கடுகளவும் வாய்ப்பில்ல ராஜா: டிரம்பை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டும் Google., இப்போ இதுக்கும் ஆப்பு!

|

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சமூகவலைதள செயலி ப்ளே ஸ்டோரில் இடம் பெறுவதற்கு கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. கடந்த பல மாதங்களாக ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிரம்பின் சமூகவலைதள பயன்பாடு கிடைத்து வந்தாலும், ப்ளே ஸ்டோரில் தற்போதுவரை அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ட்ரூத் சோஷியல் செயலி

ட்ரூத் சோஷியல் செயலி

அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தையில் 40% க்கும் மேல் ஆண்ட்ராய்டு பயனர்கள் இருக்கின்றனர். ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான செயலிகள் அனைத்தும் கூகுள் ப்ளே ஸ்டோரில் தான் அங்கீகாரத்துடன் கிடைக்கும்.

எனவே டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோஷியலுக்கு ப்ளே ஸ்டோரில் அங்கீகாரம் கிடைக்காதது செயலிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அங்கீகரிக்க கூகுள் மறுப்பு

அங்கீகரிக்க கூகுள் மறுப்பு

ட்ரூத் சோஷியல் அறிமுகமானது முதல் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைத்து வருகிறது. ஆனால் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்பிற்கு இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை.

போதுமான உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தாக காரணத்தால் ப்ளே ஸ்டோரில் ட்ரூத் சோஷியல் செயலியை அங்கீகரிக்க கூகுள் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் கலவரம்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் ஜனநாயகக் கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு போன்ற பல்வேறு புகார்கள் இந்த கலவரத்துக்கு காரணமாக முன்வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் டிரம்ப் சமூகவலைதளங்களில் தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக கூறி பல பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டார்.

எலான் மஸ்க் பாராட்டு

எலான் மஸ்க் பாராட்டு

டிரம்ப் பதிவிட்ட பதிவுகள் வன்முறையை தூண்டும்விதமாக இருக்கிறது என அவரது டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் தளங்கள் முழுமையாக முடக்கப்பட்டன.

இதையடுத்து டிரம்ப் தனக்கென ஒரு சமூகவலைதள கணக்கை தொடங்கினார். அதுதான் ட்ரூத் சோஷியல் செயலி. சமீபத்தில் கூட ட்விட்டரை வாங்குவதாக அறிவித்து பிறகு பின்வாங்கிய எலான் மஸ்க் ட்ரூத் சோஷியல் குறித்து பாராட்டி இருந்தார்.

ட்ரூத் சோஷியலுக்கு பெரும் பின்னடைவு

ட்ரூத் சோஷியலுக்கு பெரும் பின்னடைவு

அறிமுகமாகி ஒரு வருட காலமாகியும் டிரம்பின் ட்ரூத் சோஷியல் தளத்திற்கு ப்ளே ஸ்டோரில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

டிரம்பின் யூடியூப் கணக்கை முடக்கிய கூகுள், தற்போது தனது ப்ளே ஸ்டோரிலும் டிரம்பின் ட்ரூத் சோஷியல் ஆப்பிற்கு அங்கீகாரம் வழங்க மறுத்து வருகிறது.

அறிமுகமாகி ஒரு வருடம் ஆகியும் ப்ளே ஸ்டோரில் அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது டிரம்பின் ட்ரூத் சோஷியல் சமூகவலைதளத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது.

40% க்கும் மேல் ஆண்ட்ராய்ட் பயனர்கள்

முன்னதாகவே குறிப்பிட்டது போல் அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தையில் 40%க்கு மேல் ஆண்ட்ராய்ட் பயனர்கள் இருக்கின்றனர்.

ப்ளே ஸ்டோரில் சமூகவலைதள செயலி கிடைக்கவில்லை என்றால் ஆண்ட்ராய்ட் பயனர்கள் அதை அணுகுவது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகும்.

வழிகாட்டுதல்களை மீறுவதாக குற்றச்சாட்டு

வழிகாட்டுதல்களை மீறுவதாக குற்றச்சாட்டு

இதுகுறித்து கூகுள் தெரிவிக்கையில், ட்ரூத் சோஷியல் ஆப்ஸ் பல நிலையான கொள்கைகளை மீறியுள்ளதாக சமூகவலைதள நிறுவனத்திடம் அறிவித்துள்ளோம்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் எந்தவொரு ஆப்ஸ் பயன்பாட்டுக்கு வந்தாலும் எங்கள் சேவை விதிமுறைகளின் நிபந்தனை என்பது மிக கட்டாயம். ஆனால் இந்த சமூகவலைதள பயன்பாடு சில வழிகாட்டுதல்களை மீறுகிறது.. என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரூத் சோஷியல் பதில்

ட்ரூத் சோஷியல் பதில்

கூகுளின் இந்த குற்றச்சாட்டுக்கு டிரம்பின் சமூகவலைதள நிறுவனம் பதிலளித்துள்ளது.

சுதந்திரமான பேச்சுக்கான புகலிடமாக எங்கள் பயன்பாடு இருக்கும் என்ற வாக்குறுதியை உறுதி செய்யும் விதமான அனைத்து கொள்கைகளுக்கும் உடன்படுகிறோம்.

கூகுளின் கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறோம்.

பாலியல் உள்ளடக்கம், கூகுள் அறிவித்துள்ள தடைகள் உள்ளிட்ட பல கொள்கைகளை அதிகமாக மீறும் எங்கள் போட்டியாளர்களின் சில பயன்பாடுகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என ட்ரூத் சோஷியல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் அனுமதி., ப்ளேஸ்டோர் மறுப்பு

ஆப்பிள் அனுமதி., ப்ளேஸ்டோர் மறுப்பு

கடந்த ஏப்ரல் மாதத்தில் டிரம்பின் ட்ரூத் சோஷியல் செயலி தான் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச பயன்பாடாக இருந்தது. இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் அங்கீகாரம் வழங்கப்பட மறுப்பு தெரிவிக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Google Denies to approve Donald Trump's Truth Social App on Play Store

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X