புல்லரித்து போன Google.. மலையாள நடிகைக்கு டூடுல் போட்டு மரியாதை.. யார் இந்த பி.கே ரோஸி?
இன்று (பிப்.10) கூகுள் சேர்ச் செய்யும் ஒவ்வொருவருமே பி.கே ரோஸியை காண நேரிடும் - ரோஜாப்பூக்கள் சூழ மெல்லிய புன்னகையுடன் காட்சியளிக்கும் ஒரு கேரளத்து தேவதை! யார் அவர்? கூகுள் நிறுவனம் டூடுல் போட்டு பாராட்டும் வண்ணம், நினைவுகூரும் வண்ணம் இவர் அப்படி என்ன செய்தார்?
உங்களில் பலருக்கும் கூகுள் டூடுல் (Google Doodle) பபற்றிய விளக்கம் தேவைப்படாது என்று நம்புகிறோம்!
அறியாதோர்களுக்கு கூகுள் டூடுல் என்பது ஒரு சிறப்பான தினம் அல்லது சிறப்பான நிகழ்வுகள் அல்லது சிறப்பான சாதனைகளை அல்லது அந்த சாதனைகளை செய்த மனிதர்களை நினைவுகூரும் வகையில், கூகுள் ஹோம் பேஜில் "தற்காலிகமாக" காட்சிப்படுத்தப்படும் ஒரு ஸ்பெஷல் லோகோவாகும்!

அப்படியாக இன்று, அதாவது பிப்ரவரி 10 ஆம் தேதியன்று, கூகுள் ஹோம் பேஜை தன் வசீகரமான முகத்தால், அந்த வசீகரத்தின் பின்னால் உள்ள துணிச்சலால் மேலும் அலங்கரித்துள்ளார் பி.கே ரோஸி!
யார் இந்த பி.கே ரோஸி?
பி.கே ரோஸி (PK Rosy), மலையாள சினிமாவின் முதல் நடிகை (First lead female actor) ஆவார். அவரின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு தான் கூகுள் நிறுவனம் அவருக்கான ஒரு ஸ்பெஷல் டூடுலை உருவாக்கி உள்ளது!
வெறுமனே படத்தில் நடித்ததற்காக Google Doodle-ஆ? இல்லவே இல்லை!
பிப்ரவரி 10, 1903 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் ராஜம்மா என்கிற ஒரு பெண் குழந்தை பிறந்த போது, அவள் பி.கே ரோஸியாக மாறி, பல பெண்களுக்கான ஒரு ஊக்கசக்தியாக மாறுவாள் என்று யாருமே நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள்!
ஏனென்றால் அவர் பிறந்த காலகட்டத்தில் சமூகத்தின் பல வகையான துறைகளில் பெண்களுக்கான இடம் ஒதுக்கப்படவே இல்லை. குறிப்பாக கலைத்துறையில்!
அந்த நேரத்தில் தான் விகதகுமாரன் என்கிற மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரைப்படத்தின் முதல் நடிகை என்கிற பெருமையை பெற்றார் பிகே ரோஸி!
அதன் பின்னர்.. எல்லாமே மாறியது.. தமிழ்நாட்டிற்கு தப்பித்து வந்தார்!
பிகே ரோஸி நடித்த திரைப்படமானது திருவனந்தபுரத்தில் உள்ள கேப்பிடல் திரையரங்கில் திரையிடப்பட்டபோது, ஒரு தலித் பெண் எப்படி நாயர் பெண்ணாக நடிக்கலாம் என்கிற சர்ச்சை வெடித்துள்ளது.
நாயராக நடித்த ஒரே காரணத்திற்காக பிகே ரோஸியின் வீடு, உயர் சாதியினரால் எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின், பிகே ரோஸி தமிழ்நாட்டை நோக்கி வந்த லாரி ஒன்றில் ஏறி தப்பி சென்று, லாரி டிரைவரான கேசவன் பிள்ளையை திருமணம் செய்துகொண்டு, "ராஜம்மாள்" என்கிற பெயரில் தமிழ்நாட்டில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
புல்லரித்து போன Google.. நன்றி... பிகே ரோஸி.. நன்றி!
பல ஆண்டுகளுக்கு பின்னரே மலையாள சினிமா மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பிகே ரோஸியின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்கிற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
அதனால் தான் "நன்றி, பி.கே. ரோஸி, உங்கள் தைரியத்திற்கும், நீங்கள் விட்டுச் சென்ற மரபுக்கும் நன்றி" என்று கூகுள் நிறுவனம் அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளது!


Click it and Unblock the Notifications








