Home
News

பறக்கும் மீம்ஸ்.. Sundar Pichai-ஐ வச்சி செய்யும் Google ஊழியர்கள்.. கொஞ்சமா நஞ்சமா ரூ.1854 கோடி பாஸ்!

வழக்கமாக கூகுள் (Google) நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சைக்கு (Sundar Pichai) எதிராக அவரது போட்டியாளர்கள் தானே நிற்பார்கள். ஆனால் இம்முறை கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களே அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர். அவரை விமர்சித்து மீம்ஸ்களையும் (Memes) பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான சுந்தர் பிச்சையின் சம்பள உயர்வு தான். குறிப்பிட்ட ஆண்டிற்காக சுந்தர் பிச்சைக்கு சுமார் 226 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 1,854 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

பறக்கும் மீம்ஸ்.. Sundar Pichai-ஐ வச்சி செய்யும் Google ஊழியர்கள்!

உடனே "அவர் உழைக்கிறார்.. அவர் சம்பாதிக்கிறார்.. இதில் அதிருப்திக்கும், விமர்சனத்திற்கும் என்ன வேலை?" என்று கேட்டு விடாதீர்கள். விஷயம் என்னவென்றால், செலவுகளை குறைக்க வேண்டுமென்று கூறி கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) ஆனது 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய மறுகையில் சுந்தர் பிச்சைக்கு மிகப்பெரிய சம்பள உயர்வை கொடுத்துள்ளது.

இது குறித்த தங்களது எதிர்ப்பை தெரிவிக்க கூகுள் ஊழியர்கள் இன்டர்னல் பிளாட்ஃபார்ம்களின் (Internal Platforms) வழியாக சுந்தர் பிச்சைக்கு எதிரான மீம்களை பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலான மீம்கள், ஆட்குறைப்புக்கு மத்தியில் தங்களது ஊதியங்களை குறைத்துக்கொண்டு சிஇஓ-க்களுடன் ஒப்பிட்டு சுந்தர் பிச்சையை விமர்சனம் செய்கின்றன.

கூகுள் நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட பல சலுகைகள் நிறுத்தப்பட்டது தொடர்பான மீம்களில் இன்டர்னல் பிளாட்ஃபார்ம்களில் பகிரப்பட்டு வருகிறது. அறியாதோர்களுக்கு லேப்டாப் ரீபிளேஸ்மென்ட் (Laptops replacements), மைக்ரோ கிச்சன்களை மூடுதல் (Shutting down Micro kitchens), ஃபிட்னஸ் வகுப்புகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் கூகுள் ஈடுபட்டுள்ளது.

இந்த இடத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆல்பாபெட்டில் உள்ள மற்ற நிர்வாகிகளை விடவும் சுந்தர் பிச்சைக்கு கொடுக்கப்பட்ட சம்பளமே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆல்பாபெட்டின் தலைமை வணிக அதிகாரியான பிலிப் ஷிண்ட்லர் மற்றும் கூகுளின் நாலேஜ் மற்றும் இன்ஃபர்மேஷனின் மூத்த துணைத் தலைவரான பிரபாகர் ராகவன் ஆகிய இருவரும் சுமார் 37 மில்லியன் டாலர்களை சம்பளமாக பெற்றுள்ளனர்.

12,000 பணிநீக்கங்களுக்கு வழிவகுத்த நிபந்தனைகளுக்கு "முழு பொறுப்பையும்" தானே ஏற்றுக்கொள்வதாகவும், மூத்த துணைத் தலைவர்கள் தங்கள் போனஸில் கணிசமான குறைப்புகளை பெறுவதாகவும், தனது போனஸை கைவிடுவதாகவும் சுந்தர் பிச்சை கூறியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல, 70 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை (Stocks) திரும்ப வாங்கவும் (Repurchase ) கூகுள் திட்டமிட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையும் கூட கூகுள் பணியாளர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையெல்லாம் பொருட்படுத்தும் அளவிற்கு சுந்தர் பிச்சை ஃப்ரீயாக இருக்கிறரா என்று கேட்டால் - நிச்சயம் இல்லை. கூகுள் ஊழியர்களின் மீம்ஸ்களை விட ஏஐ (AI) தான் அவரின் மண்டைக்குள் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கும். ஏஐ வழியிலான சாத்தியமான ஆபத்துகள் குறித்து விவாதிக்க்கும் ஒரு வெள்ளை மாளிகை கூட்டத்திற்கு சுந்தர் பிச்சை அழைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட சந்திப்பில் மைக்ரோசாப்ட்டின் சிஇஓ-வான சத்யா நாதெல்லா (Satya Nadella), ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வான சாம் ஆல்ட்மேன் உள்ளிட்டவர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பிடன் (Joe Biden) மற்றும் துணைத் தலைவரான கமலா ஹாரிஸ் (Kamala Harris) உடன் நடக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Employees Circulate Memes Against Sundar Pichai For His 226 Million Salary After Layoffs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X