கூகுள் அட்டகாசம்: போன் நம்பர் இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ள புதிய வசதி? எப்போது முதல்?

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருக்கிறது. தற்சமயம் இந்நிறுவனம் சார்பில் புதிய தகவல் வெளிவந்துள்ளது.

மின்னஞ்சல் முகவரி கொண்டு அழைப்புகளை

அது என்னவென்றால், ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் டுயோ செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களின் மின்னஞ்சல்
முகவரி கொண்டு அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் இந்த புத்தம் புதிய வசதி டுயோ செயலியில் 'ரீச்சபிள் வித் இமெயில் அட்ரெஸ்' (Reachable with email address) எனும் பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

பூமியில் ஏற்பட அடுத்த நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் இதுதான்! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி!பூமியில் ஏற்பட அடுத்த நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் இதுதான்! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி!

சமீப காலங்களில்

புதிய சேவை வழங்கப்படும் போது, கூகுள் டுயோ செயலில் மொபைல் நம்பர் இன்றி அழைப்புகள் மேற்கொள்ள முடியும், மேலும் இதே சேவை கூகுள் டுயோ வலைதள பதிப்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது என்றும், சமீப காலங்களில் இந்த சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஜியோ நிறுவனத்தின் JioMeet.! எப்போது அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!ஜியோ நிறுவனத்தின் JioMeet.! எப்போது அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

செய்கிறது. ஆனால்

குறிப்பாக கூகுள் டுயோ செயலியில் இந்த அம்சம் செட்டிங்ஸ்-அக்கவுண்ட் பகுதியின் கீழ் பட்டியலிடப்பட்டு இருக்கிறது,மேலும் இந்த அம்சம் மற்ற பயனர்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ள வழி செய்கிறது. ஆனால்
இந்த அம்சம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 புதிய சேவையில்

இதற்குமுன்னதாக கூகுள் டுயோ வலைதள பதிப்பில் இந்த சேவை ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டது. புதிய புதிய சேவையில் மின்னஞ்சல் முகவரி கொண்டே வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். எனினும், மொபைல் நம்பர் லிண்க் செய்யப்படாத அக்கவுண்ட்கள் காண்டாக்ட் பட்டியலில் காண்பிக்கப்படாமல் இருந்தது.

இப்படி தான் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கிறோம்: பில்கேட்ஸ் சொன்ன விளக்கம்!இப்படி தான் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கிறோம்: பில்கேட்ஸ் சொன்ன விளக்கம்!

 வசதி எப்போது வழங்கப்படும்

ஆனால் கூகுள் டுயோ ஆண்ட்ராய்டு தளத்தில் மின்னஞ்சல் முகவரி கொண்டு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள செய்யும் வசதி எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News Source: ndtv.com

Best Mobiles in India

English summary
Google Duo for Android May Ditch the Need for Phone Numbers for Calls: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X