1 மணிநேர வேலை.. ரூ.1.2 கோடி சம்பளம்.. சுந்தர் பிச்சைக்கே டஃப் கொடுக்கும் Google ஊழியர்.. அப்படி என்ன வேலை?
ஞாயிற்றுக்கிழமைனு கூட பார்க்காம.. மாசத்துல ஒரு நாள் கூட லீவு போடலாம.. வருஷம் முழுக்க வேலை பார்த்தும் கூட.. சில ஆயிரங்களை மட்டுமே சேமிக்க முடிந்த.. பல்லாயிரக்கணக்கான வெகுஜன மக்களில் நீங்களும் ஒருவர் என்றால்.. இந்த கட்டுரை உங்களை கடுப்பேற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன!
ஃபார்ச்சூனின் சமீபத்திய அறிக்கை ஒன்றிப்படி, கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் இளம் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்துவிட்டு, ஆண்டுக்கு 150,000 அமெரிக்க டாலர்களை.. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1.2 கோடி சம்பளம் வாங்குகிறாராம்!

1.2 கோடி ருபாய் சம்பளம் மட்டுமல்ல டெவோன் (Devon) என்கிற புனைப்பெயரை கொண்டுள்ள இந்த கூகுள் ஊழியருக்கு லாக்-இன் போனஸும் (Sign-in Bonus) கிடைத்துள்ளதாம். மேலும் இவர் இந்த ஆண்டுக்கான இயர்-எண்ட் ரிவார்ட்டை (Year-end Reward) எதிர்பார்ப்பதாகவும் ஃபார்ச்சூனின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்நேரத்திற்கு.. "1 மணி நேரத்திற்கு இவளவு சம்பளம் வாங்கும் அளவிற்கு டெவோன் அப்படி என்ன சேலை செய்கிறார்?" என்கிற கேள்வி உங்களுக்கும் எழுந்திருக்கும். டெவோனின் கூற்றுப்படி, கூகுளின் டூல்ஸ் மற்றும் ப்ரொடெக்ட்களுக்கான கோட்டிங்-ஐ எழுதுவது (Writing code for Google's tools and products) இவரது வேலை.
தினமும் 1 மணி நேரம் மட்டுமே வேலை பார்த்தால்.. உங்கள் மேலாளரிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அல்லது குறிப்புகளை நீங்கள் தவறவிட மாட்டீர்களா என்று கேட்டபோது, எப்போதாவது அப்படி நடந்தால், "இது உலகின் முடிவு அல்ல - நான் இன்றிரவுக்கு பிறகு அதை திரும்ப பெறுவேன்" என்று டெவோன் கூலாக கூறியுள்ளார்.
இதெப்படி சாத்தியம் என்று அவரே விளக்கம் அளிக்கும்போது, ஒவ்வொரு வாரமும், ஒரு பணியின் குறிப்பிடத்தக்க பகுதியை தனது மேலாளரிடம் கொடுப்பதற்கு முன்பே கோடிங் செய்து விடுவாராம். அவரை பொறுத்தவரை, இந்த அணுகுமுறை வாரம் முழுவதும் ஒரு மென்மையான வொர்க்ஃப்ளோவிற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
முன்னதாக கூகுள் நிறுவனத்தின் இன்டெர்ன் ஆக இருந்த டெவோன், கூகுள் நிறுவனத்தில் ஒரு பணியிடத்தை பெற்ற பிறகு, அதற்காக அதிக வேலைகள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்பதை அறிந்திருந்தார். இது வேலை செய்வதை தவிர்ப்பதற்கான ஒரு தந்திரம் அல்ல; அவரது செயல்திறனை குறைத்து மதிப்பிடாமல் இருப்பதற்கான ஒரு உணர்வுபூர்வமான எண்ணம் என்பது போல் தெரிகிறது
அவரது பயிற்சி காலத்தின் போது, அவர் தனது அனைத்து கோடிங் பணிகளையும் திட்டமிடலுக்கு முன்னதாகவே முடித்து, ஹவாய்க்கு ஒரு வார காலத்திற்கு பயணம் சென்றாராம். "நான் நீண்ட நேரம் வேலை செய்ய விரும்பினால், நான் ஒரு தொடக்கத்தில் இருப்பேன்," என்று அவர் பார்ச்சூனிடம் கூறியுள்ளார்.
"பெரும்பாலான மக்கள் வொர்க்-லைஃப் பேலன்ஸ் மற்றும் கூடுதல் பலன்களின் காரணமாக கூகுளை தேர்வு செய்கிறார்கள். நீங்கள் ஆப்பிளில் வேலை செய்யலாம், ஆனால் ஆப்பிள் நிறுவனம் அதன் மென்பொருள் பொறியாளர்களின் மீது ஃபேன் அப்பீலை கொண்டுள்ளது; அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால் கூகுளில், பெரும்பாலானவர்களுக்கு தாங்கள் செய்வது வெறுமனே ஒரு வேலை என்பது நன்றாகத் தெரியும்" என்றும் டெவோன் கூறியுள்ளார்.
தான் மட்டுமல்ல, கூகுள் நிறுவனத்தின் பல மென்பொருள் பொறியாளர்களும் ஒப்பீட்டளவில் குறைந்த பணிச்சுமையை தான் பெறுகிறோம் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வார்கள் என்றும் டெவோன் கூறுகிறார். ஃபார்ச்சூனின் கூற்றுப்படி 97 சதவீத கூகுள் பணியாளர்கள் கூகுள் நிறுவனத்தை ஒரு சிறந்த பணியிடமாக கருதுகின்றனர்.
ஒரு பொதுவான அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரியும் 57 சதவீத பணியாளர்களும் கூட இதையே தான் உணர்கிறார்கள். அறியாதோர்களுக்கு கூகுள் நிறுவனம் அதன் வினோதமான வளாகங்கள், காம்ப்ளிமென்டரி உணவுகள் மற்றும் போட்டித்தன்மைமிக்க ஊதியங்கள் உள்ளிட்ட சலுகைகளுக்கு மிகவும் புகழ்பெற்றது.


Click it and Unblock the Notifications








