Home
News

தற்கொலைக்கு நோ சான்ஸ்.. Google விடவே விடாது.. மெசேஜ் அனுப்பிடும்!

உலகம் முழுவதும் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் கூகுள் (Google) நிறுவனம் மனநல மருத்துவமனைகள் மற்றும் தற்கொலை தடுப்பு தொண்டு நிறுவனங்கள் உடன் கைகோர்த்து, அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி காட்டியிருக்கிறது. கூகுள் பயன்படுத்தும் யாரேனும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தால், தானாகவே உங்களுக்கு மனநல மருத்துவரிடம் இருந்து மெசேஜ் வந்துவிடும்.

இந்த புதிய திட்டம் எப்படி வேலை செய்யும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். அண்மைகாலமாக தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அற்பமான காரணங்களுக்காக பலர் விலை மதிப்பில்லா உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இதனால் தற்கொலை செய்துகொள்பவர்கள் மட்டுமல்லாமல், அவர்களை நம்பியிருப்போரும் பாதிக்கப்படுகின்றனர்.

தற்கொலைக்கு நோ சான்ஸ்.. Google விடவே விடாது.. மெசேஜ் அனுப்பிடும்!

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை, கடன் தொல்லையால் தற்கொலை, காதல் விவகாரத்தால் தற்கொலை, மனஉளைச்சலால் தற்கொலை, தேர்வு பயத்தால் தற்கொலை என்று நாள்தோறும் வெளியாகும் செய்திகளுக்கு பின்னால், எத்தனை குடும்பங்கள் தவித்துவருகின்றன என்பதை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். ஒருவரின் தற்கொலை அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்றிவிடுகிறது.

இதைத்தடுக்க பல்வேறு திட்டங்களை அரசாங்கங்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் எடுத்துவருகின்றன. இப்போது மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களும் தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளில் களமிறங்கிவிட்டன. அந்த வரிசையில், கூகுள் நிறுவனமும் சிறப்பான ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது. கூகுள் நிறுவனம் தற்கொலை தடுப்பு நிறுவனங்கள் மற்றும் மனநல மருத்துவமனைகள் உடன் கைகோர்த்து, அவற்றின் ஹெல்ப் லைன் நம்பர்களை தற்கொலை செய்துகொள்ள எண்ணும் நபரிடம் கொண்டுசேர்க்கிறது.

அதாவது, நீங்கள் கூகுளில் தற்கொலை தொடர்பான வார்த்தைகளை தேடினால், ஏஐ (AI ) அதை அடையாளம் கண்டுகொள்ளும். உடனேயே உங்களுக்கு அருகில் உள்ள தற்கொலை தடுப்பு நிறுவனங்கள் அல்லது மனநல மருத்துவமனைகளின் ஹெல்ப் லைன் நம்பர்கள் உங்களது திரையில் தோன்ற வைக்கும். நீங்கள் தொடர்ந்து தற்கொலை தொடர்பான வார்த்தைகளை பயன்படுத்தினால், உங்களுக்கு மனநல மருத்துவரிடம் இருந்து மேசேஜ் வந்துவிடும்.

அவர்களிடம் உங்களது கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளலாம் அல்லது ஆறுதல் தேடலாம். உங்களின் தகவலை கூகுள் அவர்களிடம் பகிர்ந்துவிடும். இந்த திட்டம் அமெரிக்காவில் முதல்கட்டமாக தொடக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 988 தற்கொலை தடுப்பு நிறுவனங்கள் உடன் கைகோர்த்துள்ளது. இந்த திட்டம் வரும்காலங்களில் உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில், ஏற்கனவே, பொதுவான லைப்லைன் நம்பர்களை கூகுள் பயனர்களுக்கு காட்டிவருகிறது. இப்போது கூட நீங்கள் தற்கொலை என்று கூகுளில் டைப் செய்தால் லைப்லைன் நம்பர் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை எண்ணங்களை கைவிடுக: வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் கடினமான காலங்களை எதிர்கொள்ள பலர் தயாராக இருப்பதில்லை. நம்மால் எதுவும் செய்ய இயலாதபோதும், நிலைமை கைமீறி செல்லும்போதும், அவமானம்படுத்தப்படும்போதும், தோல்வியடையும்போதும், ஏமாற்றப்படும்போதும் மனதளவில் மிகுந்த பாதிப்புள்ளாக நேரிடுவது வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டுமே. இவை அனைத்தும் காலப்போக்கில் மாறக்கூடியவை.

இதுபோன்ற சூழலில் தற்கொலை செய்துகொள்ளும் மனப்பான்மைக்கு வருவது மட்டுமே நீங்கள் உங்களது வாழ்க்கையில் எடுத்த மிக மிக தவறான முடிவாகும். இதைத் தவிர நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் அவ்வளவு மோசமில்லை. தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், மனநல மருத்துவரையோ, நெருங்கிய நண்பர்களையோ, உறவினர்களையோ அழைத்து பேசுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google display helpline numbers people who search suicide-related texts in google
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X