பயனர்களை குஷிப்படுத்திய Google: எதுக்கு., சும்மா இலவசமாவே தொடருங்க- ஆனா ஜூன் வரைதான்!

|

கொரோனா பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அதேபோல் ஊரடங்கின் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலேயே தங்கி இருக்கும்படி அறிவுறுத்தினர். அதேபோல் பல்வேறு பள்ளிகளும் தங்களது மாணவர்களுக்கு வீடியோகால் மூலம் பாடத்தை தொடங்கினர்.

பிரதானமாக இருந்த ஜூம் செயலி

பிரதானமாக இருந்த ஜூம் செயலி

இந்த அனைத்து பயன்பாட்டுக்கும் ஜூம் ஆப் பிரதானமாக இருந்தது. இந்த நிலையில் ஜூம் செயலியைப் பயன்படுத்தி பயனர்கள் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக தகவல்வெளியானது. இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.

கூகுள் மீட் செயலி

கூகுள் மீட் செயலி

இதையடுத்து கூகுள் மீட் செயலியை பிரதானமாக்கும் நடவடிக்கையில் கூகுள் இறங்கியது. 100 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள், கல்வியாளர்கள் (Google Classroom) கூகுள் வகுப்பறையை பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

நீட்டிக்கப்படும் கூகுள் மீட் இலவச சேவை

நீட்டிக்கப்படும் கூகுள் மீட் இலவச சேவை

மார்ச் 2020 தொடக்கத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. க்ரோம் புக்ஸ்க்கான (Chromebooks) தேவையும் அதிகரித்தது . குறிப்பாக பள்ளிகளும், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களும், வணிகங்களும், தங்களின் பாதுகாப்பான வீடியோ கால்களை மேற்கொள்ள கூகுள் மீட் செயலியை பயன்படுத்தத் தொடங்கினர். கூகுள் நிறுவனம் அதன் பீரிமியம் வீடியோ காலிங் செயலியான கூகுள் மீட் ஆப்பை அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

கூகுள் மீட் இலவச வரம்பற்ற வீடியோ அழைப்பு

கூகுள் மீட் இலவச வரம்பற்ற வீடியோ அழைப்பு

கூகுள் மீட் இலவசம் வரம்பற்ற வீடியோ அழைப்பை ஜூன் 2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து ஜிமெயில் கணக்குகளுக்கும் இலவச வரம்பற்ற வீடியோ அழைப்பை ஜூன் 2021 வரை நீடிப்பதாக கூகுள் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த நீட்டிப்பு செப்டம்பர் 2020 வரை மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மார்ச் 31 2021 நிறைவு பெற்ற நிலையில் இந்த கூகுள் மீட் இலவச வரம்பற்ற வீடியோ கால் அழைப்பு ஜூன் 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டில் பிறந்த தேதியை எப்படி திருத்துவது: இதோ எளிய வழிமுறைகள்!ஆதார் கார்டில் பிறந்த தேதியை எப்படி திருத்துவது: இதோ எளிய வழிமுறைகள்!

இலவசமாக ப்ரீமியம் கூகுள் மீட் அம்சங்கள்

இலவசமாக ப்ரீமியம் கூகுள் மீட் அம்சங்கள்

இதுகுறித்த அறிவிப்பை டுவிட்டரில் கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் வரம்பற்ற வீடியோ கால் செயல்பாட்டை அனைவருக்கும் இலவசமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிடைக்கச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் கூகுள் அனைத்து ஜி சூட் வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக ப்ரீமியம் கூகுள் மீட் அம்சங்களை அறிமுகம் செய்தது. 250 உறுப்பினர்களுக்கான மெய்நிகர் சந்திப்புகள், இன் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் அழைப்பு பதிவுகளுடன் கூகுள் இயக்க சேமிப்பு திறன் அம்சத்தையும் கொண்டிருந்தது.

பயனர்கள் அழைப்புகளை தொடர்ந்து இலவசமாக மேற்கொள்ளலாம்

பயனர்கள் அழைப்புகளை தொடர்ந்து இலவசமாக மேற்கொள்ளலாம்

ஆன்லைன் வகுப்புகளில் கலந்துக் கொள்வதற்கும், வீட்டில் இருந்து வேலை செய்வதற்கும் அனைத்து மக்களின் சௌகரியத்துக்கும் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நீட்டிப்பின் மூலம் பயனர்கள் அழைப்புகளை தொடர்ந்து இலவசமாக மேற்கொள்ளலாம். கடந்த பிப்ரவரியில், கூகுள் கல்விக்கான ஜீ சூட் அமைப்பை மேம்படுத்தியது. இது கல்விக்கான கூகுள் பணியிடம், கல்வியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆன அதிக தேர்வு அம்சத்தையும், கட்டுப்பாட்டையும் வழங்கியது. இந்த வகுப்பறை பயன்பாடு ஆண்ட்ராய்டு பயன்பாட்டை ஆஃப்லைன் இணைப்புகளுடனும் பணிசெய்ய அனுமதித்தது.

கூகிளின் இலவச பதிப்பு

கூகிளின் இலவச பதிப்பு

கூகிளின் இலவச பதிப்பு கல்விக்கான ஜி சூட் கல்வி அடிப்படைகளுக்கான கூகிள் பணியிடமாக மறுபெயரிடப்படும். அதேபோல் மாணவர்கள் இணைய இணைப்பு இல்லாமல் தங்கள் வேலைகளை ஆஃப்லைனில் தொடங்கலாம், அவர்கள் பணிகளை மதிப்பாய்வு செய்யலாம், டிரைவ் இணைப்புகளை திறப்பது, கூகுள் டாக்ஸ் பணிகளை எழுதுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Google Extended its Unlimited Google Meet Call With Free Version

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X