Home
News

Google ஒரே போடு.. 5 புது மொழிகளில் AI Mode.. இந்த மொழிக்குத்தான் இந்தியாவில் முன்னுரிமை.. எந்த மொழி?

கூகுள் நிறுவனமானது, அதனுடைய ஏஐ மோட் (AI Mode) சர்ச்சில் புதிதாக 5 மொழிகளை சேர்த்துள்ளது. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டது. இருப்பினும், கூகுள் குரோம் யூசர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றதால், இப்போது கூடுதல் மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் ஒரு மொழியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கூகுள் ஏஐ மோட் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கூகுளில் வழக்கமாக சர்ச் செய்வதை செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ப மாற்றும்படி ஏஐ மோட் (AI Mode) கொண்டுவரப்பட்டது. இது வெறும் லிங்க்குகளை உங்களுக்கு கொடுக்காமல், நேரடியாக அதுவே லிங்க்குகளை அலசி ஆராய்ந்து உங்களது கேள்விக்கு ஏற்ப பதில்களை கொடுக்கிறது. இதுவும் கிட்டத்தட்ட சாட்பாட் போலத்தான் செயல்படுகிறது.

Google ஒரே போடு.. 5 புது மொழிகளில் AI Mode.. இந்தியாவில் எந்த மொழி?

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் முதலில் ஏஐ மோட் களமிறக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலத்தில் மட்டுமே இதன் சேவை கொடுக்கப்பட்டது. கூகுள் சர்ச் போல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிடைக்கவில்லை. ஏஐ மோட் மட்டும் ஆங்கிலத்தில் பயன்படுத்த கிடைத்துவந்தது.

இப்போது, 5 கூடுதல் மொழிகளை கூகுள் நிறுவனம் சேர்ந்துள்ளது. இதில் இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழியான இந்தியும் (Hindi) சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, இனிமேல் ஆங்கிலம் மட்டுமல்லாமல், இந்தியிலும் கூகுள் ஏஐ மோட்-ஐ பயன்படுத்த முடியும். மற்ற மொழிகளை பார்க்கையில், ஜப்பானீஸ் (Japanese), கொரியன் (Korean) ஆகிய மொழிகள் உள்ளது.

மேலும், பிரேசிலியன் போர்ச்சுகீஸ் (Brazilian Portuguese) மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மொழிகளை பேசும் மக்கள் அதிகமாக ஏஐ மோட் பீச்சரை பயன்படுத்தி இருப்பதால், அவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், வரும் நாட்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் எதிர்பார்க்கலாம். இந்த ஏஐ மோட் என்ன செய்கிறது.

Google ஒரே போடு.. 5 புது மொழிகளில் AI Mode.. இந்தியாவில் எந்த மொழி?

கூகுள் ஏஐ மோட் (Google AI Mode)
கூகுள் சர்ச்சில் வழக்கமாக ப்ளூ லிங்குகள் கிடைக்கும். அதில் நீங்கள் தேடிய விவரங்களுக்கு ஏற்ப கிளிக் செய்து தகவல்களை பெற்று கொள்ள வேண்டும். ஆனால், கூகுள் ஏஐ மோட் மூலம் சாட் அசிஸ்டன்ட் போல சர்ச் செய்து கொள்ளலாம். அதாவது, நீங்கள் எதையாவது சர்ச் செய்யும்போது, அந்த கீவேர்டுக்கு ஏற்ப அதுவே பல பேஜ்களை அனுகி கொள்ளும்.

அதில் இருந்து தகவல்களை எடுத்து உங்களுக்கு கொடுக்கும். இந்த தகவல்கள் பல்வேறு லிங்குகளின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. ஆகவே, இது உங்களது கீவோர்டுக்கு ஏற்ப சரியான தகவல்களை கொடுக்கும். உங்களுக்காக பல்வேறு பேஜ்களை இதுவே அலசி ஆராய்கிறது. உங்களுக்கு வேலையை மிச்சப்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல், இது ஏஐ பவர்டு சர்ச் மாடலாக இருப்பதால், எங்கிருந்து வேண்டுமானாலும் டேட்டாவை எடுத்து உங்களுக்கு கொடுக்கும். அதேபோல டேட்டாவை அதுவே உருவாக்கியும் கொடுக்கும். இதற்காக ஜெமினி 2.5 (Gemini 2.5) மாடலுடன் இன்டிகிரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே, உங்களுக்கு சாட் பாட் அனுபவம் கிடைக்கும்.

இந்த கூகுள் ஏஐ மோட் பீச்சரில் டெக்ஸ்ட், வாய்ஸ் மற்றும் இமேஜ் பேஸ்டு கேள்விகளை கேட்டு கொள்ளலாம். அதற்கான பதில்களை நேரடியாக டெக்ஸ்ட்டாக கொடுக்கும். அதிலும், ஹெட்லைன், சம்மரி புல்லட் பாய்ன்ட் போன்று குழப்பமில்லாமல் கொடுக்கும். இதை ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இப்போது, இந்தியில் கிடைக்கிறது.

ஆகவே, வழக்கம்போல இந்தியில் டைப் செய்து, சர்ச் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 8ஆம் தேதி முதலே இது அமலுக்கு வந்துவிட்டது. ஆகவே, உங்களிடம் குரோம் பிரவுசர் இருந்தால், அதை கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று அப்டேட் செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு ஏஐ மோடுக்கு சென்று ஆங்கிலத்தில் டைப் செய்வதற்கு பதிலாக இந்தியில் டைப் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Google Expands AI Mode To Five Additional Languages Including Hindi Japanese Korean More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X