகழாரம் சூடியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Google founders Larry Page, Sergey Brin appointed as Sundar pichai in alphabet

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X