ஜிமெயிலை போல மாறும் கூகுள் டிரைவின் இணைய வெர்சன்.!
கூகுள் டிரைவ் இன்டர்பேஸின் முகப்பு பக்கத்தில் உள்ள சில ஐகான் மற்றும் பட்டன்களை இடமாற்றம் செய்து இணையதளத்தில் பெரும் மாற்றங்களை செய்துள்ளது கூகுள்.
கூகுள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஜிமெயில் பயனர் இடைமுகத்தை (யூசர் இன்டர்பேஸ்) பயனர்களுக்கு வெளியிட துவங்கியுள்ளது. இந்த புதிய அப்டேட்-ல் ஜிமெயிலுக்கான புதிய யூ.ஐ உடன் பல்வேறு சிறப்பம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் கூகுளின் மெட்டீரியல் டிசைன் எலிமெண்ட்களும் அடக்கம். தற்போது இந்த தொழில்நுட்ப நிறுவனம் கூகுள் டிரைவின் மறுவடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இணையதளத்தையும் வெளியிடுகிறது.

ஜிமெயிலை போல முற்றிலும் புதிய அம்சங்களை கொண்டிருக்காமல், கூகுள் டிரைவ் எந்த புதிய வசதியும் இல்லாமல் வடிவமைப்பில் மட்டுமே மாற்றங்களை பெற்றிருக்கிறது. தரும் சேவைகளில் மாற்றங்களை செய்யாமல் பெரும்பாலும் வடிவமைப்பில் மட்டுமே மாற்றங்கள் காணப்படுகிறது.
இந்த புதிய இன்டர்பேஸ் டிரைவ் பயனர்களுக்கு ஊடாட்ட மற்றும் திறமையான அனுபவத்தை தரவும், மசமீபத்தில் மாற்றப்பட்ட ஜிமெயில் போல மற்ற ஜி-தொகுப்புடன் ஒத்திசைந்து போகும் எண்ணத்தை தரும்வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது கூகுள்.

கூகுள் டிரைவ் இன்டர்பேஸின் முகப்பு பக்கத்தில் உள்ள சில ஐகான் மற்றும் பட்டன்களை இடமாற்றம் செய்து இணையதளத்தில் பெரும் மாற்றங்களை செய்துள்ளது கூகுள்.அதனுடன் சில காட்சி மாற்றங்களை செய்து, கூகுள் டிரைவை சற்று வண்ணமயமாக மாற்றியுள்ளது. மாற்றியமைப்பட்ட கூகுள் டிரைவ் பயனர்களுக்கு ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படும் என்றும், வெகுவிரைவில் அனைவரும் ஒட்டுமொத்தமாக கிடைக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.

கூகுள் டிரைவ்-ன் புதிய யூ.ஐ-ல் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என காணலாம்.
1)முகப்பு பக்கத்தின் மேல் இடது மூலையில் இருந்த "Google Drive Text", தற்போது கூகுள் டிரைவ் லோகோவாக மாற்றப்பட்டுள்ளது.
2)ஜி-தொகுப்பில் பயனர்கள் தங்கள் கணக்குகளில் விருப்பப்பட்ட நிறுவன லோகோ சேர்க்க முடியும். முன்னர் மேல் இடது மூலையில் காட்டப்பட்ட இந்த லோகோ, தற்போது மேல் வலது மூலையில் உள்ளது.
3) அமைப்புகள்(செட்டிங்ஸ்) ஐகான் டூல்ஸின் இரண்டாவது வரிசையில் இருந்து முதல் வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளது.
4) உதவி மைய ஐகான் தற்போது முதல் வரிசைக்கு மாற்றப்பட்டு, அமைப்புகள் ஐகானுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.
5) கூகுள் டிரைவின் பின்புலம், சாம்பல் நிறத்திலிருந்து வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
6)புதிய பைல்/போல்டர் பட்டன் வெள்ளைநிறத்தில் மாத்திரை வடிவில் உள்ளது. ஜிமெயிலில் இது கூகுள் நிற + வடிவில் உள்ளது.
7) தலைப்புகளின் எழுத்து வடிவத்தில் எந்த மாற்றங்களும் செய்யவில்லை.
8)பைல்கள் மற்றும் போல்டர்கள் தற்போது வட்டவடிவில் காட்டப்படுகின்றன.


Click it and Unblock the Notifications