Home
News

"அவருக்கு இணை அவரே"- நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!

கூகுள் நிறுவனம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை டூடுலுடன் கொண்டாடுகிறது. இந்த டூடுலை பெங்களூருவைச் சேர்ந்த கலைஞர் நூபூர் ராஜேஷ் சோக்ஸி விளக்கி இருக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாள்

நடிகர் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாள்

அக்டோபர் 1 ஆம் தேதி (இன்று) நடிகர் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த தினமாகும். இதை கூகுள் சிறந்த கிராஃபிக் மூலம் கொண்டாடுகிறது. சிவாஜி கணேசன் அக்டோபர் 1, 1928-ல் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்தார். இவர் வீட்டை விட்டு வெளியேறி நாடகக் குழுவில் இணைந்தார். குழந்தை கதாபாத்திரம், பெண் வேடம் என பல்வேறு கதாபாத்திரத்தை ஏற்று கலக்கினார். டிசம்பர் 1945-ல் 17 ஆம் நூற்றாண்டின் இந்திய அரசர் சிவாஜியின் நாடக சித்தரிப்பு மூலம் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார். இதன்பின் தனது கணேச மூர்த்தி என்ற பெயருடன் சிவாஜி என ஏற்று சிவாஜி கணேசனாக வளம் வரத் தொடங்கினார்.

நடிகர் திலகம்

நடிகர் திலகம்

1952-ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேல் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இன்றளவும் நடிப்பின் முன்னுதாரணம் எனறால் அது அவர் மட்டுமே. இன்றளவும் தமிழ் சினிமாவின் மகுடமாக இருக்கும், 1961-ல் பாசமலர், 1964 ஆம் ஆண்டு நவராத்திரி உள்ளிட்ட பல படங்கள் பட்டியலை நீடிக்கும்.

பல்வேறு விருதுகள்

1960 ஆம் ஆண்டில் சிவாஜி கணேசன் தனது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்திற்காக சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை வென்றார். சர்வதேச விழாவில் சிறந்த நடிகர் என்ற பட்டம் வென்ற முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு படைத்தார். 1955 ஆம் ஆண்டில் பிரான்ஸ், அவருக்கு செவாலியர் ஆஃப் நேஷனல் ஆர்டர் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானரை வாங்கியது. அதேபோல் 1997-ல் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

கூகுள் வெளியிட்ட டூடுல்

கூகுள் வெளியிட்ட டூடுல்

கூகுள் டூடுல் நடிகர் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கிராஃபிக் மூலம் கொண்டாடுகிறது. நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளுக்கு கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மொத்த திரையுலகையுமே பெரிதளவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது என்றே கூறலாம்.

நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வணங்கி இருக்கிறார். அதில் நடிப்புக் கலையின் கொடுமுடி கண்டவர். திரை ரசனையின் பொற்காலம் ஆனவர். மனங்களில் இன்னும் காலம் ஆகாதவர். என்றென்றைக்குமான கலைஞரான சிவாஜி கணேசன். பிறந்த நாளில் வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

பலருக்கும் முன்னோடி இவர்

பலருக்கும் முன்னோடி இவர்

சிவாஜி கணேசன் மிகவும் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ் திரையுலகில் பராசக்தி என்ற திரைப்படத்திந் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். நடிகர் சிவாஜி கணேசன் கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேச தலைவர்கள் கதைகளிலும் புராணக் கதைகளிலும் நடித்திருக்கிறார். இந்த தலைமுறை நடிகர்களுக்கும் முன்னுதாரணம் எடுத்துக்காட்டு என்றால் அது அவர் தான். திரைப்படத்தில் வாய்ப்பு கேட்டு செல்லும் பெரும்பாலானோர் பேசும் வசனம் என்றால் அதில் பிரதானமாக இருப்பது பராசக்தி திரைப்பட நீதிமன்ற வசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனமாக தான் இருக்கும்.

தனித்துவ நடிப்பில் கொடி நாட்டிய சிவாஜி கணேசன்

தனித்துவ நடிப்பில் கொடி நாட்டிய சிவாஜி கணேசன்

தனது தனித்துவ நடிப்பால் கொடி நாட்டிய சிவாஜி கணேசன், ஜூலை 21, 2001 அன்று காலமானார். இவருக்கு பத்ம பூசன், தாதாசாகேப் பால்கே விருது, என்டிஆர் தேசிய விருது, செவாலியர் விருது என பல விருதுகளை பெற்று இருக்கிறார். இவர் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களிலும், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்களிலும், இரண்டு இந்தி திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாள திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். தனித்துவ நடிப்பு, வசனத்தில் இருக்கும் தெளிவான உச்சரிப்பு, கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து அதற்கு தேவையான வெளிப்பாடு என திரையுலகை ஆட்கொண்டவர்.

Best Mobiles in India

English summary
Google Doodle Celebrating Actor Sivaji Ganesan Birthday!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X