எங்கள ஸ்கூல் குழந்தை நினைச்சிட்டு இருக்க.. ஊழியர்களைப் புலம்ப வைத்த Google.! ஏன் என்னாச்சு?
கூகுள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சாட்-ஜிபிடி போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுக்குப் போட்டியாகத் தொடர்ந்து புதிய புதிய மென்பொருள் வசதியைக் கொண்டு வந்த வண்ணம் உள்ளது கூகுள் நிறுவனம்.
அதேபோல் கூகுள் நிறுவனம் சமீபத்தில் தங்களது ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியலாம் என்று அறிவித்து இருந்தது. ஆனாலும் ஊழியர்கள் பலரும் அலுவலகத்திற்கு வருவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகிறார்களா என்பதைக் கண்காணிக்க ஊழியர்களின் பேட்ஜை (Badge)டிராக் செய்ய உள்ளதாகக் கூகுள் முடிவு செய்தது.

குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கூகுளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தங்கள் அதிருப்தியை ஊழியர்கள் மீம் வழியே காண்பித்து வருகின்றனர்.
அதுவும் இன்னும் எங்களை ஸ்கூல் குழந்தை என்று நினைச்சிட்டு இருக்க, இன்னைக்கு ஆபிஸ் வரலான, நாளைக்கு பேரண்ட்ஸ் கூப்பிட்டு வா என்பது போன்ற பல கலாய்க்கும் மீக்களும், என்னோட வேலையை செக் பண்ணு, என்னோட பேட்ஜை இல்ல என்ற காரசாரமான மீம்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வாரத்தில் 3 நாட்கள் அலவலக வேலை என்று ஹைபிரிட் பணிக் கொள்கைக்கு மாறி இருக்கிறது கூகுள் நிறுவனம். பின்பு பேட்ஜ் மூலம் ஊழியர்களின் தரவுகள் சேகரிக்கப்படுகிறது. குறிப்பாக நிறுவனத்தின் தலைவர்கள் தங்கள் குழுக்கள் எவ்வாறு செயல்படுகிறது என்றும்,அலுவலகத்திற்கு யார் அடிக்கடி வரவில்லை என்பதையும் இதன்மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

தற்போது இதன் அடிப்படையில் தான் தொடர்ச்சியாக அலுவலகத்தில் இல்லாத ஊழியர்களுக்கு மேனேஜர்கள் நினைவூட்டுவார்கள் என்று கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ரோடு டிராஃபிக் எப்படி இருக்கிறது? என்பன போன்றவற்றை கூகுள் மேப்பில் 3டி-இல் காட்டும் வசதியை விரைவில் கொண்டுவருவது என கூகுள் நிறுவனம் சமீபத்திய தனது கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது. மேலும் பல்வேறு புதிய அம்சங்களும் கூகுள் மேப்பில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இப்போது இது தொடர்பான விவரங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
கூகுள் மேப்பில் 3டி தோற்றத்தில் உலகத்தைக் காட்ட உள்ளதாகக் கூகுள் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரைபடத்தில் எல்லா இடங்களையும் பறவை கண் பார்வையில் பார்க்கவும் முடியும் என்றும் கூறப்படுகிறது. எனவே இதன் மூலம் சாலைகளில் பறவையைப் போல் குறிப்பிட்ட உயரத்தில் இருந்து சற்று சாய்வாகப் பார்க்க முடியும். கண்டிப்பாக இது பயனர்களுக்கு நல்ல உணர்வைத் தரும் என்று கூகுள் நம்புகிறது.

மேலும் பறவை கண் பார்வை மட்டுமின்றி, வேறு சில பார்வைகளிலும் கூகுள் வரைபடத்தைக் காணும் விதமாகத் தேர்வுகள் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இப்போது வரை கிடைக்கப்பெற்ற வான்வெளி மற்றும் சாலை படங்களைக் கொண்டு நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கம்யூட்டர் விஷன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வசதி உருவாக்கப்பட்டு வருவதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








