மீண்டும் அப்டேட் ஆன கூகுள் ஃபீட் : என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் லான்ச்சர்களின் இடது புறத்தில் கூகுள் ஃபீட் காணப்படுகிறது.

|

கூகுள் ஃபீட் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதோடு புதிய பெயரையும் கொண்டு வந்துள்ளது. முன்னதாக கூகுள் நௌ என அழைக்கப்பட்ட நிலையில், தற்சமயம் கூகுள் டிஸ்கவர் என அழைக்கப்படுகிறது.

மீண்டும் அப்டேட் ஆன கூகுள் ஃபீட் : என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் லான்ச்சர்களின் இடது புறத்தில் கூகுள் ஃபீட் காணப்படுகிறது. இதில் பயனரின் தேடல் விவரம், விருப்பம் மற்றும் பல்வேறு இதர விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. கூகுளின்படி, இந்த அம்சத்தை ஒவ்வொரு மாதமும் சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அம்சம் கொண்டு பயனர்கள் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்பதால், இதன் பெயர் கூகுள் டிஸ்கவர் என மாற்றப்பட்டுள்ளது. புதிய அப்டேட் வழங்கும் புதிய அம்சங்கள் என்ன என்பதை கீழே காணலாம்..,

மீண்டும் அப்டேட் ஆன கூகுள் ஃபீட் : என்ன ஸ்பெஷல் தெரியுமா?

பல்வேறு மொழிகளில் பயன்படுத்தலாம்:
புதிய அப்டேட் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான தகவல்களை மட்டும் கண்டறிந்து கொள்ளும் வகையில் தேடல்களை மாற்றியமைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு சில பயனர்கள் தங்களுக்கு வேண்டிய விவரங்களை ஆங்கிலம் இல்லாத மொழிகளில் வாசிக்க விரும்பும் பட்சத்தில் தங்களுக்கு வேண்டிய மொழியை தேர்வு செய்து கொள்ள முடியும்.


பல மொழிகளில் பயன்படுத்தும் வசதி முதற்கட்டமாக ஆங்கிலம் அல்லாமல் ஸ்பெயின் மொழியில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் விரைவில் இந்த அம்சம் கூடுதல் மொழிகளுடன் வழங்கப்படும் என தெரிகிறது.

மீண்டும் அப்டேட் ஆன கூகுள் ஃபீட் : என்ன ஸ்பெஷல் தெரியுமா?

பரிந்துரைகள்:

பயனர் அதிகம் படிக்க விரும்பும் தலைப்புகளில் தொடர்ந்து அதிகப்படியான விவரங்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் நோக்கில் பரிந்துரை அம்சம் இயங்குகிறது. உதாரணத்திற்கு சமையல் தலைப்பில் பயனர் அதிகம் வாசிக்க துவங்கும் போது, அதனுடன் தொடர்புடைய தலைப்புகள் பரிந்துரைக்கப்படும்.

மீண்டும் அப்டேட் ஆன கூகுள் ஃபீட் : என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தலைப்புகள்:
கூகுள் ஃபீடில் பயனர்கள் ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட டாபிக் ஃபிளாக்ஸ் தான் டாபிக் ஹெடர்கள் என்ற தலைப்பில் மாற்றப்பட்டுள்ளது. இந்த அம்சம் குறிப்பிட்ட தலைப்பில் அதிக விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இந்த கார்டுகளை கொண்டு பயனர்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் நுட்பமான விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும் பயனர்களுக்கு டிஸ்கவர் என்ற பெயரில் ஐகான் ஒன்றும் வழங்கப்படும்.

வீடியோ தரவு:
வடிவமைப்பில் பெரியளவு மாற்றம் செய்யப்பட்டுள்ள கூகுள் டிஸ்கவர் வீடியோ தரவுகளையும் காண்பிக்கிறது. மேலும் எவர்கிரீன் கன்டென்ட் என்ற தலைப்பில் புதிய அம்சத்தை கூகுள் வழங்குகிறது. பயனர் வாசிக்க விரும்பும் தலைப்புகளுக்கு ஏற்ற அல்லது தொடர்புடைய வீடியோக்கள் பரிந்துரைக்கப்படும்.

மீண்டும் அப்டேட் ஆன கூகுள் ஃபீட் : என்ன ஸ்பெஷல் தெரியுமா?

மொபைல் தளத்தில் சிறப்பான பயன்பாடு:
மொபைல் பிரவுசர் மற்றும் கூகுள் வலைதளத்திலும் கூகுள் டிஸ்கவர் கிடைக்கிறது. இதனால் பயனர்கள் கூகுள் ஆப் மட்டுமின்றி வலைதளத்திலும் அதிக விவரங்களை அறிந்து கொள்ள முடியும். வரும் வாரங்களில் மேலும் பல்வேறு அம்சங்களை கூடுதலாக சேர்க்க இருப்பதாக கூகுள் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Feed receives a major revamp: This is all you need to know: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X