அதிர்ச்சி : செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி தளங்கள், ஏலியன்களா..?!

|

குருட்டுத்தனமான நம்பிக்கைகளும், ஆதாரங்களும் மிக விரைவில் காணாமல் போய்விடும். அதே போல் ஒரு 'நல்ல' ஆதாரம் கிடைத்து விட்டால், அந்த ஆதாரத்தை தேடியவர்களின் நம்பிக்கை இரட்டிப்பாகும் என்பது தான் நிதர்சனம்.

அப்படியாகத்தான், சமீபத்தில் வெளியாகியுள்ள 'கூகுள் எர்த்' புகைப்பட ஆதாரம் ஒன்று, ஏலியன் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் மற்றும் யூஎஃப்ஓ எனப்படும் பறக்கும் தட்டுகள் சார்ந்த அன்னிய நாகரீகம் (alien civilisation) என்பதின் மீதான நம்பிக்கையையும், வியூகத்தையும் அதிகப்படுத்தி உள்ளது.

வீடியோ :

வீடியோ :

சமீபத்தில் யூட்யூப்பில் கூகுள் எர்த் மேப் (Google Erath Map) சார்ந்த வீடியோ ஒன்று வெளியானது.

செயற்கைகோள் :

செயற்கைகோள் :

அந்த வீடியோவில் செயற்கைகோள் உதவியுடன் செவ்வாய் கிரகமானது மிகவும் ஆழ்ந்த முறையில் 'ஸூம்' (Zoom) செய்யப்பட்டு காட்டப்படுகிறது.

குறிப்பிட்ட பகுதி :

குறிப்பிட்ட பகுதி :

அவ்வாறாக 'ஸூம்' செய்து பார்க்கும் போது, செவ்வாய் கிரகத்தின் குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி தளங்கள் (underground bases) காணப்படுகிறது.

நிலத்தடி தளங்கள் :

நிலத்தடி தளங்கள் :

மேலும் செவ்வாய் கிரகத்தின் அந்த நிலத்தடி தளங்கள் பாதியளவு புதையுண்டு கிடப்பது போல் காட்சி அளிக்கிறது.

மறைக்கப்பட்டது :

மறைக்கப்பட்டது :

அந்த நிலத்தடி தளங்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டது போன்றும், கண்டுப்பிடிக்கப்பட கூடாது என்பது போன்றும் காட்சியளிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏலியன் ஆர்வலர்கள்கள் :

ஏலியன் ஆர்வலர்கள்கள் :

இதன் மூலம் தொடர்ச்சியான மற்றும் தீவிரமான ஏலியன் ஆதாரங்களை தேடி வந்த ஏலியன் ஆர்வலர்கள்கள் (alien enthusiasts), கோள்களின் மேற்பரப்பில் வேற்று கிரக நாகரீகம் நிகழ்ந்துள்ளது என்பதற்க்கான மற்றொரு ஆதாரமாக இதை காண்கின்றனர்.

நாசா :

நாசா :

சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் ஆய்வில் ஈடுபடும் நாசாவின் 'ரோவர்' அனுப்பிய புகைப்படம் ஒன்றும் ஏலியன் நாகரீகத்தை சாத்தியப்படுத்தும் வண்ணம் இருந்தது.

டூம் வடிவம் :

டூம் வடிவம் :

அந்த புகைப்படத்தில் மார்மான 'டூம் வடிவம்' (Doom Structure), அதாவது 'குவிந்த வடிவத்தில் உள்ள மண்டபம்' ஒன்று பதிவாகி இருந்தது.

முகம் போன்ற வடிவம்:

முகம் போன்ற வடிவம்:

அதை தொடர்ந்து பிரமிட் வடிவ பாறையின் ஒரு பக்கத்தில் முகம் போன்ற வடிவம் செதுக்கப்பட்டு இருப்பது போன்ற மற்றொரு புகைப்படமும் செவ்வாய் கிரகத்தில் கிடைக்கப்பட்டதாக வெளியானது.

யூஎஃப்ஓ டெய்லி :

யூஎஃப்ஓ டெய்லி :

அதையெல்லாம் தொடர்ந்து யூஎஃப்ஓ சைட்டிங்ஸ் டெய்லி (UFO Sightings Daily) என்ற வலைத்தளம் ஒன்று கூகுள் எர்த் சார்ந்த இந்த யூட்யூப் வீடியோவை வெளியிட்டுள்ளது.

நுழைவு முனை :

நுழைவு முனை :

வீடியோவில் தெரியும் நிலத்தடி தளங்கள் பறக்கும் தட்டுகள் உள்ளே சென்று வெளியேறுவதற்கான ஒரு நுழைவு முனைகளை தெரிகிறது என்று அந்த வீடியோவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அலைச்சல் :

அலைச்சல் :

மேலும், இதன்மூலம் பூமி கிரக வாசிகள் செவ்வாய் கிரகத்தில் வாழ சரியான இடத்தை தேட வேண்டிய அலைச்சல் இல்லை, ஏற்கனவே இங்கு வாழலாம் என்று ஏலியன்கள் நிரூபித்து விட்டது என்றும் அந்த வீடியோ தெரிவிக்கிறது.

கைவிடப்பட்ட இடம் :

கைவிடப்பட்ட இடம் :

அது மட்டுமின்றி செவ்வாய் கிரகத்தின் நிலத்தடி தளங்கள் கைவிடப்பட்ட இடம் போன்றும் புதிய உரிமையாளர்களின் வருகைக்காக காத்திருப்பது போன்று தெரிவதாகவும் அந்த வீடியோவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வீடியோ :

செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி தளங்கள், ஏலியன்களா..?!

திரைகள் :

திரைகள் :

மேலும் இந்த வீடியோவில் கூகுள் ஏர்த மேப் இயற்கைக்கு மாறான திரைகள் தெரிகிறது என்ற குற்றச்சாட்டும் ஒருபக்கம் எழுந்த வண்ணம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரெசெல்யூஷன் :

ரெசெல்யூஷன் :

இந்த வீடியோவில் இடம் பெரும் நிலத்தடி தளங்கள்களின் மேல் பக்கம், கீழ் பக்கதோடு ஒப்பிடும் போது நல்ல இருட்டாகவும், அதிக ரெசெல்யூஷன் கொண்டதாகவும் இருப்பது ஏன் என்று ஆராய்ச்சியாளர் மார்சேலோ இரசுஸ்டா (Marcelo Irazusta) கேள்வி எழுப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏ..." data-gal-src="tamil.gizbot.com/img/600x100/img/2015/12/16-1450247902-25-1440512417-aliens1.jpg">
மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>ஏலியன்கள் : 'மறைக்கப்படும்' உண்மைகள்..!</strong>ஏலியன்கள் : 'மறைக்கப்படும்' உண்மைகள்..!

<strong>நாசா நடத்தும் ஏலியன் வேட்டை..!</strong>நாசா நடத்தும் ஏலியன் வேட்டை..!

<strong>புதிய சர்ச்சை : ஏலியன்கள் அனுப்பிய 'மேசேஜ்கள்'..!</strong>புதிய சர்ச்சை : ஏலியன்கள் அனுப்பிய 'மேசேஜ்கள்'..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Mars images reveal 'underground alien bases' UFO believers claim. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X